நம் சிந்தனைகளும் - கர்த்தரின் பதில்களும்
1, இவர்கள் நமக்கு இன்ன காரியத்தில் விசுவாச துரோகம் செய்ய மாட்டார்கள் என்று எண்ணினேன்
கர்த்தர் என்னிடம் எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம் போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள் என்றார். 11தெசலோ.2:3
2. பரிசேயர், சதுசேயர் போன்றவர்கள் கூறும் உபதேசத்தை நான் ஆராய்ந்து பார்க்காமலே ஏற்றுக்கொள்ள நினைத்தேன்.
கர்த்தர் என்னிடம் பரிசேயர், சதுசேயர் என்பவர்களின் புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள் என்றர். மத்தேயு 16:6
3. எல்லா மனுஷர் முன்பாகவும் எனக்கு பேர் புகழ் கிடைக்க வேண்டும். என்னுடைய பெயர் எப்பொழுதும் நினைப்பூட்டுதலாக இருக்க வேண்டுமென்று நான் தர்மத்தையும், அதிகமான காணிக்கைகளையும் கொடுக்க விரும்பினேன்
கர்த்தர் என்னிடம் மனுஷர் காணவேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்கள் தர்மத்தைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள் என்றார். மத்தேயு 6:1
4. நான் என் சிநேகிதனையும், சகோதர, சகோதரிகளையும் நம்பினேன்
கர்த்தர் என்னிடம் நீங்கள் அவனவன் தன் தன் சிநேகிதனுக்கு எச்சரிக்கையாயிருங்கள். எந்த சகோதரனையும் நம்பாதிருங்கள் என்றார். (எரே.9:4)
5. நான் ஒரு கிறிஸ்தவனாக எந்த நற்கிரியைகளும் (நற்குணங்கள்) இல்லாமற் போனாலும் பூரண பலனை பெற்றுக் கொள்ளலாம் என நினைத்தேன்
கர்த்தர் என்னிடம் உங்கள் செய்கைகளின் பலனை இழந்து போகாமல் பூரண பலனை பெறும்படிக்கு எச்சரிக்கையாயிருங்கள் என்றார். ||யோ.1:8
மனந்திரும்பினவர்கள் கர்த்தரின் பதில்களுக்குக் கீழ்ப்படிகிறவர்களாவார்கள்
ஹெலன் ஷீன், கேரளா