சத்திய வெளிச்சம் - அக்டோபர் மாதம் - செய்தி

நீதியைக் கொடுக்கும் ஊழியம் அதிக மகிமையுள்ளதாயிருக்குமே..(ஆனால்)......... .........சிறந்த மகிமைக்கு முன்பாக மகிமைப்பட்டதல்ல. II கொரிந்தியர் 3: 9,10


                          The ministry of righteousness exceeds much more glory...(but)...                                                                       what remains is much more glorious)


இன்று இவ்வுலகிலே பலவிதமான ஊழியங்களைக் காண்கின்றோம். ஆராதனை ஊழியங்கள், பாடல் வாயிலாக ஊாழியங்கள், நாடக முறைகளில் ஊழியங்கள், அற்புதங்களின் ஊழியங்கள், தீர்க்கத்தரிசன ஊழியங்கள் இன்னும் பல. இவைகள் யாவும் இவ்வுலகிலே மகிமையானவைகளே. ஆனால் இவைகள் யாவும் வெளிப்படை யானவைகள் மாத்திரமே. (It highlights external presentations) இவற்றின்மூலம் வெளிப் படையானவைகளையே நாம் கண்டு மகிழ்கின்றோம். வெளிப்படையாக காண்பிக் கப்பட்ட மகிமையானவைகளுக்கும் அவரவர்களின் உள்ளான வாழ்வுக்கும் சம்பந்தம் இல்லாமலே வெளிப்படையாய் மட்டுமே தேவனுடைய நாமம் மகிமைப்படும்படியாக வெளிப்படுத்தி காண்பிக்கக்கூடும். ஆராதனை நடத்துகின்றவர்கள், நேர்த்தியாய் பாடுகின்றவர்கள், திறமையாய் நடிக்கின்றவர்கள், மனந்திரும்பி ஆண்டவரோடு நெருங்கிய ஐக்கியம் கொண்டு வாழ்பவராக இருக்க வேண்டும் என்று அவசிய மில்லை. யார் வேண்டுமானால், திறமை உள்ளவர்கள், தாலந்து உள்ளவர்கள், நல்ல குரல் உள்ளவர்கள் நேர்த்தியாய் அநேகரின் பாராட்டுதலுக்கும் உட்பட்டு நிறைவேற் றக்கூடும். இவைகள் ஆக்கினை தீர்ப்புக் கொடுக்கும் ஊழியங்களே ஆகும். இவ்வகை ஊழியங்கள் யாவும் இப்பூமியிலேயே நடப்பிக்கப்படும் மகிமையான ஊழியங்களே   (11 கொரி.3:9)


ஆனால் பரலோகிலே அநேக சிறந்த மகிமையானவைகள் உள்ளன. அவற்றோடு இவைகளை ஒப்பிடும் போது சிறந்த மகிமைக்கு முன்பாக ஒப்பிடப்பட்ட தல்ல என்பதே உண்மையும் சத்தியமும் ஆகும். (11 கொரி.3:10) ஆக்கினை தீர்ப்பு கொடுக்கும் எல்லா வகையான ஊழியங்களுக்கும் அதற்கான மகிமையும் கனமும் இப்பூமியி லேயே கொடுக்கப்பட்டு முடிவடைந்து விடுகின்றன. பாராட்டுதல்களும், சாட்சிகளும், வெகுமதிகளும், காணிக்கைகளும் இப்பூமியிலேயே நிறைவாய் அளிக்கப்பட்டு விடு கின்றன. இன்னாரால் தான் இவ்வளவு பெரிய கூட்டத்தை கூட்ட முடியும். இன்னார் தான் பெரிய பெரிய அற்புதங்களை செய்கின்றவர். இன்னார் தான் உலகிலேயே பெரிய தீர்க்கதரிசி என்று பெரிய பெரிய பாராட்டுதல்களை இப்பூமியிலே பெற்றிடலாம். பின்னணியில் வேறொருவரின் பாடலை கேட்கச் செய்து விட்டு முன்னணியில் வாயை மட்டும் அசைத்து நல்ல பாடல்களை தானே பாடியதாக வெளிப்படையாய் எளிதில் விளம்பரப்படுத்தி விடலாம் . உலகமெங்கிலுமிருந்து எடுக்கப்பட்ட படகாட்சிகளை கொண்டு வந்து அவ்விடமெல்லாம் சென்று பாடி, படம் எடுத்தாக காண்பித்தும் விடலாம். எங்கோ எப்பொழுதோ நடந்த அற்புதங்களை, மக்கள் திரள் கூட்டத்தை தாங்கள் நடத்தும் ஒவ்வொரு மாதாந்திர கூடுகைகளிலும் நடக்கின்றதாக காட்டி வெளிப்படையாய் பிரமிக்கச் செய்யலாம். இவைகள் ஆக்கினைத்தீர்ப்பு கொடுக் கும் மகிமையான ஊழியங்களாகும். இவைகளுக்கு பரலோகிலே வெகுமதிகள், சிறப் பான வரவேற்பு அளிக்கப்பட மாட்டாது என்பதே உண்மை .


