அக்டோபர் மாதம், ஆசிரியர் மடல்

கிறிஸ்துவுக்குள் அன்பார்ந்த சத்திய வெளிச்சம் வாசகர்களுக்கு,


சத்திய வெளிச்சம் வாசகர்கள் அனைவருக்கும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அன்பின் வாழ்த்துக்கள்.


2019ஆம் ஆண்டின் இறுதி காலாண்டிற்குள் கடந்து வந்துள்ளோம். இன்னும் சீக்கிரமாய் 2020ஆம் வருட புத்தாண்டினையும் சந்திக்க இருக்கின்றோம். தேவனுடைய வருகை  யும் சமீபமாகிக் கொண்டே இருக்கின்றது. இன்று நாம் யாவருமாய் வரயிருக்கின்ற பண்டிகையை புத்தாண்டினை நினைத்து அநேக காரியங்களில் முன்னேற்பாடுகளை யும் செய்யத் தொடங்கியும் விட்டோம். வருகிற புத்தாண்டை எங்கு கொண்டாடுவது, எவ்வாறு கொண்டாடுவது யாரெல்லாம் சேர்ந்து கொண்டாடுவது என்று அநேக திட்டங்களையும் வகுக்கவும் தொங்கிவிட்டோம். ஆனால் ஆண்டவருடைய வருகை யும் சமீபமாய் நெருங்குகின்றதே என்று எண்ணினவர்களாய் அதற்கான ஆயத்தங்களி லும் ஓரளவாகிலும் செய்திட முயற்சித்துக் கொண்டுள்ளோமா? இல்லை என்பதையே நாம் ஏற்றுக் கொள்ள வேண்டுமே.


இன்று உலகமெங்கிலும் ஆண்டவரின் அன்பு, இரக்கம், தயவு, கிருபை என்பவைகள் அதிகளவில் பேசப்படுகின்றன. தியானிக்கப்படுகின்றன. இவைகள் நல்லவைகளும் உண்மையானவைகளே. ஆனால் ஆண்டவரின் மறுபக்கத்தைப்பற்றி யாரேனினும் இன்று பேசுகின்றார்களா? இல்லையே. ஆண்டவர் இரக்கம், அன்பு, தயவு, கிருபை உள்ளவராகத்தான் ஆதாம் ஏவாளுக்கு ஏதேனிலே எல்லா, செழிப்பையும் ஆசீர்வாதங் களையும் ஏராளமாயும் தாராளமாயும் கொடுத்துள்ளார். அவர்கள் நிர்வாணிகளாயிருந் தாலும் பயமில்லாமலும் வெட்கப்படாமலுமிருந்தார்கள். அவர்கள் தேவ சாயலாகவே உண்டாக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் ஒவ்வொரு நாளிலும் தேவனுடைய பிரசன் னத்தை உணர்ந்துள்ளார்கள். மாலை வேளைகளில் தேவனோடு ஐக்கியமும் கொண் டுள்ளார்கள். அவர்கள் நன்மை தீமை அறியக்கூடிய பழத்தை சாப்பிடாமலே, நன்மை தீமை அறியத்தக்கதான அறிவை பெற்றிடும் நிலமையில் தான் இருந்தார்கள். ஜீவ விருட்சத்தின் கனியையும் அவர்கள் புசிக்கக்கூடாதபடிக்கு ஆரம்பத்தில் தடை எதுவும் ஏற்படுத்தப்படவும் இல்லையே. தேவனால் சிருஷ்டிக்கப்பட்ட யாவுமே ஆதிப்பெற் றோர்களின் கால்களுக்கு கீழானவைகளாகவே சிருஷ்டிக்கப்பட்டிருந்தன. அவைக ளனைத்தையும் ஆளுகின்றவர்களாகவே காணப்பட்டார்கள். அவர்களுக்கான பணி களும் அங்கே கொடுக்கப்பட்டிருந்தாலும் ஒய்ந்து இளைப்பாறவும் ஒருநாள் ஒதுக்கப் பட்டிருந்ததே


