நாசரேத் ஜெப ஐக்கியம் - சனிக்கிழமை உபவாச ஜெப நாளின் தேவ செய்தி (02/05/2020)

நாங்களோ உலகத்தின் ஆவியைப் பெறாமல் தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்குத் தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம். அவைகளை நாங்கள் மனுஷஞானம் போதிக்கிற வார்த்தைகளாலே பேசாமல், பரிசுத்த ஆவி போதிக்கிற வார்த்தைகளாலே பேசி, ஆவிக்குரியவைகளை ஆவிக்குரியவைகளோடே சம்பந்தப்படுத்திக் காண்பிக்கிறோம். அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவை களானதால், ஜென்ம சுபாவமான மனுஷனோ அவைகளை அறியமாட்டான். | கொரி.2:12-14.


THOUGHT  FOR  SPIRITUAL  UNDERSTANDING


     இன்று உலகிலே சர்வசாதாரணமாக காணப்படும் ஊழியர்கள், போதகர்கள் பெரும்பாலோர் தேவனுடைய வார்த்தைகளை அதன் ஆவிக்குரிய உட்க்கருத்துக்களோடு அறிந்திடாததினால், அவர்கள் தேவனைப் பற்றிய விபரங்களையும், அவருடைய ஆசீர்வாதமான வார்த்தைகளையும் அவருடைய அற்புதங்களையும் மட்டுமே உருக உருக பேசுகின்றவர்களாயிருக்கின்றார்கள். ஆனால் கர்த்தருடைய இரகசியம் அவருக்குப் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது. அவர்களுக்கு தம்முடைய உடன்படிக்கையைத் தெரியப்படுத்துவார். சங்கீதம் 25:14


(They knew facts but they had no excitement for the Scriptures Or For the Lord;


The key for the understanding the Bible is not Education but Obedience


(வேதாகம வார்த்தைகளைப் பற்றி அறிந்திடுவது, கற்பதினால் அல்ல, வேதாகம வார்த்தைகளுக்கு கீழ்ப்படிவதினாலேயே)


உம்முடைய கண்களில் இப்பொழுது எனக்கு கிருபை கிடைத்ததானால் நான் உம்மை அறிவதற்கும், உம்முடைய கண்களில் எனக்கு கிருபை கிடைப்பதற்கும் உம்முடைய வழியை எனக்கு அறிவியும்." யாத்.33:13 


மோசேயின்  ஜெபம்   (When he was 90 years old)


you can know about God, Or you can know God


To know about God is to know His works


To know God intimately is to know His ways


தாவீதின் ஜெபம்


கர்த்தாவே உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும். உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும். சங்கீதம் 25:4


Moses asks to know God intimately


But all Israelits knew the works of God but - not the ways of God


அவர் தமது வழிகளை மோசேக்கும், தமது கி7ரியைகளை (அற்புதங்களை) இஸ்ரவேல் புத்திரருக்கும் தெரியப்பண்ணினார். சங்கீதம் 103:


     இந்த (Lockdown) அடைக்கப்பட்ட நாட்களிலும் சனிக்கிழமை தோறும் நாசரேத் ஜெப ஐக்கியத்தில் நடைபெற்று வரும் உபவாச ஜெப வேளையின் போது விசேஷித்த தேவ செய்திகள் (Video Conference) காணொளி மூலம் அளிக்கப்பட்டு வருகின்றது. ஆவலுள்ள சகோதரர்கள் பலர் தங்களை இணைத்துக் கொண்டு பங்கேற்று ஆவிக்குரிய நன்மைகளை அடைந்து வருகின்றார்கள்.


