நாசரேத் ஜெப ஐக்கியத்தில் விளைந்த ஓர் முத்து...

நாசரேத் ஜெப ஐக்கியத்தினரால் நாட்டப்பட்ட ஓர் வித்து!


                              விளையச் செய்தது தேவனே!


நாசரேத் ஜெப ஐக்கியம், நாசரேத்தில் 1958ஆம் ஆண்டு முதலாய் இரு வாலிபர் களால் ஆரம்பிக்கப்பட்டாலும் 1955ஆம் ஆண்டு தொட்டு சென்னை லேமேன் இவாஞ்சலிக்கல் பெல்லோசிப்யின் ஸ்தாபகரான சகோ. என்.தானியேல் அவர்களாலே சந்திக்கப்பட்ட சில வாலிப சகோதர சகோதரிகளாலே இது உருவாகியது. சகோ. தானியேல் அவர்கள் பாளையங்கோட்டையில் நடத்திய கன்வென்ஷன் கூட்டத்தில் நாசரேத் ஜெப ஐக்கியத்தின் ஒரு ஸ்தாபகரான சகோ. மைக்கேல் செல்லத்துரை அவர்கள் ஆண்டவரை ஏற்றுக் கொண்டார்கள். அதே ஆண்டில் சகோ. தானியேல் அவர்கள் சாத்தான்குளத்தில் நடத்திய கன்வென்ஷன் கூட்டத்தில் திருமதி. ஜெமி ஜேக்கப் அவர்கள் (எனது தாயார், இவ்விதழ் ஆசிரியரின் தாயார்) ஆண்டவரை ஏற்றுக் கொண்டார்கள். அன்று நானும் அக்கூட்டத்தில் ஓர் பாலகனாக என்தாயாரோடு பங்கு கொண்டேன். தேவ ஆவியானவராலே (பரி.பவுலைப் போன்று) நேரடியாக சந்திக்கப் பட்டு அபிஷேகிக்கப்பட்டிருந்த சகோ. ஜாசுவா ஞானதுரை அவர்களை சகோ. மைக்கேல் செல்லத்துரை அவர்கள் நாசரேத்தில் சந்திக்க நேரிட்டு இவர்கள் இருவ ராலேயே நாசரேத் ஜெப ஐக்கியம் 1958யில் உருவாக்கப்பட்டது. பெண்கள் பகுதியில், ஐக்கியத்தின் சார்பில் ஊழியம் செய்த முதல் பெண்மணி எனது தாயார் திருமதி. ஜெமி ஜேக்கப் அவர்களே. சில மாதங்களிலேயே நூற்றுக்கணக்கான வாலிபர்கள், ஆண்ட வரால் சந்திக்கப்பட்டு நாசரேத் ஜெப ஐக்கியம் மதுரை, கோயம் புத்தூர், சென்னை, கன்னியாகுமரி மாவட்டம் வரையிலுமாக அதன் எல்லை விரிவாக்கப்பட்டது. அநேக கன்வென்ஷன் கூட்டங்களை ஆங்காங்கே நடத்த ஜெப ஐக்கியத்தினர் அழைக்கப் பட்டார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தின் ஓர் கிராம ஆலயத்தில் சகோதரி எமியம்மாள் சன்னியாசினி அம்மாள் அவர்களால் 1963 யில் 5 நாட்கள் ஆவிக்குரிய கன்வென்ஷன் கூட்டம் நடத்த அழைக்கப்பட்டிருந்தோம். அதிலே, நாசரேத் ஜெப ஐக்கியத்தின் மூத்த சகோதரர்களான சகோ. மைக்கேல், சகோ. ஞானதுரை, சகோ. விக்கிளிப், சகோ. ஜாண் அற்புதராஜ், சகோ. ஜாண் கோயில் பிச்சை, சகோ. காலேப், சகோ. பிலிப் ஜெயசிங், சகோ. ஜோதி பாண்டியன், சகோ. தங்கராஜ் இன்னும் பலர் கலந்து கொண்டார்கள். சகோதரி எமி சன்னியாசினி அம்மாள் 5 நாட்களுக்கும் எங்களது சகல செலவுகளை ஏற்றுக் கொண்டிருந்தார். அன்று சகோதரி எமி சன்னி யாசினி அம்மாவுக்கு எடுபடியாக உதவிகளை செய்து வந்த ஒரு பையன் தான் சகோ. சாம் செல்வராஜ். ஐந்து நாட்கள் நடந்த கன்வென்ஷன் கூட்டத்திலே சகோ. சாம் செல்வராஜ் ஆண்டவரை ஏற்றுக் கொண்டார். பின் சில மாதங்கள் கழித்து ஆவிக்குரிய வளர்ச்சி பயிற்சிக்காக சகோ. சாம் செல்வராஜ் அவர்கள் நாசரேத் ஜெப ஐக்கியத்திற்கு அனுப்பப்பட்டார். சகோ. சாம் செல்வராஜ் சில வாரங்கள் நாசரேத்தில் எங்களோடு தங்கியிருந்தார். அவ்வமயம் சகோ. சாம் செல்வராஜ் அவர்களை உண்மையாய் முழு இருதயமாய் மனந்திரும்பச்செய்து, ஆண்டவருக்கு 100% ஒப்புக் கொடுக்க வழி நடத்தினவர் சகோ. ஜாசுவா ஞானதுரை அவர்களே. மேலும் அன்னாரை நாசரேத் தேரி காட்டின் ஜெபவேளையில் ஆவியினால் அபிஷேகிக்கப்பட வழி நடத்தினவர் சகோ. ஜாண் கோயில் பிச்சை அவர்களே.


