Thought For the Month - August 2020

நம் சிந்தனைகளும் - கர்த்தரின் பதில்களும்


1. எனக்கு விரோதமாக எழும்புகிறவர்கள் அநேகராயிருக்கிறார்களே. நான் என்ன செய்வேன் என நினைத்தேன். -


கர்த்தர் என்னிடம் அவர்கள் சம்பூரணமடைந்து அநேகராயிருந்தாலும் அறுப்புண்டு போவார்கள் என்றார். நாகூம்1:12


2. நாட்களும், காலங்களும் மிக கொடியதாயிருக்கின்றது; ஆனாலும் நான் உணராதவனாகவே வாழ்ந்து வந்தேன் -


கர்த்தர் என்னிடம் நீங்கள் மதியற்றவர்களாயிராமல் கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்து கொள்ளுங்கள் என்றார். எபே.5:17 


3.  வசனத்தை போதிக்கிறவர்களும், கேட்கிறவர்களும் நீதிமான்களா என நினைத்தேன்.


-கர்த்தர் என்னிடம் நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவர்களே நீதிமான்களாக்கப்படுவார்கள் என்றார். ரோமர் 2:13


4. ஆவியினாலே ஆரம்ப ஊழியங்களை தொடங்கினவர்களில் அநேகர் இன்று மாம்சத்திற்காகவே ஊழியம் செய்கிறார்களே இவர்களின் ஊழியங்கள் பிரயோஜனமுள்ளதா? என நினைத்தேன். -


கர்த்தர் என்னிடம் அவைகள் வீணாய்ப்போயிற்றே என்றார். கலாத்தியர் 3:4


5. என் வாழ்க்கையிலே கொடுக்கப்பட்ட இந்த முள் என்னைவிட்டு நீங்க வேண்டும் என்று எண்ணினேன். -


கர்த்தர் என்னிடம் என் கிருபை உனக்குப் போதும் பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். 11கொரி.12:9


மனந்திரும்பினவர்கள் கர்த்தரின் பதில்களுக்குக் கீழ்ப்படிகிறவர்களாவார்கள்.