02.05.2020ஆம் நாளன்று அளிக்கப்பட்ட தேவசெய்தியின் சுருக்கம் இப்பொழுது யாவருக்கும் அறிவிக்கப்படுகின்றது


இயேசு அவளைப் பார்த்து: ஸ்திரீயே, ஏன் அழுகிறாய் யாரைத் தேடுகிறாய் என்றார். யோவான் 20:15


       ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்து அடக்கம்பண்ணப்பட்டபின், இயேசு கிறிஸ்துவினால் நன்மைபெற்ற மகதலேனா மரியாள் ஆண்டவர் மீது அன்பு கொண்டவளாக, அற்புதம் பெற்றதினால் நன்றி கடமை உணர்வோடு அதிகாலையிலே ஆண்டவருடைய மரித்த சடலத்தை தேடி கல்லறைக்கு வருகின்றாள். அவள் கடந்த இரண்டு நாட்களாக அதிகமாக பிரயாசப்பட்டு பணம் செலவழித்து ஆண்டவரின் மரித்த சடலத்திற்கு செய்ய வேண்டிய பொருட்களையும் ஆயத்தம் செய்து வருகின்றாள். இது அவளுடைய பக்தியை மட்டுமே வெளிப்படுத்துகிறது. (She was so religious) மிகுந்த பயபக்தியுள்ளவளாக, ஒரு சடலத்தை மட்டுமே தேடி வருகின்றாள். கல்லறையின் கல் அகற்றப்பட்டிருப்பதை கண்டு ஆச்சரியப்பட்டு வேகமாக சடலத்தை காண விரும்புகிறாள். சடலம் கல்லறையில் இல்லை யென்பதை அறிந்தவுடனே மிகுந்த பதற்றம் அடைந்தவளாக அழுகின்றாள். அவள் இன்னும் ஆவிக்குரிய ஸ்தானத்தை அடையவில்லை (She was not spiritual, so far) அவளுக்கு எப்படியாவது ஆண்டவரின் மரித்த உடலை காணவேண்டும். கண்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்று மரித்த உடலுக்கு செய்ய வேண்டியவற்றை செய்ய துடிக்கின்றாள். அப்பணியை செய்து முடிக்காவிட்டால் ஆண்டவருக்கு ஏதோ துரோகம் செய்துவிட்டது போன்று பரவசமடைகின்றாள். கல்லறைக்குள்ளே தைரியமாய் சென்று, அங்கே வெள்ளுடை தரித்து காணப்பட்ட தேவதூதர்களையும் அவர்கள் தேவதூதர்கள் என்று கூட அவளால் அறிந்துணரமுடியவில்லை. அவர்களிடமே அழுதுகொண்டு இயேசுவின் சடலம் எங்கே? யார் எடுத்துக் கொண்டு போனார்கள் என்று கேட்கின்றாள். அவளுக்குப் பின்னாக இயேசுகிறிஸ்து நிற்கின்றதையும் அவளால் உணரமுடியவில்லை. அவரை அவள் தோட்டக்காரர் என்று எண்ணினவளாய் அவர்தான் சடலத்தையும் எடுத்து மறைத்து வைத்திருக்க வேண்டும் என்று எண்ணி, அவரை வைத்த இடத்தை தனக்கு காண்பியுங்கள் தான் போய் அதனை எடுத்துக் கொள்ளுகிறேன் என்று கெஞ்சிக் கேட்கின்றான்.


     அருமையானவர்களே, உலகமெங்கிலும் இந்த பக்தியே எங்கும் காணப்பட்டு வருகின்றது. இதனை கிறிஸ்தவ பக்தி என்றும் அழைத்து வருகின்றோம். இந்த பக்தியே இன்று எங்கும் மேலோங்கி நிற்கின்றது. ஆலயத்திற்கு அடுத்த காரியங்களில் மிகவும் தீவிரமாய் காணப்படுகின்றார்கள். ஆலயம் அசுசிபட, தீட்டுபட சம்மதிக்கவே மாட்டார்கள். வேர்வை சிந்த அதிக தியாக மனப்பான்மையோடு ஆலய சடங்காச்சாரங்களில் ஈடுபடுகின்றார்கள். செய்யப்படவேண்டிய சடங்காச்சாரங்கள் என்று அவர்களாகவே பலவற்றை ஏற்படுத்திக்கொள்கின்றார்கள் அல்லது தங்கள் மூதாதையர்களெல்லாரும் இப்படித்தான் செய்வார்கள் என்றும் அடித்துக் கூறுவார்கள். அடக்க ஆராதனைக்கு ஒரு மனிதனின் சடலம் ஆலயத்திற்கு கொண்டுவரப்படும் போது இப்படி இப்படி நடக்க வேண்டும் என்று அநேக வழிமுறைமைகளையும் கடைபிடிப்பார்கள். மீறப்படும் போது அதனைக் கண்டு, கோபமாய் திருத்திக்கொள்ள எச்சரிக்கை செய்கின்றவர்களாயும் காணப்படுவார்கள். மீறினால் தெய்வக்குற்றமாகும் என்பதே அவர்கள் எண்ணம் அல்லது சாபமாகிவிடும் என்றும் அநேகர் பயந்தும் விடுவர். ஆலயத்தின் பிரதான சந்நிதானத்திற்கு மிகுந்த மரியாதை செலுத்துகின்றவர்களாய் காணப்படுவார்கள். மீறினால் தெய்வகுற்றமாகிவிடும் என்றும் தங்களிலே பயப்படுகின்றவர்களாய் காணப்படுவார்கள்.