(சகோதரி. ஜெமி ஜேக்கப் அம்மாள் 13.12.1980 ஆம் நாளிலும் சகோ. மைக்கேல் செல்லத்துரை அவர்கள் 16.09.2003ஆம் நாளிலும் சகோ. ஜாசுவா ஞானதுரை அவர்கள் 03.01.2005 ஆம் நாளிலும் கர்த்தருக்குள் நித்திரை அடைந்துள்ளார்கள்.ஆனாலும் நாசரேத் ஜெப ஐக்கியத்தினை, இவ்விதழ் ஆசிரியர் சகோ.பிலிப் ஜெயசிங் அவர்கள் பொறுப்பேற்று நடத்தி வருகின்றார்கள்)


அதன்பின் சகோ. சாம் செல்வராஜ் அவர்கள் வேதாகம கல்லூரி ஒன்றில் பயிற்சி பெற்று, முழு நேர ஊழியக்காரனாக அழைப்பின் எதிரொலி, இந்திய தேவசபை என்ற ஸ்தாபனத்தை 1969யில் ஆரம்பித்து இந்தியா முழுவதிலுமாக தங்கள் ஊழியங்களை செய்து வருகின்றார்கள். இன்று உலகளவிலே மிகப்பெரிய ஸ்தாபனமாக இயங்கி வருகிறது. அவர்களுடைய Echo of His call அழைப்பின் எதிரொலி என்ற மாதாந்திர பத்திரிக்கை இன்று 16 மொழிகளில் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது. அன்னாரின் 50வது ஆண்டு பொன் ஆண்டின் (Golden Jubilee year) நிறைவு நாளாகிய 10.08.2019 ஆம் நாள் அன்று சென்னையிலுள்ள ஒரு நட்சத்திர ஹோட்டல் ஹாலில் 50ம் ஆண்டு பொன்விழா ஆராதனைகளும் 51ம் ஆண்டின் ஆரம்ப ஆராதனைகளும் நடத்தப்பட்டன. நூற்றுக்கணக்கான பேர்கள் கலந்து கொண்டார்கள். அவ்விழாவில் நாசரேத் ஜெப ஐக்கியத்தின் சார்பில் நானும், சகோ. ஜாண் அற்புதராஜ் அவர்களும் சகோ. வசந்த் அவர்களும் வாழ்த்தி பேசினார்கள். இந்த வாழ்த்துதல் செய்திகளையும் அன்றைய முழு நாளின் ஆராதனைகளையும் கீழ்க்கண்ட லிங்கிலுள்ள youtube-யில் கண்டு கேட்கலாம். விருப்பமுள்ளவர் கண்டு கேட்டு ஆண்டவரை மனதார ஸ்தோத்தரிக்க அன்புடன் வேண்டுகின்றேன். நன்றி.


                    www.youtube.com - https://youtu.be/pFcgykUqd6A


சகோ. சாம் செல்வராஜ் அவர்களின் தொலைபேசி மற்றும் இமெயில், 


Cell : 98410 71858  samselvaraj333@gmail.com


சகோ. பிலிப் ஜெயசிங், நாசரேத் ஜெப ஐக்கியம், நாசரேத் Cell:9487547633