இவ்வுலகிலே மரிக்கும் ஒவ்வொரு தேவனுடைய பிள்ளைகளும் இப்பூமியிலே தன் கண்களை மூடும் போது அவன் பரலோகிலே தன் கண்களைத் திறந்தவனாக கொண்டு போகப்படுகின்றான். அங்கே அவனுக்கான சிறந்த மகிமையானவைகள் அளிக்கப்படு கின்றன. உண்மையும் உத்தமுமான ஊழியக்காரனே என்ற வரவேற்பும் அளிக்கப்படு கின்றன. அதற்கு காரணம் இவன் பூமியிலே நடப்பித்தவைகள் நீதியைக் கொடுக்கும் ஊழியங்களே (Ministry of Righteousness) நீதியை கொடுக்கும் ஊழியங்களுக்கு பாராட்டு தல்கள், வெகுமதிகள் பரிசுக்கள், காணிக்கைகள், பிரதிபலன்கள் இப்பூமியிலே அளிக் கப்பட மாட்டாது. மாறாக பசி, பட்டினி, அடிகள், அவமானங்கள் இப்பூமியிலே கிடைக் கப்படலாம். இவைகளுக்காகவே நாம் யாவரும் ஆண்டவருடைய உண்மையும், உத்த மனுமான ஊழியக்காரர்களாக இப்பூமியிலே நியமிக்கப்பட்டுள்ளோம். இப்பூமியிலே நாம் நிறைவேற்றிமுடித்துள்ள நீதியான ஒவ்வொரு செய்கைகளுக்குத்தக்கதாக பரலோகிலே ஏராளமான வகைவகையான கிரீடங்களும் நம் தலை மீது சுமத்தப் nபடவுள்ளன. பந்தயத்தில் ஓடுகிற அனைவருக்கும் பரிசு உண்டு. இவைகளே பரலோ கிலே நமக்கான மகிமைகளாகும். இவைளை எதிர்பார்த்தவராகவே பரி.பவுல் கூறு கின்றார். ஆகையினால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் கிறிஸ்து இயேசுவினால் உண்டான இரட்சிப்பை நித்திய மகிமையோடே பெற்றுக்கொள்ளும்படிசகலத்தையும் அவர்கள் நிமித்தமாக (இப்பூமியிலே) சகிக்கிறேன் என்ற தீமோத்தேயுக்கு எழுதும் போது கூறியிருக்கின்றார். (11தீமோ.2:10) ஏசாயா தீர்க்கத்தரிசியும் கூறியபடிக்கு யார் யார் பரலோகில் ஏற்றுக்கொள்ளப்படுகின்றார்கள். நான் என் மகிமைக்கென்று சிருஷ் டித்து உருவாக்கிப் படைத்து என் நாமந்தரிக்கப்பட்ட யாவரையும் கொண்டு வா என் பேன் என்பதே (ஏசா.43:7) இவர்களுக்கு சேனைகளின் கர்த்தரே மகிமையான கிரீட மாகவும் அலங்காரமான முடியாகவும் இருக்கின்றார். (ஏசா.28:5) இதனைத்தான் சாலமோன் பாடும் போது நீதியையும், தயையையும் பின்பற்றுகிறவன் ஜீவனையும் நீதியையும் மகிமையையும் கண்டடைவான். (நீதி.21:21) என்று. இப்பூமியிலே நீதியை கொடுக்கும் ஊழியங்களைசெய்து முடித்து விட்டு பரலோகத்திலே வந்து சேருபவர் களுக்கு அளிக்கப்படும் மகிமையானவைகள் யாதெனில் :.