ஹெலன் ஷீன், கேரளா


பாவங்கள் என் ஜனத்திற்கு அவர்கள் மீறுதலையும் யாக்கோபு வம்சத்தாருக்கு அவர்கள் பாவங்களையும் தெரிவி. ஏசாயா 52:1 தேவனுடைய வார்த்தைக்கு விரோதமாகவும் அவருடைய கட்டளைகளுக்கு விரோதமாகவும் செய்யப்படுவதே பாவம். நம்முடைய வாழ்வில் பாவம் எப்படியெல்லாம் கடந்து வருகின்றது என்பதை குறித்து கடந்த சில மாதங்களாக நாம் சிந்தித்து வருகின்றோம். இம்மாதமும் கிறிஸ்தவர்களாகிய நாம் கிறிஸ்துவை யாராக அங்கீகரிக்கின்றோம் இதில் நாம் எப்படி பாவம் செய்கின்றோம் என்பதைக் குறித்து சிந்திக்கப்போகின்றோம். அன்பானவர்களே, நாமனைவரும் கிறிஸ்தவர்கள் என்ற போர்வையில் தான் வாழ்ந்து வருகின்றோம். கிறிஸ்துவில் அரிய பெரிய செயல்களை பல கண்டவர்களாகவும் அவருக்காக பெரிய ஆலயங்களையும் ஆசரிப்புக் கூடாரங்களையும் கட்டி ஆராதிக்கின்றவர்களாகவும் காணப்படுகின்றோம். கிறிஸ்துவை நாம் யாராக அங்கீகரித்து ஆராதிக்கின்றோம்? அவரை நாம் நம்முடைய வாழ்க்கையில் எதற்காக பயன்படுத்துகின்றோம். இயேசு நாதருடைய செயல்பாடுகளில் நமக்கு தேவையானவற்றை மாத்திரம் அல்லது நமக்கு சாதகமானதை மாத்திரம் பிடித்துக்கொண்டு அவரை ஆராதிக்கின்றோமா, இல்லை அவருடைய செயல்களை கற்பனைகளை முழுமையாய் கடைபிடித்து கொண்டு அவருக்கு ஆராதனை செய்கின்றோமா? அவரை நம் வாழ்வில் எந்த நிலையில் ஏற்றுக்கொண்டுள்ளோம் சிந்தியுங்கள். சற்று கவனியுங்கள். இயேசு உலகத்தில் வந்ததின் நோக்கம் ஒன்று மட்டுமே இந்நாட்களில் அதை தவிர மீதமுள்ள அவருடைய செயல்கள் அனைத்தையுமே உட்கொண்டவர்களாக அவரை ஆராதிக்கின்றனர். உலகபிரகாரமாக ஓரிரு எடுத்துக்காட்டுக்களை நாம் பார்க்கலாம். 1. இயேசு நோயாளிகளை விடுதலையாக்குகின்றார் இந்த செயலை மட்டும் குறிக்கோளாக கொண்டு நடத்தப்படுகின்ற ஆராதனைகளும், ஊழியங்களும் ஏராளம். இப்படிப்பட்டோர்களை தேடி நாடி ஓடி செல்கின்ற விசுவாசிகளும் ஏராளம். தங்கள் நோய்களை குணமாக்க மட்டும் இயேசு போதுமென்றால் நோயே இல்லாத ஒரு நபருக்கு இயேசுவால் என்ன பலன். இந்த ஊழியக்காரர்கள் நோயில்லாதவனுக்கு தேவையில்லையே. அப்படியானால் நோயில்லாத ஒருவன் எப்படி இயேசுவினிடத்தில் வர முடியும் சிந்தியுங்கள். 2. இயேசு கடன்தொல்லை கஷ்டங்களை மாற்றுகிறவர் அநேக ஊழியர்களும், ஊழியங்களும் தங்கள் ஆராதனைகளுக்கு அழைப்பு விடுக்கும் போது நீங்கள் கடன் தொல்லையால் வாடுகின்றீர்களா எங்கள் ஆராதனைக்கு வாருங்கள் இயேசு உங்கள் கடனை தீர்க்கின்றார். இதை நம்பி சென்று தங்கள் வறுமையிலும், எளிமையிலும் இருந்து உள்ளதை எடுத்து சென்று அவ்வூழியரையும் அவருடைய ஊழியத்தையும் தாங்குகின்றனர். இப்படிப்பட்ட எளியவர்களை ஏமாற்றுவதற்காகவே அவ்வூழியர்கள் சில சாட்சிகளையும் ஆயத்தம் செய்து வைத்திருப்பார்கள். இந்த சாட்சிகள் கூறுவார்கள். நான் இந்த ஊழியத்திற்கு ரூபாய்5000/- காணிக்கை கொடுத்தேன். இவர்கள் ஜெபம் பண்ணினார்கள். நான் ரூபாய் 25 லட்சம் மதிப்புள்ள வீட்டைக் கட்டினேன், கார் வாங்கினேன், ஏராளம் பணம் சம்பாதித்தேன் என்றெல்லாம் ஆசை வார்த்தைகளைக் கூறி ஏழைகளை, கடனாளிகளை மயக்குகின்றனர். அன்பானவர்களை இவ்வூழியங்களைக் குறித்து சிந்தியுங்கள். கடனே இல்லாத ஒருவன் இயேசுவினிடத்தில் எதற்காக வர வேண்டும் என்று சிந்திக்கலாமல்லவா? எனக்கு கடன் எதுவுமில்லையே பின்பு நான் எதற்காக கிறிஸ்தவனாக வேண்டும் என்று இவர்கள் கிறிஸ்துவினிடத்தில் வர வேண்டாமா சிந்தியுங்கள். 