. இத்தனை வசதிகளும், ஆசீர்வாதங்களும் இருந்த போதிலும் ஏன் தேவன் கோபப் பட்டவராக ஆதி மக்களை ஏதேனை விட்டு வெளியேற்றி அதன் வாசலுக்கு ஓர் காவ லையும் வைத்தார்? இரக்கம், அன்பு, கிருபை, தயவு ஒரு பக்கம் இருந்தாலும் கோபம் எரிச்சல் தேவனின் மறு பக்கத்தில் காணப்பட்டுள்ளதே காரணம் என்ன? ஆபேலுக்கு ஒரு பக்கத்தையும் காயினுக்கு மறுபக்கத்தையும் ஆண்டவர் காண்பித்தாரே ஏன்? அதே சமயம் காயினுக்கு ஏற்ற சமயங்களில் எல்லாம் ஆண்டவர் தம் அன்பை கிரு பையை, இரக்கத்தை காண்பிக்க தவறவே இல்லையே, எச்சரிக்கையினையும் செய் தாரே. பின் ஏன் ஆண்டவர் தன் கோபத்தை, எரிச்சலை இவன் மீது காண்பித்தார். வேதாகமம் முழுவதிலும் ஆண்டவரின் அன்பையும் கோபத்தையும், கிருபையையும் எரிச்சலையும் ஆசீர்வாதங்களையும், நியாயத்தீர்ப்புகளையும் காணமுடிகின்றதே ஏன்? நோவா காலத்திலே நோவாவுக்கோ கிருபை கிடைத்தது. ஆனால் அனைத்து ஜனங்களும் அழிக்கப்பட்டார்களே. யாத்.20யிலே எரிச்சலுள்ள தேவனாக காண்பிக்கப்படுகின்றாரே ஏன்?


மத். 22ஆம் அதிகாரத்திலே அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்து கொள்ளப் பட்டவர்களோ சிலர் (many are called but few are chosen) என்று தானே எழுதப்பட்டுள்ளது. இது எப்பொழுது எங்கே கூறப்பட்டுள்ளது. ஆண்டவர் உவமையாக பேசும்போது ஒரு ராஜாவின் குமாரனின் கலியாணத்திற்கு அனைவரும் அழைக்கப்பட்டிருந்தார்கள் என்று தானே வாசிக்கின்றோம். சங்.34:8யில் கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள். ஏசா.55:1யில் ஓ தாகமாயிருக்கிறவர்களே நீங்கள் எல்லாரும் தண்ணீர் களண்டைக்கு வாருங்கள். பணமில்லாமல், விலையுமின்றித் திராட்ச ரசமும் பாலும் கொள்ளுங்கள் என்று தானே வாசிக்கின்றோம். மத்.7:37யில் ஒருவன் தாகமாயிருந் தால் என்னிடத்தில் வந்து பானம் பண்ணக்கடவன் என்றும், வெளி.21:6, 22:17யில் தாகமாயிருக்கிறவனுக்கு நான் ஜீவத்தண்ணீருற்றில் இலவசமாய்க் கொடுப்பேன் என்றும், தாகமாயிருக்கிறவன் வரக்கடவன், விருப்பமுள்ளவன் ஜீவ தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன் என்று தானே வாசிக்கின்றோம். இவ்விதமாய் அனைவரும் அழைக்கப்பட்டிருந்தாலும் தாகமாயிருக்கிறவன் மட்டுமே வரக்கடவன் என்றும் இலவசமாய் பெற்று ருசித்து பாருங்கள் என்ற இரு காரியங்கள் மட்டுமே முக்கியப்படுத்தப்பட்டுள்ளதை வாசிக்கின்றோம்