மகிழ்ச்சியின் கிரீடம்    (The soul winner's Crown)


இப்பூமியிலே ஆண்டவருக்காக உழைத்து பாடுபட்டு கர்ப்ப வேதனைப்பட்டு சம்பா தித்த ஒவ்வொரு ஆத்துமாக்களையும் நாம் பரலோகிலே காணும்போது அவர்களே நமக்கு மகிழ்ச்சியான கிரீடமாயிருப்பார்கள். அவர்கள் மூலமாகவே பரலோகமே மகிமையும் சந்தோஷமும் பெறுகின்றது. (1தெச.2:19) மனந்திரும்புகிற ஒரு பாவியின் நிமித்தம் பரலோகிலே மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்றும் எழுதப்பட் டுள்ளதே.


2. மகிமையுள்ள வாடாத கிரீடம்   (The Pastor's Crown)


இப்பூமியிலே குடும்பமாக ஐக்கியப்பட்டு, சபையாக, ஐக்கியப்பட்டு, சகோதரர்களாக ஐக்கியப்பட்டு அன்னார்களை கட்டிக் காத்து, கற்றுக்கொண்டவைகளை கைக்கொள் ளும்படி போதித்து அன்னார்களை ஆண்டவருடைய சீஷர்களாக்கினவர்களுக்கு மேய்ப்பனின் கிரீடங்கள் பரலோகிலே அளிக்கப்படகாத்துக் கொண்டிருக்கின்றன. இவற்றினை அந்நாளிலே பிரதான மேய்ப்பனாகிய இயேசு கிறிஸ்துவே மகிமையுள்ள வாடாத கிரீடத்தை பூமியிலே மேய்ப்பர்களாக தங்களை அர்ப்பணித்து வாழ்ந்து முடித்தவர்களுக்கு அளிக்கின்றார். 1பேதுரு 5:4. பேதுருவைப் பார்த்து ஆண்டவர் கூறவில்லையா, என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக, என் ஆடுகளை மேய்ப்பாயாக என்று.


3. அழிவில்லாத கிரீடம் (The eternal Crown of self discipline)


இப்பூமியிலே ஆண்டவருக்காக பரிசுத்தத்தைகாத்துக் கொள்ள போராடி ஜெயித்த வர்கள் மாத்திரமே தானியேலைப் போன்று உலகத்தோடு ஒத்துப்போகாமல் உயி ரையே பணையம் வைத்து பத்திரத்திலே ராஜாவினால் முத்திரை போடப்பட்டிருந் தாலும் உணவிலும், இச்சையடக்கமாய் சரீரத்தை ஒடுக்கி தீட்டுப்படுத்தாமல் தன்னைக் காத்துக் கொண்டு வாழ்ந்து தேவசித்தத்தை மட்டுமே நிறைவேற்றி முடித்தவனுக்காகவே அழிவில்லாத கிரீடம் பரலோகிலே அளிக்க வைக்கப்பட்டிருக்கிறது. (1கொரி.9:25)


4. நீதியின் கிரீடம் (The Crown of Rejoicing)


ஆண்டவரின் வருகையினையே பிரதானமாக எதிர்நோக்கிக் கொண்டு வருகையில் எவ்வகையிலும் கைவிட்டுவிடப் படாதபடிக்கு ஜாக்கிரதையாய் தன்னைக் காத்துக் கொள்ளுகிறவர்கள், எப்படியேனில், யாரும் செய்யக்கூடாத ஊழியங்களை மோசே அன்று செய்தான். தினமும் அற்புதங்களை நடப்பித்தான். வனாந்தரத்திலே 6லட்சம் பேர்களுக்கும் மேலாக 40 வருஷமாய் வழி நடத்தினவன். ஆனால் அவனுடைய ஒரு சிறு கீழ்ப்படியாமையின் காரணத்திற்காக அவன் கானானுக்கு பிரவேசிக்கக் கூடாமற் போயிற்றே. 10 கன்னிகைகளில் 5 பேர்களுக்கு தாங்கள் புத்தியற்றவர்கள் என்று கடைசி நிமிடத்தில் தானே தெரியவந்தது. அவர்களாலும் பரலோகில் பிரவேசிக்க கூடாமற்போயிற்றே. இவற்றையெல்லாம் எச்சரிக்கையாக கொண்டு கடைசி சுவாசம் வரை தன்னை கறை, திரை, குறையில்லாமல் காத்து, நியமிக்கப்பட்ட ஓட்டத்தை முடிப்பவர்களே அவருடைய இரண்டாம் வருகையின் பிரசன்னமாகுதலில் ஏற்றுக் கொள்ளப் படுகின்றார்கள். இவர்களுக்காகவே நீதியின் கிரீடம் பரலோகிலே வைக்கப்பட்டிருக்கிறது. (11தீமோ.4:8)