     இவ்விதமான பக்தியே மகதெலான மரியாளிடம் காணப்பட்டது. அவளுக்கு வேண்டியது செத்த உயிரற்ற சடலம் மாத்திரமே. அதற்கு தன்னுடைய சடங்குகளை தடையின்றி செய்து முடித்திட வேண்டும். இது உயிருள்ள ஆண்டவரை சேவிக்கும் பக்தியல்ல. உயிரற்ற சடலத்தை சேவிக்கும் பக்தி மட்டுமே. நம் ஆண்டவர் இந்த பக்தியை அனுமதிக்கின்றவர் அல்லவே அல்ல. ஆகவே தான் அங்கே மரித்த சடலம் இல்லை. உயிரோடிருக்கிறவரை மரித்தோரிடத்தில் தேடுகிறதென்ன? லூக்கா 25:5 ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை எவராலும் கடத்தி கொண்டு சென்றுவிடக்கூடாதே. நம் இருதயத்தினுள் இருக்கும் ஆண்டவரை எவராலும் பறித்திடக் கூடுமோ? மரியாள் எண்ணினாள். சடலம் எவர்களாலும் எளிதில் கடத்தி கொண்டு சென்றுவிடகூடியது என்றும் அதனாலேயே அவருடைய சடலம் அகற்றப்பட்டுள்ளது என்று எண்ணினாள். நம் தேவனை எவர்களாலும் நம்மைவிட்டு பிரித்திடக்கூடுமோ? கூடாதே மாற்றி மாற்றி இடம் மாறி வைக்கப்படும் இடம்மாறும் ஆண்டவரையா நாம் பின்பற்றுகிறோம்? இல்லையே. களவாய் கொண்டு போகப்படும் ஆண்டவரையா நாம் தேவனாக கொண்டுள்ளோம்? இல்லையே. ஆலயத்திலுள்ள காணிக்கை பணம் திருடப்படலாம். ஆலய பிரதான ஸ்தலத்திலுள்ள சிலுவை கூட திருடப்படலாம். இவைகளையா நாம் சேவிக்கின்றோம்? ஆலய அசனத்தில் உழைக்காவிட்டால் தெய்வகுற்றமாகுமோ? இவ்வாறான பக்தி ஆவிக்குரிய பக்தியல்லவே. இது கிறிஸ்தவ பக்தி மட்டுமே ஆகும். இந்த கிறிஸ்தவ பக்தியே மரியாளிடம் காணப்பட்டது. இது மட்டுமல்ல, ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவிடமே மரியாள் கேட்கின்றாள். மாம்ச கிறிஸ்தவளாகிய மரியாளுக்கு இயேசு கிறிஸ்துவின் சத்தத்தை எப்படி அறிந்திடக்கூடும்? அறிந்திடமுடியவில்லையே. அவரை தோட்டக்காரர் என்று எண்ணி ஆண்டவரின் சடலத்தை தன்னிடம் கொடுக்கவும் அதனை அவள் பாரமாயிருந்தாலும் தானே சுமந்து கொண்டு செல்லவும் கேட்கின்றாள். நாம் சேவிக்கும் நம் ஆண்டவர் நாம் பாரமான சுமை எதனையும் சுமக்க அனுமதிப்பதில்லையே. அவரே நம் பாரமான பாவங்களையெல்லாம் தன்னிலே சுமந்து ஏற்றுள்ளாரே. வருத்தப்பட்டு பாரம் சுமக்கின்றவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்று தானே அவர் கூறியுள்ளார். இன்று கிறிஸ்தவ பக்தியிலே பாரமான பணிகளை செய்வதே ஆவிக்குரிய பக்தி என்று தவறாய் அறிந்துள்ளார்கள்.


