சத்திய வெளிச்சம் (நாசரேத் ஜெப ஐக்கியம்)

 செப்டம்பர்  2019  மாதத்தின்  ஆசிரியர் மடல்


கிறிஸ்துவுக்குள் அன்பார்ந்த சத்திய வெளிச்சம் வாசகர்களுக்கு,


இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே அன்பின் வாழ்த்துக்கள். புதிய மாதத்திற்குள் கடந்து வந்துள்ளோம். மாதங்கள் புதியதாக கடந்து வரும் போது நம் வாழ்நாட்களும் குறைவுபட தொடங்கி வருகின்றன. இவ்வுலகில் வாழ்ந்து வரும் நாம் ஆண்டவருக் குத் தேவைதானா? Does God need us. ரோமர் 10:13,14 கூறுகின்றது. கர்த்தருடைய நாமத்தை தொழுது கொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான். அவரை விசுவாசி யாதவர்கள் எப்படி அவரை தொழுது கொள்ளுவார்கள்? அவரைக் குறித்து கேள்விப் படாதவர்கள் எப்படி விசுவாசிப்பார்கள்? பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படிக் கேள்விப்படுவார்கள். அனுப்பப்படாவிட்டால் எப்படி பிரசங்கிப்பார்கள்? ஆகையினால் நாம் ஆண்டவருக்கு அவசியமாய் தேவைதானா? அநேகர் கூறுகின்றனர், பரலோகத் திலே தேவன் தனிமையாய் இருப்பதினால், அவருக்கு ஓர் ஐக்கியம் தேவைப்படுகிறது அதனாலே தேவன் மனுமக்களை உருவாக்கி அவர்களை நித்தியகாலமாய் நம்மோடு வைக்கச்சித்தங்கொண்டார் என்கின்றனர். இது முற்றிலும் தவறானதே. ஆண்டவ ருக்கு யாருமே தேவையும் இல்லை. அவசியப்படவும் இல்லையென்பதே உண்மை. (சங்கீதம் 50:9-15) ஏற்கனவே கோடிக்கணக்கான தேவ தூதர்கள் ஆண்டவரை சூழ்ந்து கொண்டு எப்பொழுதுமே அவரை தொழுது ஸ்தோத்தரிக்கின்றார்களே. ஆகையினால் மனிதர்கள் ஆண்டவருக்கு அவசியமில்லையே. ஆனாலும் உலக தோற்றங்களுக்கு முன்பாகவே, பூமி உருவாக்கப்படும் முன்பே, உலகிலே பாவம் பிரவேசிக்கும் முன்பே, மனுமக்களை ஆண்டவரோடு நித்திய நித்திய காலமாய் ஓர் பரிசுத்த ஜனமாக ஏற்ப டுத்தி வாழ்ந்திடச் செய்யவே முன் குறித்திட்டுள்ளார். மனிதர்களிடம் எவர்களி டமும் இல்லாத திறமைகள் உண்டு என்றோ , அல்லது ஆண்டவரோடு சேர்க்கப்படுவதற்கான தகுதிகள் மனுமக்களிடம் உண்டு என்று அறிந்தோ அவர் மனுமக்களை சிருஷ்டிக்க வில்லை. நம்மை அவருக்கு சொந்தமாயிருக்கும்படிக்கே நம்மைத் தெரிந்து கொண் டுள்ளார். ஆனால் மனுமக்களை சிருஷ்டித்து அவர்களை பெருகச் செய்தபின் பாவமும் பெருகினதினால் சகல ஜனங்களையும் ஜலபிரளயத்தினால் அழித்தார் . பின்பு சகல ஜனங்களுக்குள்ளும் இஸ்ர வேல் மக்களை அவர் தம் சொந்த ஜனமாக பிரித்தெடுத்து அவர்கள் தேசத்தையும் தம் தேசமாக ஏற்படுத்தினார். அன்னார்கள் உலகின் சகல ஜனங்களிலும் திரட்சியான ஜனம் என்று கர்த்தர் அன்னார்கள் பேரில் அன்பு வைத்து அவர்களைத் தெரிந்து கொள்ளவில்லை. (உபா.7:7) கர்த்தரே முன் வந்து தம் ஜனங்களாக  அன்பு வைத்து அவர்களை தெரிந்தெடுத்துள்ளார். ஆனால் அவர்களும் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளவில்லை. அவரை சிலுவைக்கு ஓப்புக்கொடுத்து கொன்றார்கள். பின்பும்  கர்த்தர் மனுமக்கள் பேரில் அன்புகூர்ந்து அவர்களுக்கான இரட்ச்சிப்பின் திட்டத்தை வகுத்து, இதனாலே பாவ மன்னிப்பை பெற்று பரிசுத்தமாக்கப்பட்டவர்களை தம் சொந்த ஜனமாக ஏற்றுக்கொள்ள தீர்மானித் துள்ளபடியினால், அவரில் அன்பு வைத்து அவரை நாம், நம் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளுதல் அவசியம் என்பதை உணர்ந்து உண்மையாய் இன்றுதானே நாம் அவரையே தெரிந்து கொள்ளுதல் வேண்டுமே. ஆனால் இன்று ஜனங்களில் பெரும்பா லோர் இதனை உணர்வதில்லை. அதனால் தேவனையும் தம் தேவனாக ஏற்றுக் கொள்வதில்லை. மாறாக தங்களுக்கு சுயமான சில இலாபங்களை நன்மைகளை கிடைக்கப் பெற்றிடவே தேவனைத் தேடுகின்றவர்களாகிவிட்டனர்.