5. முடிசூட்டப்படுகிறதான கிரீடம், இரட்சணியம் என்னும் தலைச்சிரா                          (Victor's Crown of Righteousness)


இது, நம் வாழ்நாளெல்லாம் சட்டபடியும் நீதியின்படியும் சாட்சியாக வாழ்ந்து முடிப் பவனுக்கான கிரீடம். யாவரோடும் நல்மனம் பொருந்தியவர்கள், ஒருவருக்கொருவர் நேசித்து ஜெபிக்கின்றவர்கள், பிறனுடையவைகளை திரும்பச் செலுத்தியவர்கள், தனக்கு மேலானவர்களுக்கு தெய்வபயத்தோடு கீழ்ப்படிந்து நடந்தவர்கள், யாவற் றிக்கும் கணக்கு ஒப்புவிக்கும் நிலமையில் நல்ல மனசாட்சியோடு, யோக்கியமாய் வாழ்கின்றவர்கள் இவர்களுக்கான இரட்சணியம் என்னும் தலைச்சீரா, பரலோகிலே முடிசூட்டப்படும் கிரீடமாக (11தீமோ.2:5) அவர்களுக்காகவே காத்துக் கொண்டிருக் கின்றன.


6. ஜீவ கிரீடம் (Victor's Crown of perseverance)


இப்பூமியிலே சந்தித்த சகல சோதனைகளையும் சகித்து ஜெயம் பெற்று தேவனில் அன்பு கூர்ந்து உத்தமன் என்று இப்பூமியிலே சந்தித்த சகல சோதனைகளையும் சகித்து ஜெயம் பெற்று தேவனில் அன்பு கூர்ந்து உத்தமன் என்று விளங்கியவனுக்கு அளிக் கப்படும் ஜீவகிரீடம் (யாக்.1:12)


7. ஜீவ கிரீடம் (The Martyr's Crown)


மரணபரியந்தம் இளைப்படையாது பிரயாசப்பட்டு சோதிக்கப்படுகையில் பொறுமை யாய் சகித்து விசுவாசத்தைக் காத்துக் கொண்ட இரத்த சாட்சிகளுக்கான ஜீவ கிரீடம் (வெளி 2:10)


இவைகளில் ஏதாகிலும் ஒன்றையாவது பெறக்கூடாதவர்கள் பரலோகத்திற்கு செல்ல அனுமதிக்கப்படமாட்டார்களே. இவ்வகையான கிரீடங்கள் சூட்டப்படும் மகிமையான இடமே பரலோகம். இதுவே மகிமையான பரலோக கொண்டாட்டம் இந்த மகிழ்ச் சியின் விழாவின் நடுவிலே பரிசுத்தர், பரிசுத்தர் என்று இரவும் பகலும் ஓய்வில் லாமல் ஆராதிக்கும் வேளையில் தானே, இயேசு கிறிஸ்துவை வரவேற்கின்ற போது அவரை 24 மூப்பர்களும் பரலோகத்தின் சகல சிருஷ்டிகளும் சதாகாலங்களிலும் உயிரோடிருக்கின்றவரைத் தொழுது கொள்கையில் ஆண்டவரின் சிறந்த மேன்மை யான மகிமை வெளிப்படுகின்றது. அதனைக் காண்கையில் அவரவர்கள் பெற்ற சகல நீதியான மகிமையான கிரீடங்கள் அவற்றோடு ஒப்பிடத்தக்கவைகள் அல்ல என்று அறிந்து தங்கள் அனைத்து கிரீடங்களையும் மிகுந்த மகிழ்ச்சியோடு ஆண்டவரின் சிங்காசனத்திற்கு முன்பாக வைத்து தேவனை ஆராதிக்கின்றவர்களாகின்றனர் என்பதே உண்மையும் சத்தியமுமாகும்.


