சத்திய வெளிச்சம்
Volume VIII DECEMBER - 2019 Issue XII
(A monthly magazine for Christian awareness and spiritual growth)
(இது ஒரு மாதாந்திர பத்திரிக்கை. தமிழிலும், மலையாளத்திலும் ஒரே நேரத்தில் பிரசுரமாகிறது)
ஆசிரியர் மடல்......
கிறிஸ்துவுக்குள் அன்பார்ந்த வாசகர்களுக்கு, அருமையான அன்பான வாசகர்கள் அனை வருக்கும் கிறிஸ்மஸ் புத்தாண்டு வாழ்த்து தலைக் கூறிக் கொள்ளுகின்றேன்.
கிறிஸ்மஸ் என்றவுடன் பெத்லகேம் நினைவுகூறப்படுகிறது. சாஸ்திரிகள் அளித்த பொன், தூபவர்க்கம், வெள்ளைப்போளம் போன்ற வெகுமதிகள் ஞாபகம் வருகின்றன. உண்மை தான், பெத்லகேம் இயேசுவின் தந்தையாகிய யோசேப்பின் பூர்விக பட்டணம். எருசலேமுக்கு 6 மைல் தொலையில் உள்ளது. பாலஸ்தீனாவின் பழமையான பட்டணம். இதற்கு எப்பிராத்தா என்ற பெயர் முன்பு இருந்தது. இங்கே தானே யாக்கோபு 20 ஆண்டுகளாக லாபானுக்கு பணிபுரிந்துவிட்டு திரும்பி வந்த இடமும் இதுவேயாகும். இந்த பெத்லகேம் தான் ரூத்தின் மாமனாகிய எலிமலேக்கின் பூர்வீக இடமும் ஆகும். ஆகையால் தான் ரூத் இங்கேயே தன் கணவனாகிய போவாஸை கைபிடிக்கக்கூடியதாயிற்று. போவாஸ் ரூத்தின் இரட்சகர் என்னப்பட்டார். அப்பத்தின் வீடு என்றும் இது அழைக்கப்பட்டது. இயேசு கிறிஸ்துவே, நானே ஜீவ அப்பம் என்று தன்னைத்தானே நமக்காக இரட்சகராக அளிக்கப்பட்டுள்ளார். இக்கிறிஸ்மஸ் நாட்களில் இயேசு கிறிஸ்துவே நமக்கான ஜீவ அப்பமும் நித்திய ஜீவனுமாயிருப்பாராக. (Bread for eternal life) சாஸ்திரிகள் அளித்த பொன் போன்றே இயேசு கிறிஸ்துவே நமக்கான விலையேறப்பெற்ற பொக்கிஷமாயிருப்பாராக. தூபவர்க்கம் போன்றே நாம் அவருக்கான சுகந்த வாசனையான ஆராதனையினை இக்கிறிஸ்மஸ் நாட்களில் அளித்திடுவோமாக. வெள்ளைப்போளம் போன்று அவற்றினாலே நம் யாவரின் ஆத்துமாவையும் ஆண்டவரோடுள்ள உயிர்த்தெழுதலுக்கான ஆயத்தமாகு தலுக்காக சுத்திகரித்திடுவோமாக.
ஒரு போதகர் ஒருவர், தான் அதிகமாய் நேசித்த ஒரு இளம் தம்பதிகளை கிறிஸ்மஸ் தினத்தன்று தன் வீட்டிற்கு ஓர் விசேஷ விருந்திற்கு அழைத்திருந்தார். அந்த தம்பதிகளும் ஆயத்தத்தோடு அன்று அங்கு வருகை தந்திருந்தார்கள். வீட்டிற்குள் நுழையும் போதே விருந்தின் வாசனை எட்டியது. பின்பாக உண்ணும் அறைக்குள் செல்கையில், விதவிதமான விருந்து வகைகள் சமைக்கப்பட்டு மேசையிலே ஆயத்தமாக்கப்பட்டிருந்ததைக் கண்டு வியந்தனர். அவற்றினை யெல்லாம் ஒவ்வொன்றாய் காண்கையில், இவற்றினூடே ஒன்று கடையிலே வாங்கி வைக்கப்பட்ட ஒரு சாதாரண பீஸாவும் காணப்பட்டது. இதனைக் கண்ட தம்பதியார்கள், போதகரே ஏன் இதனை இங்கே வைத்திருக்கின்றீர்கள்? இதற்கு இவ்வகையான விருந்திற்கு அவசியமில்லையே என்றார்களாம். அதற்கு அப்போதகர் கூறிய பதில், அவர் போதகராக பொறுப்பேற்ற முதல் வருட கிறிஸ்மஸ் அன்று அவரது துணைவியார் ஒரு பெரிய வான்கோழியை விசேஷவிதமாய் சத்திய வெளிச்சம் (2) டிசம்பர் 2019 ரோஸ்ட் செய்து