பழைய ஏற்பாட்டின் கடைசி புஸ்தகத்திலே மல்.1:2,3 யிலே யாக்கோபை சிநேகித் தேன். ஏசாவையோ வெறுத்தேன் என்று வாசிக்கின்றோம். ஒரு ஓய்வு நாள் பாடசாலை வகுப்பிலுள்ள ஒரு பையன் தன் ஆசிரியரிடம் ஏன் ஏசாவை தேவன் வெறுத்தார்? இது அவனுக்கு ஒரே குழப்பமாகவே காணப்படுகிறது என்றானாம். அதற்கு பதிலுரையாக ஆசிரியர் கூறினார், ஏசாவை தேவன் வெறுத்தது குழப்பமாக இல்லை. ஏன் யாக்கோபை சிநேகித்தார் என்பது தான் தனக்கு குழப்பமாக இருக்கிறது என்றாராம். அருமையானவர்களே ஆரம்பத்தில் ஏசாவை தேவன் ஒருபோதும் வெறுக்கவில்லை. ஏமாற்றப்பட்டவன் தான் ஏசா. யாக்கோபு தான் ஏசாவை கூழைக் கொடுத்து வஞ்சித்தான். யாக்கோபும் அவன் தாயுடன் சேர்ந்து தகப்பனின் எல்லா ஆசீர்வாதங்களையும் வஞ்சித்து பெற்றுக் கொண்டான். ஏசாவோ தனக்கு ஒரு ஆசீர்வாதம் கூட இல்லையாயென்றுதான் கதறி அழுது கெஞ்சினான். பின் ஏன் மல்கியா புஸ்தகத்திலே ஏசா வெறுக்கப்பட்டான் என்று எழுதப்பட்டுள்ளது.


