1. நான் எங்கு போகின்றேன், என்ன செய்கின்றேன் என்பதையும் என் சிந்தனைகளையும் யாரும் அறிய மாட்டார்கள் என நினைத்தேன். - கர்த்தர் என்னிடம் என் கண்கள் அவர்களுடைய எல்லா வழிகளின்மேலும் நோக்கமாயிருக்கிறது என்றார். எரே.16:17
2. என்னுடைய குடும்பத்தில் சமாதானமில்லை, சந்தோஷமில்லை, ஏன் என்று எண்ணினேன். - கர்த்தர் என்னிடம் ஆ என் கற்பனைகளைக் கவனித்தாயானால் நலமாயிருக்கும்; அப்பொழுது உன் சமாதானம் நதியைப் போலும், உன் நீதி சமுத்திரத்தின் அலைகளைப் போலும் இருக்கும் என்றார். ஏசாயா 48 :18
3. நம் வயதுக்கேற்ற இச்சைகள் தானே வருகின்றது. இது பாவமாகாது என நினைத்தேன். - கர்த்தர் என்னிடம் பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடி, சுத்த இருதயத்தோடே கர்த்தரைத் தொழுது கொள்ளுகிறவர்களுடனே நீதியையும், விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடையும்படி நாடு என்றார். 11தீமோத்.2:22
4. தங்களுக்கு இஷ்டமான (நகைப்போடகூடாது, ஞானஸ்நானம், வஸ்திரங்கள், ஆராதனைகள், விசுவாசம்) போதனைகள் பிரயோஜனமுள்ளதாக காணப்படுமா? என நினைத்தேன். - கர்த்தர் என்னிடம் இவைகள் மாம்சத்தைப் பேணுகிறதற்கே ஒழிய மற்றொன்றிற்கும் பிரயோஜனப்படாது என்றார். கொலோ.2:23
5. ஒருவருக்கொருவர் பொய்ச் சொல்லுவது பாவ செயல் அல்ல என நினைத்தேன். - கர்த்தர் என்னிடம் ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள். பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும் களைந்து போடு என்றார். கொலோ.3:9
"மனந்திரும்பினவர்கள் கர்த்தரின் பதில்களுக்கு கீழ்ப்படிகிறவர்களாவார்கள்”
ஹெலன் ஷீன், கேரளா.