கொண்டிருந்தார்களாம். அவ்வமையம் வீட்டின் வாசலிலே அநேகர் வந்து பலவிதமான வெகுமதிகளை அப்போதகருக்கு அளித்தார்களாம். இவற்றினைக் பெற்றுக்கொண்ட போதகரின் துணைவியார், அவற்றினை ஒவ்வொன்றாய் திறந்து கண்டு சந்தோஷித்துக் கொண்டிருக்கும் வேளையில் தங்கள் சமையல் அறையிலிருந்து பெரும் கரும்புகை வந்ததோடு கருகின வாசனையும் வீசியதாம். உடன்தானே ஓடிச்சென்று பார்த்தபோது தான் ஆயத்தம் செய்து கொண்டிருந்த வான்கோழி முற்றிலும் கருகினதாக காணப்பட்டதாம். இதனால் அன்றைய கிறிஸ்மஸ்-க்கு மார்கெட்டில் சென்று மற்றுமொரு வான்கோழி வாங்கி சமையல் செய்யக்கூடாத நேரமும் ஆனதால் அன்று கடைக்குச் சென்று சாதாரண பீஸா ஒன்றை வாங்கி சாப்பிட்டு அன்றைய கிறிஸ்மஸ் தினத்தை கொண்டாடினார்களாம். அதற்கு பின் எல்லா வருட கிறிஸ்மஸ் நாளன்றும் அந்த முதல் நாளினை நினைவு கூர்ந்தவர்களாக ஒரு பீஸாவை உண்ணும் மேஜையிலே ஞாபக சின்னமாக வைத்து வருகின்றார்களாம்.
அருமையானவர்களே, நம்முடைய பண்டிகை கொண்டாட்ட விருந்து, விசேஷங்கள் யாவும் ஓர் நாளில் கருகிவிடும். ஆனால் நம்மை மகிழ்ச்சியாயிருக்கச் செய்யவே இயேசு கிறிஸ்துவானவர் சாதாரண பீஸாவாக, இப்பூமியிலே சாதாரண மனிதனாக, அடிமையாக, சிலுவை பரியந்தம் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்து இரட்சிப்பினை நமக்கு அளித்துள்ளார். இதனையே நாம் இந்த கிறிஸ்மஸ் தினத்தன்று சகல விசேஷ கொண்டாட்டங்களின் மத்தியில் தவறாது ஆண்டவர் அளித்த சிலுவை தியாகத்தினை, இரட்சிப்பினை நினைத்திடுவோமாக.
இக்கிறிஸ்மஸ் நாளன்று கிறிஸ்துவுக்குள் நாம் யாரென்றும் நினைத்திடுவோக:
தேவன் தம்முடைய சாயலாகவே மனுஷனை சிருஷ்டித்தார் ஆதி. 1:26
நம்மை தம்முடைய மணவாட்டியாகவே நியமித்திருக்கிறார் வெளி. 19:9
அவர் நம்மை பரிசுத்த அலங்காரத்துடனே காண விரும்புகின்றார் 1 பேது. 3:4
. நாம் ஒருபோதும் இவ்வுலகிலே தனிமைப்படுத்துவப்படுவதில்லை . மத். 28:20.
அவர் நம்மோடு என்றும் எப்பொழுதும் இருக்கின்றவராகவே இருக்கின்றார். இவ்வுலகில் அனைவரும் ஆண்டவரோடிருக்க அழைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் பக்தியுள்ளவனை மட்டுமே கர்த்தர் தமக்காகத் தெரிந்துக் கொண்டாரென்று அறியுங்கள். சங்.4:3 மத்தியாவை அன்று அப்போஸ்தலர்கள் சீட்டு போட்டு தெரிந்தெடுத்தார்கள். அவரைப் பற்றி எதுவும் வேதத்தில் அறியப்படவில்லை . ஆனால் பரி. பவுலை தேவன் தாமே தமக்காக தெரிந்தெடுத்துள்ளார். அவரே புதிய ஏற்பாட்டின் பெரும்பகுதியை எழுதி முடித்துள்ளார். நாமும் இப்புத்தாண்டிலே ஆண்டவராலே தெரிந்தெடுக்கப் பட்டவர்களாயிருக்க அனுக்கிரகம் செய்வாராக. அவர் இப்புத்தாண்டின் சகல நாட்களிலும் நம்மோடு இருக்கின்றேன் என்றும் வாக்குப் பண்ணியுள்ளாரே. அவர் பெயர் இம்மானுவேல். ஆமென். (மத். 1:23, 28:20)
. ஆசிரியர், பிலிப் ஜெயசிங், சத்திய வெளிச்சம், நாசரேத் ஜெப ஐக்கியம், நாசரேத்