3. இயேசு பசியாற்றுகின்றவர் (போஜனம் கொடுக்கின்றவர்) ஏதாவது சாப்பாடு கிடைக்கும் என்ற நோக்கத்தோடு ஆராதனைகளுக்கும், கூடுகைகளுக்கும் வருகின்றவர்கள் ஏராளம். இயேசுவின் செய்தி கேட்க வந்தவர்களுக்கு பசித்த போது அவர் பகிர்ந்தளித்தார். மறுநாளிலும் ஏராளமானோர் கூடிவந்தார்களே. இவர்கள் போதனையை கேட்க வரவில்லை. அற்புதத்தை காண வந்தார்கள் என்று அவர் கூறினாரே. இங்கு நாம் பார்க்க வேண்டியது உலகத்தில் மேன்மைான சாப்பாடுள்ள ஒருவன் எனக்கு பசியில்லையே பின்பு நான் எதற்காக கிறிஸ்துவினிடத்தில் வரவேண்டுமென்று கேட்டால் ஊழியக்காரரின் பதில் என்ன சிந்தியுங்கள். இவர்களும் இயேசுவை ஏற்றுக்கொள்ள வேண்டுமே. இப்படி அநேக காரியங்களை நம்மால் பார்க்க முடியும். இவைகளில் ஒன்றும் படாதவர்கள் அநேகர். இவர்களும் இயேசுவை ஏற்றுக் கொண்டு பரலோகம் செல்ல வேண்டுமே. அப்படியானால் இந்த இயேசு யார்? அவரால் நமக்கு என்ன பலன் அடைய முடியும் எல்லாராலும் இயேசுவை அங்கிகரிப்பதற்கு அவரிடத்தில் என்ன விசேஷம் உண்டு என்பதை நாம் அறிந்து உணர வேண்டுமே. அன்பானவர்களே 1தீமோத்தேயு 1:15 கூறுகிறது பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கீகரிப்புக்கும் பாத்திரமானது என்று பரி.பவுல் கூறுகிறார் இங்கு நாம் பார்க்க வேண்டியது உலகத்திலுள்ள எல்லாராலும் கிறிஸ்துவை அங்கீகரிப்பதற்கான ஒரே காரணம் தான் காணப்படுகின்றது. அது அவர் பாவிகளை இரட்சிக்க வந்தார் என்பதே. இதை தவிர அதாவது ஒவ்வொரு மனிதனும் பாவத்தில் வாழ்கின்றான் என்பதை உணர்த்துவதை தவிர மீதமுள்ள எல்லாவற்றையும் இன்று ஊழியங்களாக செய்து வருகின்றனர். இது மிகவும் கவலையளிக்கின்றதே. கிறிஸ்தவர்கள் யாரிடமும் பாவத்தை குறித்த உண்ர்வு காணப்படவில்லையே. எந்த ஊழியக்காரனும் யாருடைய பாவத்தைக் குறித்தும் எச்சரித்துணர்த்துவதில்லையே. எல்லாரும் கிறிஸ்துவை ஏற்று கொள்வதற்கு இது தானே உண்மையும் அங்கீகாரமும் உள்ள வார்த்தை இதனை சொல்ல இந்நாட்களில் ஊழியர்கள் எழும்ப வேண்டுமே. ஏன் எல்லாருடைய பாவத்தைக் குறித்தும் சொல்ல ஊழியக்காரர்கள் தயங்குகின்றனர். ஒருவனுடைய பாவம் எச்சரிக்ப்பட்டால் ஒருவேனை அவன் சபைக்கு வருவதை நிறுத்திவிடுவானோ, வசூல் குறைந்துவிடுமோ என்ற பயத்தினால் பாவங்களை எச்சரியாமல் ஊழியங்களை செய்பவர்களே சிந்தியுங்கள். இப்படிப்பட்ட ஆத்துமாக்களின் கணக்கு உங்களிடம் கேட்கப்படும் நாள் வரும் அது மிகவும் சமீபமாயிருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள். லூக்.5:32ல் நீதிமான்களையல்ல பாவிகளையே மனந்திரும்புவதற்கு அழைக்க வந்தேன் என்று இயேசு தாமே கூறியுள்ளார். மாற்கு 2:17ல் இயேசு பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை. நீதிமான்களையல்ல பாவிகளையே மனந்திரும்புவதற்கு அழைக்க வந்தேன் என்றார். அருமையானவர்களே, ஒருவனுடைய பாவம் உணர்த்தப்படாதவரைக்கும் அவன் பாவி என்பதை உணரமாட்டானே. பாவத்தை உணருகிறவன் மனந்திரும்புவானே