நாசரேத் ஜெப ஐக்கியம்
நாசரேத், தூத்துக்குடி மாவட்டம்
கொரோனா பீதியில் வீட்டில் அடைபட்டு வரும் சகோதர சகோதரிகளுக்கு நாசரேத் ஜெப ஐக்கியத்திலிருந்து அளிக்கப்பட்டு வருகின்ற செய்திகளாக இந்த லெந்து நாட்களில் அளிக்கின்றோம்
மனுஷகுமாரனுடைய நாட்களிலொன்றைக் காணவேண்டுமென்று வரும். ஆனாலும் அதைக் காணமாட்டீர்கள். (லூக்.17:22) பூமியின் எதிர்பார்த்திருக்கிறதினால் மனுஷருடைய இருதயம் சோர்ந்து போம்
ராஜாவின் கோபம் சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமானம், அவனுடைய தயை புல்லின் மேல் பெய்யும் பனி போலிருக்கும். நீதி.19:12
. அருமையானவர்களே, தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் எக்காலத்திலும் எதற்கும் பயப்படத் தேவையே இல்லை. கொரோனாவின் பீதி கெர்ச்சிக்கிற சிங்கம் போல காணப்படலாம். இப்பீதி ஆண்டவராலேயே பிறப்பிக்கப்பட்டது என்று பலர் கூறுவதினால் உங்கள் மனம் தள்ளாடலாம். கொரோனா சிங்கமாக வந்துள்ளது என்றும் பலர் சிங்கத்திற்கு பலியாகிவிடக் கூடுமோ என்றும் பயப்படலாம். ஆனால் தவறான செய்தியே. நீதி.19:12யிலே நாம் வாசிக்கின்ற செய்தி ஆண்டவரின் கோபம் என்று அறியப்படலாகாது இது ஆண்டவர் நமக்கு அளித்திருக்கும் வாக்குத்தத்தமே ஆமென். பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம் போல எவனை விழுங்கலாமோ என்று வகை தேடிச் சுற்றித் திரிகின்றான் என்றும் 1பேதுரு 5:8யில் வாசிப்பதினால் நாம் பயப்படுகின்றோமோ? அவசியமே இல்லை. இந்த சிங்கம் கட்டப்பட்டிருக்கும் சிங்கம் மாத்திரமே. இதனால் கெர்ச்சிக்க மட்டுமே கூடும். ஆனாலும் அவசியமில்லாமல் நாம் பயந்து விடுகின்றோமே. இந்த சாத்தான் தானே நம்மிடத்தில் ராஜர் தேவன்) கோபமாயிருந்து கொரோனாவை அனுப்பியுள்ளார் என்று ஒரு தவறான செய்தியை நம் உள்ளத்திலே அளித்து நம் யாவரையும் பயமுறுத்தி வருகின்றான். நம் தேவன் கோபம் அடைந்தது உண்மைதான். ஆனால் நியாயமற்ற முறையில் அல்ல. ஆதாம், ஏவாளுக்கு தேவன் தம்முடைய உன்னதமான உன்னதமான வாழ்வைத்தான் அளித்திருந்தார் எந்த குறைவும் இல்லாத செழிப்பான வளத்தையே கொடுத்திருந்தார். தேவனும் அவர்களோடு தினமும் உலாவுகிறவருமாயும் இருந்தார். ஆனால் ஆதிமக்களோ தேவனுக்கு கீழ்ப்படியாமல் தங்களைத் தாங்களே சாத்தானுக்கு அடிமையாக ஒப்புக்கொடுத்து விட்டார்கள். ஆண்டவராகிய தேவனும் உடன்தானே கோபம் கொள்ளவில்லையே. வழக்கம் போல மாலையில் அவர்களை தேடி வந்தாரே. இது எத்தனையான அன்பு. தம்மை நேசித்து தேடி வந்த தேவனுக்கு முன்பாக வந்து நடந்தவற்றை கூறியிருக்கலாமே. ஆனால் அவர்களோ ஓடி ஒளிந்து கொண்டார்களே. பாவங்களினால் உருவான நிர்வாணத்தை மறைக்க தாங்களாகவே ஒரு கிரியையை செய்து தங்களை திருப்திபடுத்திக் கொண்டார்களே. ஆண்டவர்தாமே நேரடியாக வந்து விசாரித்த போது தங்களை தாழ்த்தினவர்களாய் தாங்கள் செய்த தவறுக்காய் மன்னிப்பு கோரியிருக்கலாமே. ஆனால், மாறாக பிறர் மீது பழியைக் கூறி தங்களை நியாயப்படுத்தி கூறியதினாலேயே தேவனுடைய கோபம் வெளிப்பட்டு அன்னார்கள் ஏதேனை விட்டு விரட்டப்பட்டார்கள்.
