பாவங்கள்
என் ஜனத்திற்கு அவர்கள் மீறுதலையும், யாக்கோபின் வம்சத்தாருக்கு அவர்கள் பாவங்களையும் தெரிவி. ஏசா.58:1
தேவ கற்பனைகளையும் அவருடைய வார்த்தைகளையும் மீறுவதே பாவம். நம் வாழ்விலும் எப்படியெல்லாம் பாவம் கடந்து வருகின்றது என்பதை குறித்து கடந்த சில மாதங்களாக நாம் சிந்தித்து வருகின்றோம். இம்மாதமும் நாம் நினைக்கின்றபடி ஏன் வாழ முடியவில்லை. நம் தேவனிடத்தில் கேட்கின்றது ஒன்றும் ஏன் கிடைக்கவில்லை. இப்படியான சிந்தனைகளோடிருக்கின்றீர்களா? யோவா.15:7 கூறுகின்றது “நீங்கள் என்னிலும் என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால் நீங்கள் கேட்டுக் கொள்ளுவதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும் என்று.
அன்பானவர்களே நாம் தேவனில் நிலைத்திருக்கின்றோமா. நாம் அவரில் நிலை நிற்க வேண்டுமானால் அவரை ஏற்றுக்கொண்டிருக்க வேண்டுமே. கிறிஸ்தவர்களாகிய நாம் ஒருவேளை கூறலாம் முடங்காமல் சபைகளுக்கும், ஆராதனைகளுக்கும் செல்கின்றோம். வேதம் வாசிக்கின்றோம், ஜெபம் பண்ணுகின்றோம், உபவாசிக்கின்றோம், எங்கெல்லாமோலுள்ள ஊழியங்களுக்கு காணிக்கைகளை அனுப்புகின்றோம். இன்னும் நாங்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளவில்லை என்கிறீர்களோ? இங்கு ஏற்றுக்கொள்ளுதல் என்பது பாவிகளாகிய நமக்காக பலியாகி நம்மை விடுதலையாக்கியுள்ளார் என்பதை அங்கீகரிக்க வேண்டும். இயேசு நமது இரட்சகர் என்பதை மனப்பூர்வமாய் உணர வேண்டும். நம்முடைய பாவங்களிலிருந்தும், நம்முடைய மூதாதையருடைய சாபங்களிலிருந்தும் நம்மை மீட்டு இரட்சித்து, மகா பரிசுத்தமான பரலோகில் செல்லுவதற்கான தகுதியை இலவசமாய் அளிப்பதுதான் கிறிஸ்வின் இரட்சிப்பு என்பது. இயேசுவால் மாத்திரம் தான் இது சாத்தியம் என்றுணர்ந்து அவரை ஏற்றுக்கொள்ளுவது தான் அவரில் நிலைத்திருப்பது. இப்படி நிலைத்திருப்பவர்கள் கிறிஸ்துவின் அன்பு, பொறுமை, மன்னிப்பு, கிருபை, கருணை, மன இரக்கம் இப்படியான சகல சுபாவங்களையும் உடையவராயிருப்பார்கள்.
கிறிஸ்தவர்களாகிய நம்முடைய சுபாவம் எப்படியாயிருக்கின்றது. இயேசுவை போலுள்ளதா? எப்பொழுதும் எல்லாவற்றிலும் அவருடைய சுபாவம் நம்மில் வேண்டுமே இல்லையேல் நாம் மனந்திரும்பி பாவங்களை விட்டு விட்டு இயேசுவை ஏற்றுக்கொள்ள வேண்டுமே யோ. 15:4 . கூறுகிறது என்னில் நிலைத்திருங்கள் நானும் உங்களில் நிலைத்திருப்பேன். கொடியானது திராட்சை செடியில் நிலைத்திராவிட்டால் தானாய் கனி கொடுக்க மாட்டாதது போல நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால் கனி கொடுக்க மாட்டீர்கள். ஒவ்வொரு ஊழியக்காரரையும் கடைசியிலே அவர்களுடைய கனியினாலே அறிவீர்கள் என்றும் எழுதப்பட்டுள்ளது. அதாவது கனி கொடுத்து வாழ வேண்டியது மிகவும் அவசியம். நாம் நற்கனிகளை கொடுக்க வேண்டுமானால் செடியாகிய கிறிஸ்துவில் நிலைத்திருக்க வேண்டும். இப்படி நிலைத்திருந்தால் கனி கொடுத்து வாழ முடியும் இவ்வுலகின் வாழ்விற்கும், நித்திய வாழ்விற்குமாக நாம் கேட்கின்ற யாவையும் பெற்று கொள்ளவும் முடியும்