இப்படியாய் இயேசுவை பூரணமாக மக்களுக்கு தெரிவிக்க ஏற்ற வார்த்தையை கூறாமலிருப்பது பாவம் என்பதை நாமறிந்துணர வேண்டும். இந்த கொடியதான பாவத்திலிருந்து ஊழியக்காரர்களாகிய நாம் இரட்சிப்படைய வேண்டுமே. அதற்காக நம்மை ஆயத்தப்படுத்துவோம். கர்த்தர் பெலனளிப்பாராக. ஆமென். சகோ. ஷீன் சைரஸ், கேரளா. cell: 09447735981 வெளிச்சம் 18 ஆகஸ்ட்/2020) பெண்கள் பகுதி |கீழ்ப்படியுங்கள் ஜனங்களே சத்தியத்திற்குள் திரும்புங்கள் கர்த்தாவே, உம்முடைய கண்கள் சத்தியத்தை அல்லவோ நோக்குகின்றது. அவர்களை அடிக்கிறீர், ஆனாலும் அவர்களுக்கு நோகாது; அவர்களை நிர்மூலமாக்குகிறீர், ஆனாலும் புத்தியை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்கிறார்கள். தங்கள் முகங்களைக் கன்மலையைப்பார்க்கிலும் கெட்டியாக்கி, திரும்ப மாட்டோம் என்கிறார்கள். ஏரேமியா 5:3 இன்றைக்கு மிகவும் ஒரு இக்கட்டான காலக்கட்டத்தில் நாம் பயத்தோடும், திகிலோடும், வீட்டிலே முடங்கிக்கிடக்கின்ற ஒரு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றேம். நாம் அனைவரும் தேவனுக்குப் பயப்படுவோமோ என்னவோ ஆனால் உலகத்தில் காணப்படுகின்ற கொள்ளை நோய்க்கு பயப்பட்டு உலகத்தின் சட்டத்திட்டங்களுக்குக் கீழ்ப்படிய முயற்சி செய்கின்றோம் என்பது உண்மை . அது மிகவும் தேவையானது தான். ஆனால் நான் தேவனுடைய மிகுந்த உக்கிர கோபத்திற்குள்ளாகியிருக்கின்றோம் என்பதும் உண்மை. ஆகையால் நாம் சத்தியத்திற்குக் கீழ்ப்படிய வேண்டும் என்பதும் தேவனுடைய எதிர்பார்ப்பு. இந்த கொடிய கொள்ளை நோய் எப்படி பரவுகிறது என்பதைக் குறித்து பலர் பலவிதத்தில் வெளிச்சம் 13) சொன்னாலும் அதனுடைய உண்மை தன்மையினை சரியாக அறிந்து கொள்ள முடியவில்லை என்பதும் உண்மை . இன்று அறிவியல் வளர்ச்சியின் முன்னேற்ற பாதையில் உலகம் சென்றுக் கொண்டிருந்தாலும் இந்த கொடிய கொள்ளை நோய்க்கான மருந்தை கண்டுபிடித்தோம் என்று பலர் கூறினாலும் அது நடைமுறைக்கு வர நாட்கள் செல்லும் என்பதாகும். எது எப்படியாக இருந்தாலும் ஜனங்களாகிய நாம் உணர்ந்து கொள்ள வேண்டியது தேவனுடைய கண்கள் சத்தியத்தை தேசத்திலும், திருச்சபையிலும், மற்ற கூடுகையிலும், குடும்பங்களிலும் ஒவ்வொரு தனி மனித வாழ்க்கையிலும் தேடுகின்றார் என்பதே. இன்று வேதம் கூறுவது போன்று நீதியைத் தேடுகிறவனுமில்லை, சத்தியத்தின்படி வழக்காடுகிறவனுமில்லை; மாயையை நம்பி, அபத்தமானதைப் பேசுகிறார்கள்; தீமையைக் கர்ப்பந்தரித்து அக்கிரமத்தைப் பெறுகிறார்கள். (ஏசா.59:4) இப்படியாகவே ஜனங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். சத்தியம்: சத்தியம் என்பது வசனம், வேதம் என்பதாகும். உம்முடைய வசனமே சத்தியம். யோவான் 17:17) இந்தசத்தியத்தைதான் தேவனுடைய கண்கள் நம்மிடத்தில் நோக்கி பார்த்து கொண்டிருக்கின்றது. ஆனால் ஜனங்களுடைய வாழ்க்கையில் சத்தியம் மாயாஜாலமாக மாறிக்கொண்டு வருகின்றது. அதற்கு காரணம் சத்தியத்தை தேடுகின்றவர்களும், போதிக்கின்றவர்களும், உணருகின்றவர்களும் மிகவும் குறைவாக தான் உள்ளனர். அநேகர் நினைப்பது இயேசு அழைக்கிறார், விடுவிக்கின்றார், கிருபையுள்ளவர், மாறாதவர், ஆசீர்வதிக்கின்றவர், அற்புதர், இரக்கமுள்ளவர், அன்புள்ளவர் என்று