பூமியிலே, உலகமுழுவதையும் ஆதாயப்படுத்தினவர்களாகவும் உலகமெங்கிலும் சபைகளை ஸ்தாபித்தவர்களாகவும் பெருமைப்பட்டுக்கொள்ளலாம். சிறந்த ஊழியர் என்ற பேர் பிரஸ்தாபங்களையும் இப்பூமியிலே பெற்றவர்களாகவும் காணப்படலாம். ஆனால் பரலோகத்தின் மகிமை எவற்றோடும் ஒப்பிடக் கூடாதவைகளே. உத்தமனும் நீதிமானுமாகிய யோபு பக்தன் புலம்புகின்றார் “என்னிலிருந்த என் மகிமையை அவர் உரிந்து கொண்டு என் சிரசின் கிரீடத்தை பிடுங்கிபோட்டார்” என்று (யோபு 19:9) யோபு தன்னுடைய இரண்டு வார்த்தைகளாலேயே தேவனுக்கு அவமதிப்பை ஏற்படுத்தினார். அதனால் யோபு உணர்வடைந்து கூறும் போது இதோ நான் நீசன், உமக்கு என்ன மறு உத்தரவு சொல்லுவேன், என் கையினால் என் வாயைப் பொத்திக் கொள்கிறேன். நான் இரண்டொருதரம் பேசினேன். இனி நான் பிரதியுத்திரம் கொடாமலும் பேசாமலும் இருப்பேன் என்றான். (40.4,5) ஆனால் தேவனோ 4 அதிகாரங்களில் யோபுவை கண்டித்து திருத்துகின்றார். (38-41) தேவனுடைய மகிமையோடு எந்த மனிதனும் எதிர்கொள்ளக்கூடாதே. இப்பூமியிலே இயேசு கிறிஸ்துவோடு அவருடைய மார்பிலே சாய்ந்து வாழ்ந்த யோவான், உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்துவின் மகிமையை கண்டபோது செத்தவனைப் போல அவருடைய பாதத்தில் விழுந்தேன் என்கிறார் (வெளி 1:17) பிரபலமான தீர்க்கத்தரிசியாகிய ஏசாயா கூட மகிமையான தேவனுடைய பிரசன்னத்தைக் காண்கையில் அதாவது ஒரு பாவமும் செய்யாத தூதர்களாகிய சேராபீன்கள் தேவனுடைய பிரசன்னத்திற்குள்ளே வருகையில் அவர் பரிசுத்தர், பரிசுத்தர் என்று மட்டுமே பாடுகின்றனர். தேவனுடைய மகிமையின் பிரசன்னத்தை தங்கள் கண்களால் காணக்கூடாத நிலமையில் தங்கள் இரு செட்டைகளால் தங்கள் முகத்தை மூடிக்கொண்டன. பரிசுத்த மகிமையான ஸ்தலத்திற்குள் பிரவேசிக்கையில் தங்கள் இரு செட்டைகளால் தங்கள் கால்களை மூடிக்கொண்டனவே. இந்த மகிமை யைக் கண்ட ஏசாயா ஐயோ அதமானேன், அசுத்த உதடுள்ள மனுஷன் என்று பதறுகின் றானே. (ஏசா.6:25) ஆனால் இன்று இப்பூமியிலே மக்கள் தாங்கள் ஏதோ கடைப்பிடித்து வருகின்ற பக்தியை பெரிதாக எண்ணி, எங்களுக்கெல்லாம் பரலோகம் ஆயத்தமா யிருக்கிறது என்று கூறும் புத்தியற்ற பக்திமான்களே எச்சரிக்கையாயிருங்கள். இனி யாவது பரலோகத்தின் மகிமையை கேட்டு அறிந்து மனந்திரும்புங்கள். யாவருக்கும் பரலோகம் உண்டு ஆலயத்திற்கு வாருங்கள் ஆலயம் ஆசீர்வாதங்களை பொழியும் என்று அழைக்கும் ஆயர்களே பணமே குறிக்கோளாக கொண்டு ஊழியங்களை நடப்பிக்கும் பாஸ்டர்மார்களே, ஊழியர்களே மனந்திரும்புங்கள். அன்று மார்டின் லூத்தர் காலத்தில் பாவமன்னிப்பு சீட்டுக்கள் விலைக்கு விற்கப்பட்டதை எதிர்த்து போராடினாரே. இன்று பங்காளர் திட்டங்களை அறிமுகப்படுத்தி பணம் வசூலித்து வருகின்றார்களே. இதனைக் கண்டிக்க மற்றுமொரு மார்டீன் லூத்தர் வரவேண்டுமோ. உங்கள் உலக மகிமையின் ஊழியங்கள் அனைத்துமே ஆக்கினைத் தீர்ப்பு கொடுக்கும் ஊாழியங்களே. இவைகள் யாவும் அக்கினியில் வெந்து சாம்பலாகிவிடுமே.


