நம் சிந்தனைகளும் - கர்த்தரின் பதில்களும்
1. நான் இன்றைக்கு இன்ன காரியத்தைச் செய்தால் பின்பு ஒரு நாள் எனக்கு அவன் செய்வான் என்று நினைத்து செய்தேன். -
கர்த்தர் என்னிடம் நன்மை செய்யுங்கள், மைம்மாறு கருதாமல் கடன் கொடுங்கள். அப்பொழுது உங்கள் பலன் மிகுதியாயிருக்கும் என்றார். லூக். 6:35
2. ஏன் இந்த மனுஷன் நீதி நியாயமான காரியத்தையும் எதிர்த்து நிற்கிறான் என நினைத்தேன்.
கர்த்தர் என்னிடம் துஷ்டர் நியாயத்தை அறியார்கள் என்றார். நீதி.28:5
3. வசனத்தை அதிகமாய்க் கேட்கின்றவர்களாக இருக்கின்றவர்கள் நீதிமான்களா? அல்லது பரிசுத்தவான்களா? என நினைத்தேன்.
கர்த்தர் என்னிடம் நியாயப்பிரமாணத்கை கேட்கிறவர்கள் தேவனுக்கு முன்பாக நீதிமான்களல்ல, நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவர்களே நீதிமான்களாக்கப் படுவார்கள் என்றார். ரோமர் 2:13
4. நான் என் அயலான் வீட்டில் அடிக்கடி போவதை அவன் விரும்புவான் என நினைத்தேன்
கர்த்தர் என்னிடம் உன் அயலான் சலித்து உன்னை வெறுக்காதபடிக்கு அடிக்கடி அவன் வீட்டில் கால் வையாதே என்றார். நீதி.25:17
5. இவ்வளவாய் இவன் பொல்லாப்பு செய்தும் நீடித்து வாழ்கின்றானே என நினைத்தேன்
கர்த்தர் என்னிடம் பாவி நூறுதரம் பொல்லாப்பைச் செய்து நீடித்து வாழ்ந்தாலும் என்ன? தேவனுக்கு அஞ்சி அவருக்கு முன்பாகப் பயந்திருப்பவர்களே நன்றாயிருப்பார்கள் என்றார். பிரசங்கி 8:12
மனந்திரும்பினவர்கள் கர்த்தரின் பதில்களுக்குக் கீழ்ப்படிகிறவர்களாவார்கள்
ஹெலன் ஷீன், கேரளா