அருமையானவர்களே, ஆரம்பத்தில் ஜனங்களை தம் ஜனமாக ஏற்படுத்தினது உண்மையே. ஆனால் ஜனங்களிடையே பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று (ரோமர் 5:20) என்ற வசனத்தின்படிக்கு தேவனுடைய பெரிய கிருபையினாலே ஆண்டவர் தாமே ஜனங்களுக்குள்ளே தமக்கேற்றவர்களை மட்டுமே சிநேகிக்கிறவராய் காணப்படுகின்றார். ஏசாவைக் குறித்து ஒபதியா தீர்க்கதரிசி கூறும் போது ஏசாவின் வம்சத்தினர் ஏதோமியர் இன்று வரையிலும் இஸ்ரவேலரை எவ்வள வாய் பகைத்துள்ளார்கள் என்பதை தெள்ளத் தெளிவாய் குறிப்பிட்டுக் கூறியுள்ளார் என்பதை வாசித்து அறிகின்றோம். ஒரு காரின் டயர் பஞ்சர் ஆகிவிட்டால் அதன் டியூபை வெளியே எடுத்து அதனுள், பெரிதாக காற்றைப் புகுத்திட்டுப் பார்த்தால் மாத்திரமே டியூபில் உள்ள சிறு துவாரத்தை கண்டுபிடித்திட கூடும். அதுபோன்றே, ஒபதியா, ஏசாவின் வம்சத்தாரின் தீமைகளை பெரிதாக்கி ஊதி, ஏசாவிலுள்ள ஒரு சிறிய ஆரம்பக்குறையை வெளிப்படுத்திக் காண்பித்துள்ளார். ஏசாவின் வம்சத்தாரின் தீமைகளை முன்னறிந்த தேவன் அதனாலே ஏசாவை வெறுத்தேன் என்று கூறியதை வாசிக்கின்றோம். அதனால் ஆரம்பத்தில் ஏசாவை தேவன் வெறுக்கவில்லை. ஆரம்பத்தில் அவனுக்கும் ஆபிரகாமின் அசீர்வாதங்கள் கிடைக்கப்பெற்றதே அவன் ஏதோம் சேயீர் தேசத்தின் தலைமையும் ஆனானே.