அருமையானவர்களே, நாங்களெல்லாரும் ஏதோ பக்தியாய் மட்டுமே வாழ முடியும், கிரீடங்களெல்லாம் எங்களுக்கு வேண்டாம். கிரீடங்கள் பெற எங்களால் எதுவும் சாதிக்க முடியாது. நாங்கள் மிகவும் பெலவீனமானவர்களே என்று சாக்குபோக்கு கூற விரும்புகின்றீர்களோ. இதனை மாத்திரம் நாம் யாராகிலும் கூற முடியாது. ஆண்டவர் தம் எல்லா இரத்தத்தையும் நாம் யாவருக்காகவும் சிந்தி இலவசமான பாவமன் னிப்பை அளித்துள்ளாரே. அவருக்காக நாம் செய்ததுதான் என்ன. தேவனுக்காக உழைக்க தாலந்துகள் எதனையும் பெறாதவர்கள் இவ்வுலகில் ஒருவரும் இல்லையே. அவனவனுடைய திறமைக்கு தக்கதாக தாலந்துகள் அனைவருக்கும் கொடுக்கப் பட்டுள்ளனவே. (மத்.25:15) ஒன்றுக்கு மேற்பட்ட தாலந்துகளைப் பெற்றவர்கள் அவற் றினைக் கொண்டு ஆண்டவருக்காக திறமையாக வாழ்ந்து முடிக்கின்றார்கள். அதற்கான பிரதிபலன்கள் காத்துக்கொண்டிருக்கின்றன. ஆனால் ஒரு தாலந்து பெற்ற கடைசியான ஒருவன் கூறுகின்றான் ஆண்டவரே நீர் விதைக்காத இடத்தில் அறுக் கிறவர், நான் சோம்பேறியாகவே இருக்க விரும்புகிறேன். கடினமான உழைப்பை என்னிடம் எதிர்பார்க்க வேண்டாம். என்பதாக கூறியபோது ஆண்டவர் அவன் மீது கோபப்பட்டு கூறுகின்றார். உன்னிடம் உள்ள ஒரு தாலந்தை காசுக்காரன் வசத்தில் போட்டு வைத்திருக்கலாமே. அதாவது எந்த கிரீடத்தையும் பெற நீ விரும்பாவிட்டா லும் ஏதாவது உண்மையான சபைக்காக, ஐக்கியத்திற்காக, அல்லது மிஷனெரி ஸ்தாபனத்திற்காக அதனோடு முழுவதுமாய் ஐக்கியப்பட்டு, காசுக்காரன் தரும் கூலிக்காவது உழைத்திருக்கலாமே. அந்த ஒரு தாலந்தின் கணக்கை ஆண்டவர் அந்த ஸ்தாபனத்தாரிடம் கேட்டுக் கொள்வாரே. உனக்கான பெலன் பரலோகத்தில் கிடைக்குமே என்பதை வேதத்தில் வாசிக்கின்றோமே.


ஆனால் பரலோகத்தின் மகிமையான கிரீடங்கள் பற்றியோ அல்லது காசுக்காரன் பற்றியோ யாதொன்றையும் இதுவரையிலும் அறியாதவர்கள் தேவனுக்கு முன்பாக வஸ்திரம் இல்லாத நிர்வாணிகளே ஆவர். ஏதேனிலே தேவனுடைய வருகையின் சத்தத்தைக் கேட்ட ஆதாம் ஏவாள், தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து வெட்கப்பட்டு பயந்து ஓடி ஒளிந்ததைப் போன்று எவ்விதத்திலும் பிரயோஜனப்படாதவர்கள் அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் இருளிலே தள்ளிப்போடப்படுவார்களே. (மத்.25:30)


மேலும் இதுவரைக்கும் ஒரு கிரீடத்தையாவது பெற தகுதியானவர்களாக உழைத் தவர்கள் பரலோக மகிமைக்கான தங்கள் கிரீடங்களை ஒருவனும் நம்மிலிருந்து எடுத்துக் கொள்ளாதபடிக்கும் எச்சரிக்கையாய் வாழ்ந்து நமக்குள்ளதை இறுதி மட்டும் உறுதியாய் பற்றிக் கொள்வோமாக. (வெளி. 3:11)


பரலோக மகிமைக்காகவே இப்பூமியிலே வாழ்ந்திடுவோமாக   ஆமென்.


பிலிப் ஜெயசிங்,  நாசரேத்  ஜெப  ஐக்கியம்,  நாசரேத்