சத்திய வெளிச்சம் -செப்டம்பர் மாதம் - 2020, - நம் சிந்தனைகளும் - கர்த்தரின் பதில்களும்

நம் சிந்தனைகளும் - கர்த்தரின் பதில்களும்


1. என்னுடைய கிரியைகள் நன்றாக (பரிசுத்தமாக) இல்லாவிட்டாலும் கர்த்தர் தெரிந்து கொண்ட ஆலயத்தில் நான் ஆராதிப்பதையும், ஆலயத்தையும் அவர் விரும்புவார் என்று எண்ணினேன்


கர்த்தர் என்னிடம் நான் தெரிந்து கொண்ட இந்த எருசலேம் நகரத்தையும், என் நாமம் விளங்கும் என்று நான் சொன்ன ஆலயத்தையும் வெறுத்துவிடுவேன் என்றார். 11இராஜா.23:27


2. நான் அதிகமான பட்டங்களைப் பெற்ற ஞானி. ஆகையால் நான் செய்வது எல்லாம் நன்மையாகத் தான் இருக்கும். என்னை உலகம் மதிக்கின்றது. அதுபோன்று கர்த்தரும் மதிப்பார் என நினைத்தேன்.


கர்த்தர் என்னிடம் தங்கள் எண்ணத்தில் ஞானிகளாயிருக்கிற எவர்களையும் அவர் மதிக்க மாட்டார் என்றார். யோபு 37:24


3. விருந்து வீடு, கலியாண வீடு, இப்படிப்பட்ட காரியங்களுக்கு போவதை மட்டும் விரும்பினேன்.


கர்த்தர் என்னிடம் விருந்து வீட்டுக்குப் போவதிலும் துக்கவீட்டுக்குப் போவது நலம் என்றார். பிரசங்சி 7:2


4. துக்கம் கஷ்டம் நெருக்கம் இப்படிப்பட்டவைகள் என் வாழ்க்கையில் வருவதை நான் விரும்பவில்லை.


கர்த்தர் என்னிடம் நகைப்பைப் பார்க்கிலும் துக்கிப்பு நலம். முகதுக்கத்தினாலே இருதயம் சீர்ப்படும் என்றார். பிரசங்கி 7:3


5. துன்மார்க்கமாய் வாழ்கிறவன் நன்றாய் நீடித்திருப்பான் என்று எண்ணினேன்.


கர்த்தர் என்னிடம் துன்மார்க்கனோ நன்றாயிருப்பதில்லை. அவன் தேவனுக்கு முன்பாகப் பயப்படாதிருக்கிறபடியால் நிழலைப்போலிருக்கிற அவனுடைய வாழ்நாள் நீடித்திருப்பதுமில்லை என்றார். பிரசங்கி 8:13


மனந்திரும்பினவர்கள் கர்த்தரின் பதில்களுக்குக் கீழ்ப்படிகிறவர்களாவார்கள்.


ஹெலன் ஷீன், கேரளா