இதே நிலைதான் இந்நாட்களில் ஆண்டவரின் சித்தத்திற்கும் விருப்பத்திற்கும் விரோதமாய் வாழ்ந்து, ஊழியங்களையும் செய்து தங்களைத் தாங்களே நியாயப்படுத்தி பேசுகின்றவர்கள் மேல் வரயிருக்கும் தேவனுடைய கோபம் நியாயமானதே என்று அறியப்பட்டாலும், தேவனுடைய தயை, அன்பு, இரக்கம் யாவுமே அவர் தாமே தன்னைத்தானே பாவநிவாரணபலியாக நம் அனைவருடைய பாவங்களுக்காக சிலுவையிலே ஏற்படுத்தப்பட்ட குற்றமில்லாத தம் இரத்தத்தை தமக்காக சிந்தினதினாலே நமக்கு கிருபையாய் மன்னிப்பு, மீட்பு கிடைக்கின்றது. இந்த அன்பு புல்லின்மேல் தினமும் அதிகாலையில் பெய்யும் பனிக்கு ஒப்பாயிருக்கிறது. அதனால் அவருடைய கோபம் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் சாத்தானோ, நாடகமாடி தேவனின் கோபம் என்று சிங்கம் போல அநேக மரணபயங்களை நமக்கு அளித்து, தேவன் அளித்துள்ள தயவினை மறைத்து விடுகின்றான். நாமும் தேவனுடைய தயவை காணக்கூடாமல் விசுவாசிக்கக்கூடாமல் போய் விடுகின்றோம். ஆனாலும் கொரோனா ஒரு போதும் சிங்கமாகாது. ஆண்டவரின் தியாகத்தினால் ஏற்படுத்தப்பட்ட தயவு மன்னிப்பு பனியைப் போன்றது. அது தினமும் தேவை. நேற்றைய பனியை இன்று காணமுடியாதே. கீழ்ப்படியாதவர்கள் பனிபோன்ற தேவ அன்பை அனுபவிக்கக்கூடாதே.
ஆகையினால் நம் தேவனையே தினமும் நோக்கிப் பார்த்தவர்களாக நம் ஜீவகாலத்தை ஓடச் செய்ய வேண்டுமே. ஏசாயா எவ்வளவுதான் பரிசுத்தமான தீர்க்கத்தரிசியாக இருந்தாலும், ராஜாக்களெல்லாம் அவனுக்கு பயப்படுகிறவர்களாக காணப்பட்டாலும் அவன் தனக்கு நேரிட்ட இக்கட்டின் நாட்களிலே தேவனை நோக்கிப்பார்த்தான். (Look up) அங்கே பரலோகிலே சேராபீன்கள் தூதர்கள் ஆண்டவரை பரிசுத்தர், பரிசுத்தர் என்று ஆராதித்துக் கொண்டிருந்தவர்களோடு தன்னையும் இணைத்துக் கொண்டான் இதுவே உண்மையான ஆராதனையாகும்.
இந்த பரிசுத்த ஆராதனை தனக்குள்ளே உள்ளதை காணச் செய்தது (Look in) பரிசுத்த ஆராதனையின் போது தன் உள்ளத்தை கண்ட போது தான் அசுத்த உதடுள்ளவன் என்றும் தான் அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கின்றவன் என்று தன்னை தாழ்த்துகின்றதை ஏசாயா 6யில் வாசிக்கின்றோம். இன்று ஊழியர்கள் விசுவாசிகள் இவ்வளவாய் தங்களைத் தாழ்த்தி ஒருபோதும் ஜெபிப்பதில்லையே. காரணம் உண்மையான பரலோக ஆராதனையில் இதுவரையிலும் தாங்கள் பங்கு பெற்றதில்லையென்பதே உண்மை. மாறாக நாங்கள் ஆண்டவரை நன்றாக ஆராதித்துள்ளேன், நான் ஆராதனையை சிறப்பாக நடத்தினேன் என்று கூறுபவர்களே இக்காலத்தில் பெருகி வருகின்றார்கள். இவ்வாரான பாவ அறிக்கையினாலேயே தேவனிடமிருந்து சில உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன. சேராபீன்கள் நடைப்பித்த ஆராதனை நிறுத்தப்படுகின்றது தேவன் கட்டளையிட்டபடிக்கு பரலோகிலிருந்து தேவ அக்கினி தழலை எடுத்து வர அழைக்கப்படுகின்றார்கள். ஆனால் அவர்களால் தேவ தூதர்களால்) தேவ அக்கினியை தங்கள் கைகளினால் கூடக் தொடக்கூடாமல் தங்கள் கையிலே ஒரு குறட்டால் தேவ அக்கினி தழலை எடுத்து ஏசாவின் வாயையும் உதட்டையும் தொடுகின்றார்கள். பாவ அறிக்கை செய்த ஏசாவினால் தூதர்களின் கைகளினாலே தொடக்கூடாததேவ அக்கினியை தொட முடிகின்றது. அதனால் அவன் அக்கிரமம் நீங்கி பாவம் நிவிர்த்தியானது. தேவனுக்கேற்ற பரிசுத்தம் அவனுக்குள்ளே உண்டாயிற்று.