     ஆனாலும் விடாபிடியாய் ஆண்டவரை உண்மையாய் மரியாள் தேடுகின்றாள். அவளுடைய பக்தி வெறும் சடங்காச்சாரமாய் போய்விடக்கூடாது  என்று ஆண்டவர்தாமே அறிந்து, அவளை இன்னும் செத்த உடலுக்கான ஈம கர்ம காரியங்களிலேயே இருந்து விடக்கூடாது என்றும்,  அவளை இன்னும் அழுகின்றவளாகவும் அனுப்பிவிட விரும்பாமல் அவள் கண்ணீரை துடைத்தவராக அவளுக்குப் பின்னாக நின்று அவள் பெயரைக் கூப்பிட்டு அழைக்கின்றார். தன் பெயர் உச்சரிக்கப்பட்டதும் அவளுடைய ஆவிக்குரிய கண்கள் திறக்கப்பட்டது. போதகரே என்று அவருடைய கூப்பிடுதலுக்கும் பதிலுரைத்தாள். ஏசாயா 30:21யில் கூறப்பட்ட வாக்குத்தத்தமாவது, "நீங்கள் வலது புறமாய்ச் சாயும் போதும் இடதுபுறமாய்ச் சாயும் போதும் வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும்” இங்கே நமது ஆண்டவரும் மரியாளின் பின்னாக நின்று அவளை பெயர் சொல்லி அழைக்கின்றார். தேவன் அவளை ஆவிக்குரியவளாக ஏற்று தன்னை உயிரோடிருக்கிறவராக முதலாவதாக அவளிடம் தன்னைக் காண்பித்து, தான் உயிர்த்தெழுந்ததையும், இந்த செய்தியை அவருடைய சீஷர்களுக்கும் அறிவிக்கும்படியும் அவளை அனுப்பி வைக்கின்றார். ஆவிக்குரிய பக்தி உள்ளவர்கள் மாத்திரமே தேவனை தரிசிப்பது மட்டுமல்ல தேவசத்தம் அறிவார்கள். பெயர்சொல்லி அழைக்கப்படுவார்கள். தேவ செய்தியையும் சுமந்து செல்பவர்களாகவும் காணப்படுவார்கள்.


             ஆலய சடங்காச்சாரம் மற்றும் கிறிஸ்தவ பக்தி நரகத்திற்கு ஏதுவானதாக இல்லாவிட்டாலும், (Religious activities) மனந்திரும்பி ஆவிக்குரிய வாழ்வினிலே வாழ்ந்திடாதவர்கள் பரலோக ராஜ்யம் செல்வது கூடாதகாரியமே ஆகும். மேலும் மனந்திரும்பின வாழ்விலே நிலைத்திராதவர்களால் இக்காலத்து ஆராதனையில் உற்சாகமாக பங்குக் கொள்ளவும் கூடும் மற்றும் பிறர் பாராட்டும் வகையில் சிறப்பான ஆராதனையினை நடத்திக் காண்பித்திடவும் முடியும். (Worshiping services) அன்னார்களுக்கு அவசியமாய் தேவைப்படுவது ஏதாவது இசைக்கருவிகள் மாத்திரமே. பரிசுத்தாவியின் அபிஷேகத்தால் நிறைந்திருப்பவர்களை போன்று 6 மணி நேரம் மாத்திரமல்ல நாள் முழுவதுமாய் ஆடிப் பாடி ஆராதனையினை அன்னார்களால் நடத்திக் காண்பித்திடவும் முடியும் என்பதே உண்மை. இவ்வகையான ஆராதனைகளில் பங்கு பெறுபவர்களும், இவ்வகையான ஆராதனையினை பாராட்டுபவர்களும் மாம்ச கிறிஸ்தவ பக்தி உள்ளவர்கள் மாத்திரமே.