துன்மார்க்கர் பெருகினால் பாவமும் பெருகும். (நீதி.29:16) என்ற வசனத்தின்படிக்கு துன்மார்க்கரும், பாவங்களும் பெருகியுள்ள இந்நாட்களில் நம்மில் அன்பு கூர்ந்து சிநேகிக்கும் இயேசு கிறிஸ்துவை நாம் தேடிக் கண்டுபிடித்து அவரையே அண்டிட வேண்டுமே. அவர் சிநேகிக்கிறவிதமாய் நாம் இவ்வுலகிலே அவருக்காய் வாழ்ந்து காட்டிட வேண்டுமே. நாம் ஆண்டவரை அறியும் முன்பே அவர் நம்மைத் தேடி முன்குறித்துள்ளாரே. இதற்குமேல் அவர் நமக்காக செய்ய என்ன இருக்கிறது? ஒன்றுமில்லையே. ஆகையினால் நாம் தான் அவரைத் தேடிச் சென்று, அவர் நம் பேரில் அனாதிகாலங்களுக்கு முன்பே ஏற்படுத்தியுள்ள தேவ திட்டங்களை ஆராய்ந்து அறிந்து அவரின் திட்டங்களுக்காய் நம் வாழ்க்கையை அர்ப்பணித்து அவருக்காய் வாழ்ந்து முடித்திட வேண்டுமே. இது மாத்திரமே நம் தலையான கடமையாகும். ஆனால் இன்று பெரும்பாலான ஊழியர்கள், விசுவாசிகள் ஆண்டவர் நம் பேரில் கொண்ட திட்டத்தினை ஆராய்ந்து அறியாமல் தம் தம் சுயமான திட்டங்களையே, தீர்மானங்களையே தேவ திட்டங்களாக சபைகளில் அறிவித்து தேவனின் தீர்மானங் களுக்கு எதிராக வாழ்ந்து வருகின்றோம். இதனால் தான் எலியா போன்ற தீர்க்கத்த ரிசி, மோசே போன்ற பரிசுத்தவான்கள், யோபு பக்தன் கூட தேவனின் திட்டங்களை சரியாய் அறியாமல் அதன் வழியில் செய்து முடிக்க விரும்பாமல் சாவை விரும்பி ஜெபித்துள்ளார்கள். ஆனால் எலியாவைப் பின்பற்றின எலிசாவோ, எந்த சூழ்நிலை யையும் பொருட்படுத்தாமல் தனக்கு எலியா போன்று மாத்திரமல்ல, அவரை விட மேலான இரட்டிப்பான வரம் வேண்டும் என்று அவரை விட்டிடாமல் அண்டிச்சென்று தனக்கான தேவ திட்டத்தை பிரயாசப்பட்டு கண்டுபிடித்து வெற்றி பெற்றிட்டானே. இவரைப் போன்றே நாமும், இவ்வுலகிலே, நம் எஞ்சிய வாழ்நாளிலாவது நமக்கான தேவசித்தம் என்ன? நம்மைக் குறித்தான தேவனுடைய திட்டங்கள் என்ன? என்று ஆராய்ந்து அறிந்து, அதனை மாத்திரமே நம் உயிரையும் பாராமல், தனக்கென்று வாழாமல் ஆண்டவருக்கானவற்றை நிறைவேற்றி முடிக்க நம்மை அர்ப்பணிப் போமாக. பிரபலமான உலக பிரசித்திபெற்ற ஊழியர்களின் குடும்பங்களில் ஏன் திடீர் மரணங்கள், விபத்துக்கள், ஏற்பட காரணமென்ன என்று அறிய தங்களைத் தாங்கள் தாழ்த்தி அர்ப்பணிக்கின்ற ஊழியர்கள் இன்று இல்லையே. இன்னும் பிரபலமான தங்கள் ஊழியங்களை அடுத்த சந்ததியில் கொண்டு சேர்க்க தங்களுக்கு தகுந்த வாரிசுகள் இல்லையே என்று உணர்வார் உண்டோ ? ஏன் ஊழியர்களின் குடும்பங் களில் விவாகரத்துக்கள் காணப்படுகின்றன. உணருவாரில்லையே. இவைகள் நமக்கு எச்சரிப்புக்களாக உள்ளது என்றும் அறிந்திடுவார் இல்லையே.


இயேசு கிறிஸ்து இப்பூமியிலே பிறந்து, வாழ்ந்து நாம் எப்படி வாழ வேண்டும் என்று வாழ்ந்து காட்டிவிட்டுச் சென்றுள்ளாரே.. அவர் தன்னை விசுவாசி எனஂறு யாரையும் அழைக்கவில்லை, என்னைப்பின்பற்றி வா, என் அடிசுவட்டில் நட என்று ஓர் மாதிரியை வைத்துவிட்டுச்சென்றுள்ளார். ஒரு போதும் பிதாவை விட்டுப் பிரிந்தது இல்லையே. பிதாவின் சித்தத்தை மட்டுமே செய்து முடிக்க கீழ்ப்படிந்தவராய் கீழ்ப்படிதலைக்கற்று அதிலே நடந்து பூரணபட்டாரே, பிரதான ஆசாரியர் என்று நாமம் தரிக்கப்பட்டாரே (முனைவர் அங்கிகாரம்). Jesus was graduated in obedience அவரைப் போன்று கீழ்ப்படிதலில் டாக்டர் பட்டம் பெறுபவர்கள் மாத்திரமே நித்திய ஜீவனின் இரட்சிப்பினை அடைவார்கள் (எபி.5:9) என்பதே உண்மையும் சத்தியமுமாகும். அதனையே அடைந்து வாழ்ந்து முடித்திட நம்மைஅர்ப்பணிப்போமாக. ஆமென்.


பிலிப் ஜெயசிங்,


ஆசிரியர், நாசரேத் ஜெப ஐக்கியம், நாசரேத், துத்துக்குடி மாவட்டம்


 


.