நம் சிந்தனைகளும் - கர்த்தரின் பதில்களும்

               1. கிறிஸ்தவர்களில் பெரும்பாலானோர் வேதத்தை வாசிக்கின்றவர்கள் தானே ஏன் அவர்களால் வேதத்தின் இரகசியத்தை வாசித்து உணர முடியவில்லை என்று எண்ணினேன். - கர்த்தர் என்னிடம் கனநித்திரையின் ஆவியையும், காணாதிருக்கிற கண்களையும், கேளாதிருக்கிற காதுகளையும், தேவன் அவர்களுக்கு கொடுத்தார் என்றார். ரோம. 11:8


     2. இன்று அநேக கிறிஸ்தவர்கள் நாங்கள் தான் சரியான விசுவாசத்தில் இருக்கின்றவர்கள் என்று மேட்டிமையான எண்ணத்தோடு பேசுகிறார்களே என் நினைத்தேன். - கர்த்தர் என்னிடம் நீ விசுவாசத்தினாலே நிற்கிறாய், மேட்டிமை சிந்தையாயிராமல் பயந்திரு என்றார். ரோம. 11:20


         3. எனக்கு செல்வமிருக்கிறது, புகழிருக்கிறது எல்லாமே எனக்கு கீழாக தான் இருக்கிறது, என்னால் எதையுமே செய்ய முடியும் என்று இருதயத்தில் நினைத்தேன் - கர்த்தர் என்னிடம் உன் இருதயத்தின் அகந்தை உன்னை மோசம் போக்குகிறது என்றார். ஒப். 1:3 


.   4 .நான் வேதம் வாசிக்கின்றேன், ஜெபிக்கின்றேன், மற்றவர்களுக்கு போதிக்கின்றேன், இப்படியாக அநேக விதமான ஊழியங்களை நான் செய்வதினால் சுத்தமாயிருக்கிறேன் என்று எண்ணினேன். - கர்த்தர் என்னிடம் போஜனபானபாத்திரங்களின் வெளிபுறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள். உட்புறத்திலோ அவைகள் கொள்ளையினாலும், அநீதத்தினாலும் நிறைந்திருக்கிறது என்றார். மத். 23:25


             5.   சபையில் அநேக விதமான ஊழியங்களையும், பதவிகளையும், வகித்துக் கொண்டு சத்தியத்திற்கு மாறுபாடான (மதுபானம், விபசாரம், பொய், களவு, பகை, போட்டி) காரியங்களை செய்தாலும் கர்த்தர் என்னிடத்தில் பிரியமாய் இருக்கிறார் என நினைத்தேன். - கர்த்தர் என்னிடம் உனக்கு (இப்படி செய்கிறவர்களுக்கு) நான் எதராளியாயிருக்கிறேன் என்றார். எரே. 21:13.


   "மனந்திரும்பினவர்கள் கர்த்தரின் பதில்களுக்கு கீழ்ப்படிகிறவர்களாவார்கள்”


                                                 ஹெலன் ஷீன், கேரளா.