              இன்னும் கூட நவினமான இந்நாட்களில் யூடிப் கலாச்சாரம் (YouTube)) அதிகமாய் பெருகி வருவதை யாவரும் அறிவர். யூடிப் மூலம் சமையல் கலை, சித்திரக்கலை, இன்னும் அதிகமாக விதவிதமான சிறந்த திறமைகள் உலகத்திற்கு வெளிப்படுத்தி காண்பிக்கப்பட்டு வருகின்றன. இதனையும் யாவரும் அறிவர். இதனை நடத்தி காண்பிக்கின்றவர்களுக்கு அவசியமாய் தேவைப்படுவதும், அவசியமாய் விரும்புவதும் இவைகள் அனைத்திலும் அனேகம் பேரால் இவர்கள் பாராட்டுதல் பெறப்பட வேண்டும் என்பது மட்டுமே. (Subscribing) Or (Like) இந்த வருசையிலே தற்போது ஆராதனைகள் வரத்தொடங்கியுள்ளன. இவற்றினை அதிகமாக  மனந்திரும்பாத மாம்ச கிறிஸ்தவர்களே, ஊழியர்களே நடத்த விரும்பி பெருகி வருகின்றார்கள். இவற்றினால் இவர்களின் பெயர்கள் கின்னஸ் புத்தகம் வரைக்கு்ம் (Guinness World Record) பதிப்பிக்கப்பட்டுவிடலாம். இவர்கள் எதிர் பார்ப்பது மிகுதியான ஒப்புதல்கள் மாத்திரமே. (Subscribing) Or (Like) இவ்வகையான பக்தியிலிருந்தும் ஆவிக்குரிய வாழ்வில் வளர்கின்றவர்கள் தப்பித்துக் கொள்ளப்பட வேண்டுமே.


     இந்த மரியாளின் ஆவிக்குரிய அனுபவம் ஆவிக்குரியவர்களின் ஆரம்பகால அனுபவம் மட்டுமே. அவர்களை இன்னும் மேன்மையான ஆவிக்குரிய அனுபவங்களைச் அடையச் செய்வதே தேவனுடைய பிரதானமான நோக்கமாகும். ஆண்டவர் சிலுவையில் மரித்து தம் இரத்தத்தை சிந்தினது, ஆவிக்குரிய ஆரம்பம் மட்டுமே. ஆண்டவரின் இரத்த வெள்ளத்தில் இப்பூமி கோள் (Planet) முழுவதுமாய் மூழ்கி நனைந்து குளித்துள்ளது. அவருடைய இரத்தம் இப்பூமியில் வாழும் சகல ஜனங்களின் பாவங்களையும் மன்னிக்கும்படியாகவே ஊற்றப்பட்டுள்ளது. இது இவர்களுக்கானது என்று எவர்களும் தனிமைப்படுத்தப்படலாகாது. இதனை அறிந்து உணர்ந்து, ஏற்றுக்கொண்ட கிறிஸ்தவ மக்களும், ஊழியர்களும் உலகம் தங்களுக்கே உரியது, சபை தங்களுக்கே உரியது. தாங்களே இவ்வுலகின் ஆவிக்குரிய தலைவர்கள். தங்களுக்கே சபை மக்கள் கட்டப்பட்டு நடக்க வேண்டும் என்று எண்ணுவதும் உலகமே தஞ்சம் என்றும் உலக பொருட்களையும் ஆஸ்தியையும் சம்பாதிப்பதையே தலைமையாக கொண்டு உலகின் சகல மேன்மைகளையும், பதவிகளையும், அதிகாரங்களையும் கைப்பற்றுவதே தங்களின் நோக்கம் என்று எண்ணி வாழ்பவர்கள் எவர்களாயினும் மடமையர்களே ஆவர்.


     ஆண்டவரின் இரத்தம் பூமியிலே எதற்காக சிந்தப்பட்டது என்றால் அனைத்து ஜனங்களும் பாவங்கற கழுவப்பட்டு ஆண்டவரைப் போன்று பரிசுத்தவான்களாய் மாற வேண்டும் என்பது மட்டுமே தேவனுடைய சித்தமும் நோக்கமும் ஆகும். பரிசுத்தமில்லாமல் ஒருவரும் அவரை தரிசிக்க முடியாதே. அசுத்தர்கள் பாவங்கற கழுவப்படாதவர்கள் எவரும் நித்திய ஜீவனை பரலோக வாழ்வை அடைந்திடக்கூடாதே. தேவன் தம்முடைய இரத்தத்தினால் நம்மை கிரயமாய் அவருக்கென்று மீட்டிருக்கிறார். நாம் அவருக்கே சொந்தம், நம் உடல், சரீரம் ஆவியாவும் அவருக்கே உரியது. இதனை நாம் நமக்காக தவறுதலாய் பயன்படுத்தக்கூடாதே. (1கொரி.6:20)