கூறுவதெல்லாம் சத்தியம் என்று ஆனால் அது ஒருபோதும் ஜனங்களை நல்வழிப்படுத்தும் சத்தியமாகாது என்பது உண்மை . இயேசு நம் ஒவ்வொருவரையும் அழைக்கின்றவராகவும், விடுவிக்கின்றவராகவும், மாறாதவராகவும், கிருபையுள்ளவராகவும், இரக்கமுள்ளவராகவும், கருணையுள்ளவராகவும், அன்புள்ளவராகவும் தான் காணப்படுகின்றார் என்பது உண்மை . ஆனால் இந்த பெயரின் பேரில் கூறப்படுவதெல்லாம் ஒரு ஆத்துமாவை நல்வழிப்படுத்துவதற்காக மட்டும் அல்லாமல் பணத்தை சம்பாதிக்கும் ஒரு வியாபார முறைமையுமேயாகும். இந்த வியாபார முறைமைகளெல்லாம் ஜனங்களை சத்தியத்தை விட்டு வழி விலக செய்கின்றது. வேதம் கூறுகின்றது அவர்கள் பொய்யைப் பிரயோகிக்கத் தங்கள் நாவாகிய வில்லை வளைக்கிறார்கள். அவர்கள் இந்த தேசத்திலே பலத்துக் கொள்ளுவது சத்தியத்திற்காக அல்ல, பொல்லாப்பிலிருந்து பொல்லாப்புக்கு நடந்தேறுகிறார்கள். என்னையோ அறியாதிருக்கிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். (எரே.9:3) இப்படியே தான் அநேக ஊழியங்கள் காணப்படுகின்றது. பின்பு எப்படி இவர்களிடம் தேவன் நோக்கிப் பார்க்கும் சத்தியம் காணப்படும். ஆகவே தான் கர்த்தர் தேசங்கள் அனைத்தையும் இந்நாட்களில் அடித்திருக்கிறார். ஆனாலும் ஜனங்களுக்கும், ஊழியர்களுக்கும் நோகவில்லை, உணரவில்லை என்பதும் உண்மை . அதுமட்டுமல்லாமல் ஜனங்களை நிர்மூலமாக்கிறார். ஆனாலும் சத்தியத்தை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்ற நிலமையில் தான் போய்க்கொண்டிருக்கின்றோம். ஆகவே இந்த கொள்ளை நோய் இந்த மாதத்தில் பூரணமாய்த் தீரும், அடுத்த மாதத்தில் தீரும் என்ற எல்லா எதிர்பார்ப்புகளும் அதமாக்கிற விதத்தில் கொள்ளை நோய்ப் பரவிக் கொண்டிருக்கின்றது. நம் தேவன் அன்புள்ளவர், விடுவிக்கிறவர், இரக்கமுள்ளவர், கருணையுள்ளவர் தான் ஆனால் உன் தேவனாகிய கர்த்தர் பட்சிக்கிற அக்கினி அவர் எரிச்சலுள்ள தேவன். (உபா.424) என்பதையும் நாம் அறிய வேண்டும். நம் வாழ்க்கையில் விடுதலை, சுகம், ஆசீர்வாதம் எல்லாம் தேவையானது தான் ஆனால் நாம் வேதம் கூறுவதுபோன்று இம்மைக்காக மாத்திரம் நாம் கிறிஸ்துவின் மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப் பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம். (1கொரி.15:19) அவ்வாறு நாம் காணப்படாமலிருக்க வேண்டுமானால் சத்தியத்திற்கு கீழ்ப்படிய வேண்டும். சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமலிருந்தால் சத்தியம் நமக்குள் நிலை கொண்டிராது. மனைவியானவள் தங்கள் சொந்த புருஷர்களுக்கு எந்தக் காரியத்திலும் கீழ்ப்படிந்திருக்க வேண்டுமென்பதும் உபதேசம். எபேசி.5:24. புருஷன்மேல் அதிகாரஞ்செலுத்தவும், ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை. அவள் அமைதலாயிருக்க வேண்டும். (1தீமோத்.2:12). அதெப்படியென்றால் புருஷனையுடைய ஸ்திரீ தன் புருஷன் உயிரோடிருக்குமளவும் நியாயப்பிரமாணத்தின்படியே அவனுடைய நிபந்தனைக்கு உட்பட்டிருக்கிறாள் என்பதும் (ரோமர்.7:2) மனைவியானவள் தன் புருஷனை விட்டுப் பிரிந்து போகக்கூடாது என்பதும் (1கொரி.7:10) இப்படிப்பட்ட அநேக