. ஆனால் இந்த உவமையிலே அனைவரும் கலியாணத்திற்கு அழைக்கப்பட்டிருந் தார்கள். ஆனால் விரும்பி வந்து ருசித்து பார்த்தவர்கள் வேறு சிலர் மாத்திரமே. இதனை ஒரு சில வேத பண்டிதர்கள் இவ்விதமாய் அர்த்தம் கொள்கின்றார்கள். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து யூதர்களுக்காகவே அவர்கள் குடும்பத்தில் பிறந்து வாழ்ந்து அவர்களுடைய ஆலயத்திலே அவர்களுக்கு போதனைகளை செய்திருந் ததினால் யூதர்கள் மாத்திரமே அழைக்கப்பட்டவர்கள் என்றும், ஆனால் யூதர்கள் அனைவருமே அவரை ஏற்றுக் கொள்ளாமல் சிலுவையில் அவரை அறைய ஒப்புக் கொடுத்தார்களே. ஆகையினால் ஆண்டவரின் சுவிசேஷம் தெரிந்து கொள்ளப்பட்ட புறஜாதியார்களாகிய நமக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம் கொள்ளப்பட்டாலும் அது சரியானது அல்ல. ஏனெனில் ஆண்டவரின் பிறப்பின் செய்தி அறிவிக்கப்படு கையில் (லூக்.2:10) இதோ எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தி என்று தான் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்.2:2யிலே கிழக்கிலே அவரு டைய நட்சத்திரத்தைக் கண்டு அவரைப் பணிந்துக் கொள்ள வந்த மூன்று சாஸ்திரி களும் யூதர்கள் அல்லவே. சமாரியா பெண்ணை ஆண்டவர் சந்திக்கவில்லையா. நூற்றுக்கு அதிபதி, ஒரு ரோமனின் விசுவாசத்தை பாராட்டவில்லையா. இத்தாலியா பட்டணத்தானாகிய ஒரு கொர்நேலியுக்கு சுவிசேஷம் கூற பேதுரு அனுப்பப்பட வில்லையா.


ஆகவே இந்த உவமையிலே கலியாண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் இவ்வுல கின் அனைவருமே.  ஆனால் அழைக்கப்பட்டவர்கள் அனைவரும் விருந்திற்கு வரவில்லை.   இன்று சுவிசேஷம் உலகமெங்கிலும் பலவழிகளில், பலமுறைகளில் மிஷனெரிகள் மூலமாக, சுவிசேஷர்கள் மூலமாக, TV மூலமாக, வானொலி மூலமாக யாவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு வருகின்றன. அதோடு யாவும் நிறுத்தப்பட்டு விடுகின்றது. உவமையிலே அழைக்கப்பட்டவர்கள் ஒருவரும் கலியாண விருந்துக்கு வரவில்லையே. அதனால் ராஜா வேறு ஊழியர்களை அனுப்பி வழிச்சந்துகளிலே காணப்படுகின்ற யாவரையும் அழைத்துக் கொண்டு வாருங்கள் என்றார். அதன்படிக்கே அவர்கள் கண்ட நல்லார் பொல்லார் யாவரையும் கூட்டிக் கொண்டு வந்தார்கள். கல்யாண சாலை விருந்தாளிகளால் நிறைந்தது. விருந்தாளிகளைப் பார்க்கும்படி ராஜா உள்ளே பிரவேசித்த போது ஒருவன் கலியாண வஸ்திரம் தரிக்கப்படாதவனாக காணப் பட்டான். ராஜா கோபமடைந்து அவனை கையும் காலும் கட்டி அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கிற புறம்பான இருளிலே போடுங்கள் என்றாரே? இதன் பொருள் என்ன? இச்சமயத்தில் தான் அழைக்கப்பட்டவர்கள் அநேகர். தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் சிலர் என்று எழுதப்பட்டுள்ளது.