. யோவா 15 7ல் கேட்கின்ற அனைத்தும் பெற்று கொள்வதற்கு மற்றொரு கற்பனையும் கூட கொடுக்கப்படுகின்றது. அதாவது இங்கு கூறப்படுகின்றது. ஒருவன் என்னிலும் என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருக்க வேண்டும் என்று. கர்த்தருடைய வார்த்தைகள் என்றால் அவை ஜீவனுள்ளதும்,, ஜீவனை கொடுக்கின்றதுமாக இருக்கின்றது. இப்படிப்பட்ட வார்த்தைகள் தான் நம்மில் நிலைத்திருக்க வேண்டும் என்று. கர்த்தருடைய வார்த்தைகள் என்றால் அவை ஜீவனுள்ளதும் ஜீவனை கொடுக்கின்றதுமாக இருக்கின்றது. இப்படிப்பட்ட வார்த்தைகள் தான் நம்மில் நிலைத்திருக்க வேண்டுமென்று கர்த்தர் கூறுகிறார். மனிதர்களை தேற்றுகின்ற மனிதர்களை ஜீவனுக்காக வழி நடத்துகின்ற மனிதரின் பாவங்களைக் குறித்து எச்சரிக்கின்ற வார்த்தைகள் கட்டுகளை அவிழ்கின்ற வார்த்தைகள் சமாதானத்தை அளிக்கின்ற வார்த்தைகள், கட்டப்படுகின்ற வார்த்தைகள், மனந்திரும்ப செய்கின்ற வார்த்தைகள் புது வாழ்வளிக்கின்ற வார்த்தைகள் இப்படியாய் உயிருள்ள வார்த்தைகள் நம்மில் நிலைத்திருக்க வேண்டும். “நீங்கள் கேட்டுக்கொள்ளுகின்றது எதுவோ அது உங்களுக்கு செய்யப்படும் என்று வாசிக்கும் போது அநேகருக்கு சந்தேகம் வரலாம். எப்படி கேட்பது? எதனைக் கேட்பது மறுக்காமல் எதுதான் கிடைக்கும்?
அன்பானவர்களே, இயேசுவில் நிலைத்திருந்து கனி கொடுத்து வாழ விரும்புகின்றவனும் அவருடைய வார்த்தைகளை உள்ளே நிலைநிற்க செய்பவனும் இனி எதைத்தான் கேட்க போகிறான் இவ்விரண்டுமே இவ்வுலகின் பூரணத்தை குறிக்கின்றது. இவ்வுலகில் ஒரு பூரண மனிதனாக என்னப்படுகின்றவன் இனி எதைத்தான் கேட்க வேண்டும் கர்த்தருடைய கிருபையை நம்பி மறுமையின நித்திய வாழ்வு மறுக்கப்படாமல் தனக்கு அளிக்கப்பட வேண்டுமென்று மட்டும் தான் இப்படியாய்க் கேட்டு கொள்ளப்படுகின்ற காரியம் செய்யப்படும் என்ற உறுதியைத்தான் இங்கு தேவன் நமக்காக அளித்திருக்கிறார். ஆகவே நாம் நிலைத்திருக்கின்றது கிறிஸ்துவில் தானா என்பதை நம்முடைய கனிகளின் மூலம் உறுதி செய்து கொள்ளுங்கள். கிறிஸ்தவ அமைப்புகளின் சட்டங்களில் நிலைத்திருந்தால் அது கிறிஸ்துவில் நிலைத்திருப்பது ஆகாது. நற்கனிகளும் கொடுக்க முடியாது. ஏனென்றால் அங்கு பிரிவினைகளும் மார்க்கபேதகங்களும் பொறாமைகளும், வாக்குவாதங்களும் அரசியலும் வேஷங்களும் நிறைந்ததாக காணப்படுகின்றது. கிறிஸ்துவில் நிலைத்திருக்கின்றவர்கள் இவைகளுக்கு புறம்பானவர்கள் ஆவார்கள். தற்பரிசோதனை செய்யுங்கள். கர்த்தருடைய வார்த்தைகள் ஒருவனில் நிலைத்திருந்தாலும் அவனால் மேற்கூறிய அமைப்பில் நிலைத்திருக்க முடியாது.
நம்மை நாமே சிந்தித்து சீர்த்திருத்த கர்த்தர் நமக்காக வாக்குப்பண்ணின மறுமையின் நித்தியவாழ்வை நிச்சயம் பெறுவோம். மனந்திரும்புவோம். பாவத்தை விட்டு விலகுவோம். பரலோகம் சென்றிடுவோம்.
ஷீன் சைரஸ், கேரளா 9447735981