சத்தியங்கள் மனைவியானவளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இவைகளில் நாம் நிலைகொண்டிராமலிருந்தால் சத்தியம் நமக்குள் இல்லை என்பதாகும். புருஷர்களைக் குறித்து பார்க்கும் போது புருஷர்கள் கோபமும் தர்க்கமுமில்லாமல் பரிசுத்தமான கைகளை உயர்த்தி எல்லா இடங்களிலேயும் ஜெபம் பண்ண வேண்டுமென்றும் (1தீமோத்.2:8) புருஷர்களே தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்தச் சரீரங்களாகப் பாவித்து, அவர்களில் அன்பு கூரவேண்டும் என்றும் (எபேசியர் 5:28) இப்படிப்பட்ட அநேக சத்தியங்கள் புருஷர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இவைகளில் நாம் நிலைத்திராமலிருந்தால் நமக்குள் சத்தியம் கிடையாது. அதுபோன்று போதகர்களைக் குறித்து பார்க்கும் போது கண்காணியானவன் குற்றஞ்சாட்டப்படாதவனும் ஒரே மனைவியை உடைய புருஷனும் ஜாக்கிரதையுள்ளவனும், தெளிந்தபுத்தியுள்ளவனும், யோக்கியதையுள்ளவனும் அந்நியரை உபசரிக்கிறவனும், போதகசமர்த்தனுமாய் இருக்க வேண்டும். அவன் மதுபானப்பிரியனும், அடிக்கிறவனும், இழிவான ஆதாயத்தை இச்சிக்கிறவனுமாயிராமல், பொறுமையுள்ளவனும், சண்டை பண்ணாதவனும், பண ஆசையில்லாதவனுமாயிருந்து தன் சொந்தக் குடும்பத்தை நன்றாய் நடத்துகிறவனும், தன் பிள்ளைகளைச் சகல நல்லொழுக்கமுள்ளவர்களாக்கி கீழ்ப்படியப் பண்ணுகிறவனுமாயிருக்க வேண்டும். (1தீமோத்.3:2-4) இப்படி காணப்படாத ஊழியர்களிடம் சத்தியம் அவர்கள் வாயில் காணப்படுமா? அப்படிப்பட்ட ஊழியர்களிடம் ஜனங்களாகிய நாம் சத்தியத்தை தேடினால் நமக்கு சத்தியம் கிடைக்குமா? சிந்தியுங்கள். நம்மில் சத்தியம் காணப்பட்டால் மட்டுமே அது மற்றவர்களுக்கு வெளிச்சம் பிரதிபலிக்கின்றதாக காணப்படும். இன்று குடும்பங்கள், சபைகள், தேசங்கள் என்று எங்கு பார்த்தாலும் சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கி வைக்கின்ற மனுஷருடைய கிரியைகளைத் தான் பார்க்க முடிகின்றது. வேதம் கூறுகின்றது சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கி வைக்கிற மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும், அநியாயத்துக்கும் விரோதமாய் தேவ கோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிக்கிறது என்று (ரோமர் 1:18) இன்று இப்படிப்பட்ட செயல்கள் பெருகிக்கொண்டே வரும் இந்நாட்களில் தான் தேவகோபம் வானத்திலிருந்து உலகமெங்கிலும் வெளிப்படுத்தப் பட்டிருக்கின்றது என்ற உண்மையை (சத்தியத்தை இப்பொழுதாவது உணர்ந்தவர்கள் தங்கள் முகங்களைக் கன்மலையைப்பார்க்கிலும் கெட்டியாக்கி திரும்பமாட்டோம் என்று கூறாமல் சத்தியத்தை தேவன் நம்மிடத்தில் தேடுகிறார் என்ற உணர்வோடு எப்பொழுதும் பயந்திருக்கிற மனுஷன் பாக்கியவான். (தன் இருதயத்தைக் கடினப்படுத்துகிறவனோ தீங்கில் விழுவான். நீதி.28:14) என்ற வசனத்திற்கு கீழ்ப்படிவோமானால் நம்மை பாக்கியவான்களாக மாற்றும். சத்தியத்தையும் அறிவீர்கள். சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார். யோ.8:32) அப்படியே சத்தியம் நம்மனைவரையும் இந்த மகா கொள்ளை நோயிலிருந்தும் விடுதலையாக்கும் என்பதையும் அறிவோமாக. தேவன் தாமே கிருபை செய்வாராக. ஆமென். சகோதரி.ஹெலன் ஷீன், கேரளா 09946301633