சுவிசேஷத்தை தாகமில்லாமல் கேட்டவர்களும், சுவிசேஷத்தை ருசித்து பார்க்க விரும்பாதவர்களே அநேகர். சுவிசேஷம் இலவசமாய் அளிக்கப்பட்டாலும் அதனை அலட்சியம் செய்கின்றவர்களே அநேகர். இன்று உலகமெங்கிலும் பலவகையான திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டு, சுவிசேஷம் அறிவிக்கப்படுகின்றன. ஆனால் கேட்கின் றவர்களுள் ஏற்படத்தக்கதான உணர்வுள்ள சத்தியங்கள் எங்கும் கொடுக்கப்படு கிறதில்லையே. ருசித்து பார்க்கத்தக்கதான முறைகள் கையாளப்படுவதில்லையே. பரி.பவுல் கூறுகின்றார். கிறிஸ்து ஒருவனில் உருவாக கற்ப வேதனைப்படுகிறேன் என்று.   இன்று இந்த வேதனை, தியாகம், எங்கும் காணமுடியவில்லையே.  கலியா ணத்திற்கான அழைப்புத் திட்டங்கள் மட்டுமே எங்கும் உருவாகிக் கொண்டிருக் கின்றன. இவைகள் இன்னும் பல நூதனமான முறைகளிலெல்லாம் பறைசாற்றப் படுகின்றன. TV ஊழியங்களைத் தாங்குங்கள். TV ஊழியங்களை தாங்கக்கூடாதபடிக்கு சாத்தான் உங்களைத் தடைசெய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள் என்று TV ஊழியர்களின் அழைப்பு காணப்படுகின்றது. பெரிய பெரிய ஆலயங்களிலே அங்குள்ள ஊழியர்கள் கர்த்தர் ஆலயத்தில் இருக்கிறார். ஆலயத்திற்கு வருபவர்களை கர்த்தர் ஆசீர்வதிப்பார் என்று ஆலய அழைப்பை மட்டுமே கவர்ச்சியாய் அறிவிக்கின்றார்கள். ஆனால் அன்னார் அளிக்கும் செய்திகளிலே ஆண்டவரின் அன்பின் அழைப்பு மட்டுமே வெளிப்படுத்தப்படுகிறது. ஆண்டவரால் தெரிந்து கொள்ளப்படுவதற்கான செய்திகள் அளிக்கப்படுவதில்லையே. பின் எப்படி மக்களுக்கு ருசித்து பார்க்க தாகம் ஏற்படும். இக்காலத்திலே அழைப்புகளுக்கு எங்கும் குறைவு எதுவும் கிடையாது. சிறுபிள்ளை களை அழைக்க சிறு பிள்ளைகளுக்கான உபவாச கூடுகை, வியாபாரிகளுக்கான கூடுகை, அரசு தேர்வு எழுதுவோர்களுக்கான கூடுகை இவையெல்லாம் மிக மிக பிரமாதமானவைகளே. காணிக்கைகள் கொட்டோ என்று கொட்ட நல்ல நல்ல வாய்ப்புக்கள். ஆனால் கலியாண வஸ்திரமில்லாதவனை ஆண்டவர் கட்டி பிடித்து முத்தம் செய்யவில்லையே. ஏன் நிரந்தரமான இருளுக்குள் தள்ளிப் போடப்படுகின் றான்? கலியாண வஸ்திரம் என்றால் என்ன? இது கிடைக்க தகுதிகள் என்ன? இல வசமாய் கொடுக்கப்பட்டாலும் ஏன் அது உதாசினப்படுத்தப்படுகிறது. கிடைக்கப்பெறும் கலியாண வஸ்திரத்தை ராஜா சுற்றிப் பார்க்க வரும் வரையிலும் இழக்காதிருக்க வேண்டுமே.  இதனை தேவ செய்தியாக அளிக்கின்றவர்கள் யார்? மாறாக முதியோர் தினம், பெற்றோர் தினம், காதலர் தினம் என்று வேதத்திலுள்ள வசனங்களை நவீன மாய் திரித்து பேசப்படுகிறதற்கு இது காலமா. சுவிசேஷத்தை அறிவித்தால் மட்டும் போதுமா? கற்றுக் கொண்டவைகளை யாவரும் கைக்கொள்ளும்படிக்கு உபதேசம் பண்ணுங்கள். சுவிசேஷம் கேட்டவர்களை சீஷராக்குங்கள்.  அப்பொழுது தானே சகல நாட்களிலும் உலகத்தின் முடிவு பரியந்தம் அவர் நம்மோடு இருப்பார் என்பதே தேவ வாக்கு. சீஷராக்கபாடுபடுகின்றவர்கள் யார்?


அருமையானவர்களே இந்த வருடத்தின் கடைசி காலாண்டின் காலத்திலேயாவது கலியாண வஸ்திரத்தினை பெறுவதற்கான காரியங்களையே அதிகமாய் சிந்திப் போமாக. பிரதானமாய் அழைக்கப்படுகின்ற சகல அழைப்புகளையும் அறிந்து புரிந்திடுவோமாக. ஆண்டவர் தாமே வாசகர்கள் யாவரையும் 2020ஆம் புத்தாண்டின் சகல ஆசீர்வாதங்களுக்குள் எவ்வித குறைவும் இன்றி ஆரோக்கியமாகவும் செழிப்பாகவும் அமைத்திட வழி நடத்திடுவாராக.   


கலியாண வஸ்திரத்தையும் உறுதியாய் பற்றிக் கொள்வோமாக     ஆமென்


பிலிப் ஜெயசிங்,  ஆசிரியர்,  சத்திய வெளிச்சம்


நாசரேத் ஜெப ஐக்கியம், நாசரேத்.