இப்பொழுது தானே யாரை நான் அனுப்புவேன். (Look out) யார் நமது காரியமாய் போவான் என்று உரைக்கிற ஆண்டவருடைய சத்தம் ஏசாவுக்கு கேட்கப்பட்டதும் உடன் தானே இதோ அடியேன் இருக்கிறேன் என்னை அனுப்பும் என்று தன்னை அர்ப்பணிக்கின்றார். இப்பொழுது தானே ஏசாயா புறப்பட்டு தேவன் கூறும் வார்த்தைகளையே தேவசெய்திகளாக எங்கும் ஏசாயா அறிவிக்க புறப்படுகின்றார். அவர் அதிகமான எச்சரிப்பின் செய்திகளையே கூறிவருகின்றார். ஒரு செழிப்பின் செய்தியினையும் அறிவிக்கவில்லையே. இதனால் கிளைகளாக காணப்பட்ட சகல ஆவிக்குரிய போலிகளும் அழிந்து போயின. எஞ்சியுள்ள அடி மரமே பரிசுத்த வித்தாக மாற்றமடைந்தது. இதுவே தேவன் விரும்பும் எழுப்புதலாகும்.
இதனையே நாம் இந்நாட்களில் பின்பற்றிடுவோமாக. ராஜாவின் கோபத்திற்கு நீங்கலாக தேவனின் தயையான பணியினையே தினமும் புல்லைப் போன்றவர்களாகிய நாம் பெற்றிடுவோமாக. அதனை அடைந்திட தேவனையே என்றும் நோக்கிப் பார்த்திடுவோமாக. பரலோக ஆராதனையிலே பங்கு பெற்றிடுவோமாக. இவ்வாராதனையில் பங்குபெறுபவர்கள் மாத்திரமே தங்கள் உள்ளான வாழ்வைக் காணக்கூடியவர்களாகுவார்கள்.அவர்கள் விரும்பும் தேவ பரிசுத்தம் பரலோகிலிருந்து கட்டளையிடப்படுகின்றது. அவ்வமயம் ஆராதனையும் நிறுத்தப்படுகின்றது. தேவன் நேசிக்கும் பரிசுத்தம் அடைவோர்களே வெளியே சென்று தேவ ஊழியம் செய்ய தகுதியாகின்றார்கள். ஏசாயாவின் பிரசங்கங்களை யூதர்கள் விரும்பவே இல்லை . யாவராலும் மிகவும் அதிகமாகவே பகைக்கவும்பட்டார். அதினாலே தன் பிந்திய நாட்களில் வாளால் அறுக்கப்பட்டு தேவனுக்காக இரத்த சாட்சியாக மரித்தார்.
அருமையானவர்களே, இந்நாட்களில் வீடுகளில் அடைபட்டிருக்கும் போது இத்தன்மையான சுவிசேஷத்திற்கு நம்மை நாமே அர்ப்பணித்து ஜெபித்திடுவோமாக. போலியான ஊழியங்களை அழித்து தேவன்விரும்பும் பரிசுத்தர்களாக மாறிடுவோமாக. ஆண்டவர் தாமே நம்மனைவரையும் மிகவும் அதிகமாய் ஆசீர்வதித்திடுவாராக ஆமென்
சகோ.பிலிப் ஜெயசிங்,
நாசரேத் ஜெப ஐக்கியம், நாசரேத்
தூத்துக்குடி மாவட்டம் (9487547633).