நம் சிந்தனைகளும் - கர்த்தரின் பதில்களும்
1. கர்த்தர் நம்முடைய ஆராதனைகளையும், பண்டிகைகளையும் விரும்புகின்றார் என நினைத்தேன். - கர்த்தர் என்னிடம் உங்கள் பண்டிகைகளைப் பகைத்து வெறுக்கிறேன்; உங்கள் ஆசரிப்பு நாட்களில் எனக்குப் பிரியமில்லை என்றார். ஆமோ .5:21
2. என் சகோதரனுக்கு அவன் குற்றத்தை உணர்த்தியும் செவி கொடுக்கவில்லையே என நினைத்தேன். - கர்த்தர் என்னிடம் அவன் உனக்கு அஞ்ஞானியைப் போலவும் ஆயக்காரனைப் போலவும் இருப்பானாக என்றார். மத்தேயு 18:17
3. என்னையும், என் குடும்பத்தையும் நிந்திக்கிறார்களே என வருத்தப்பட்டேன். - கர்த்தர் என்னிடம் உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம் பண்ணுங்கள் என்றார். லூக்.6:28
4. தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால்; அவனைத் தேவன் கெடுப்பார் என்ற வசனத்தைக் குறித்துசொல்லப்பட்டது நாம் ஆராதிக்கின்ற சபையைக் குறித்து என நினைத்தேன். - கர்த்தர் என்னிடம் நீங்களே அந்த ஆலயம் என்றார். 1கொரி.3:17
5. இன்றைக்கு தேவனுடைய ஆலய வளர்ச்சிக்கு என்று புதிய புதிய உத்திகளை கையாண்டு பணம் சம்பாதிப்பதற்காக விற்கிறவர்களாகவும் கொள்ளுகிறவர்களாகவும் காணப்படுகிறார்களே என நினைத்தேன். - கர்த்தர் என்னிடம் என்னுடைய வீடு எல்லா ஜனங்களுக்கும் ஜெபவீடு எனப்படும் என்று எழுதியிருக்கவில்லையா? நீங்களோ அதை கள்ளர் குகையாக்கினீர்கள் என்றார். மாற்கு 11:17
மனந்திரும்பினவர்கள் கர்த்தரின் பதில்களுக்குக் கீழ்ப்படிகிறவர்களாவார்கள்.
Sis. ஹெலன் ஷீன், Kerala