     இந்த செய்தியைத்தான், இயேசு கிறிஸ்து இப்பூமியிலே பிறக்கின்ற போது ஆசாரியனான சகரியா கூறுகின்றார் லூக்.1:69 நம்முடைய பிதாக்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணின இரக்கம், பாவமன்னிப்பு, இரட்சிப்பினை செய்வதற்கே இயேசு கிறிஸ்து பிறந்துள்ளார். ஆகையினால் இஸ்ரவேலின் தேவன் ஸ்தோத்தரிக்கப்படுவாராக என்று பாடுகின்றார். இந்த மீட்பின் செய்தியினை, வாக்குத்தத்தத்தை அன்று எருசலேமிலே, பெத்லகேமிலே உள்ள ஜனங்கள் எல்லாரும் அறியவில்லையே. இராஜாவாகிய ஏரோதும் அறியவில்லை. இயேசுவின் பெற்றோர், சில மேய்ப்பர்கள், சாஸ்திரிகள் இவர்கள் மாத்திரமே இந்த நற்செய்தியை கண்டு விசுவாசித்து ஏற்றுள்ளார்கள். ஆனால் எருசலேம் நகரமெங்கிலும் அழுகையும், மரணமும் ஏரோது இராஜாவினால் ஏற்படுத்தப்பட்டதே. சகல எல்லைகளிலும் உள்ள இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண்பிள்ளைகளையும் ஏரோது கொலை செய்தானே. எங்கும் கொரோனா (Covid-19) சாவாக மரண ஓலம் கேட்கப்பட்டதே. ஆனால், மரியாள் யோசேப்போ, தேவ தூதனால் எச்சரிக்கை செய்யப்பட்டு கொரோனாவின் அழிவுக்கு தப்பித்துக் கொண்டார்களே. அதுபோன்று இந்நாட்களில் தேவன் தாமே தம் ஆவிக்குரிய பிள்ளைகளை இயேசு கிறிஸ்துவின் பிள்ளைகளை காத்துக் கொள்கின்றார். அவரை ஏற்றுக்கொண்டவர்கள் அனைவருக்கும் இரட்சிப்பு மீட்பு சொந்தமாக்கப்பட்டுள்ளது. நம் குடும்பத்திலே இயேசு கிறிஸ்து பிறந்துள்ளார். அவர் நம்முடனே என்றும் இருக்கின்றவராய் இருக்கின்றார். இயேசு கிறிஸ்துவின் குடும்பத்தினரை ஏரோது அளித்த சாவின் கட்டளை, அழிவு ஆட்க்கொள்ள முடிய வில்லையே, அது போன்றே தேவனே இக்கோரோனா நாட்களில் நமக்குப் பக்கத் துணையாயிருக்கிறார். அவர் நம்மை பாதுகாப்பான அவருடைய செட்டைகளுக் குள்ளே வைத்திருக்கின்றார்.  தேவ தூதனே அன்று யோசேப்பை சில காலம் ஏரோதுக்கு தப்புவிக்க நாசரேத்துக்கு அனுப்பச் செய்தாரே. அதுபோன்றே தேவன் நம்மனைவரையும் இக்கொரோனாவின் கைக்கு தப்புவிக்கச் செய்ய அவர் உண்மையுள்ளவராய் நம்மோடு என்றும் எப்போதும் இருக்கின்றார். அவர்தாமே இந்த (Lockdown) நாட்களில் அவரை உண்மையாய் இன்னும் அதிகமாய் அறிந்திட நமக்கு கிருபை செய்வாராக. ஆமென்.


நாசரேத் ஜெப ஐக்கியத்தினரின் சனிக்கிழமை உபவாச ஜெப தேவ செய்திகள்                                                                                                                                       தொடரும்..........


சகோ. பிலிப் ஜெயசிங்


நாசரேத் ஜெபஐக்கியம்,    நாசரேத்.