தேவ செய்தி - பிரிவு 2

                                                         பாவங்கள்


என் ஜனத்துக்கு அவர்கள் மீறுதலையும், யாக்கோபின் வம்சத்தாருக்கு அவர்கள் மீறுதலையும் பாவங்களையும் தெரிவி (ஏசாயா 58:1)


தேவ கற்பனைகளையும் அவருடைய வார்த்தைகளையும் மீறுவதே பாவம். பாவம் எப்படியெல்லாம் நம் வாழ்வில் கடந்து வருகின்றது என்பதை குறித்து கடந்த சில மாதங்களாக நாம் சிந்தித்து வருகின்றோம். இம்மாதமும் கோபாக்கினை நாளில் ஐசுவரியம் உதவாது, நீதியோ மரணத்துக்கு தப்புவிக்கும் என்பதை குறித்து சிந்திக்கப்போகின்றோம். நீதி. 11:4ல்


கோபாக்கினை நாளில் ஐசுவரியம் உதவாது. நீதியோ மரணத்துக்குத் தப்புவிக்கும் என்று எழுதியிருக்கின்றது. பரி. வேதாகமத்திலே ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப் பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். (மத்.19:24) அவனு டைய இவ்வுலக வாழ்க்கை மேன்மையானதாகவும் அதன் முடிவு மிகவும் மோசமா னதாகவும் தண்டனைக்கு தப்ப முடியாது என்பதை நாம் வாசித்து அறிய முடிகின்றது. ஐசுவரியம் என்பது இவ்வுலகின் செல்வ செழிப்பினைத் தான் கூறுகின்றது. இதன் நெகிழ்வினால் தேவனையும், அவர் செயல்களையும் மறந்து விடுகின்றனர். பரலோகம் செல்ல வேண்டிய வழி இடுக்கமும் மகா நெருக்கமும் என்று தான் வேதம் கூறுகின்றது. வாழ்வின் எல்லா துறைகளிலும் நெருக்கங்களை சந்திக்கின்றவர்கள் எப்பொழுதும் தேவனோடு கூட நெருக்கமுடையவர்களாயிருப்பார்கள். தங்கள் தங்கள் விடுதலைக்காகவும் முன்னேற்றத்திற்காக மாத்திரம் தேவனோடு நெருங்காமல் அவர் நாமம் மகிமைப்படும்படியாகவும் தேவ நீதி மற்றவர்களுக்கு கிடைக்கவும் நாம் செயல் பட வேண்டும். இவ்வுலகில் பெயருக்காக புகழுக்காக மற்றவர்கள் முன்பு மதிப்பிற்காக அவர்கள் பார்க்கும் போது நான் செழிப்பாக இருக்கின்றேன். என்னுடைய ஆசைகளும், பேராசைகளும் நிறைவேற்றப்படுகின்றது. நினைப்பதெல்லாம் சாத்தியமாகின்றது நான் ஐசுவரியவானாயிருக்கிறேன் என்று எண்ணி கொள்பவர்களே சிந்தியுங்கள்! நீங்கள் மறுமையின் நித்திய வாழ்வை அடைவது மிகவும் கஷ்டம். ஏனென்றால் இவையனைத்தும் நீங்கள் தேவனை விட்டு நீங்குவதற்கும் அவர் நீதியை செய்யா மலிருப்பதற்கும் பிசாசு உங்களை செல்வந்தர்களாக மாற்றினான் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். ஒருவேளை நீங்கள் செல்வந்தனாக இருப்பதினால் அதிகமாக உதவு கிறவராய், கொடுக்கின்றவராய்க் காணப்படலாம். ஆனால் அவைகளுக்காக கணக்கு களும், புகழும் இவ்வுலகிலேயே நீங்கள் தேடி பெற்று விடுகிறீர்கள். எனவே நீங்கள் செய்கின்ற அனைத்தும் தேவ நீதிக்கு புறம்பானதாக மாறிவிடுகின்றதே. நம்மை இவ்வுலகத்திலே தேவன் அனுப்பியிருப்பது நம் ஆசைகளையும், பேராசைகளையும், திட்டங்களையும் நடப்பிப்பதற்காக அல்ல. மாறாக தேவனுடைய சித்தமும், தேவநீதி யும் இவ்வுலகிலே நம்மூலம் நிறைவேற்றப்படுவதற்காக என்பதை நாம் உணர வேண்டும். நம்முடைய சிந்தனைகளும், செயலும் எப்படியாயிருக்கின்றது. இவ்வுலக ஜசுவரியங்களுக்காக மாத்திரம் தேவனிடத்தில் மன்றாடுகின்றவர்களாக ஜெபிக்கின் றவர்களாக காணப்படுகின்றோமா, இல்லை தேவ சித்தம் என்ன என்பதை உணர்ந்து நம்மில் நிறைவேற்றப்பட ஜெபிக்கின்றவர்களாக காத்திருக்கின்றவர்களாக காணப் படுகின்றோமா? சிந்தியுங்கள். உங்கள் நீதிகள் கந்தையே என்று கூறப்பட்டுள்ளதே. ஆகையால் நம்முடைய நீதிகள் சபைகளின் நீதி, சமுதாயத்தின் நீதி பரலோகத்தின் தேவ நீதி இவ்வுலகிலே நடப்பிக்கப்பட வேண்டும். இது ஒன்று மட்டும் தான் மரணத் திலிருந்து நம்மை தப்புவிக்கும். இதை நாம் துவங்கவில்லையென்றால் நம்முடைய பாவ வாழ்க்கையை விட்டு விலகவில்லை என்றும், நம் விருப்பங்கள் செயல்படுத் தப்பட நினைக்கின்றோம் என்பதை மறந்துவிடாதிருங்கள். ஐசுவரியத்தை நம்பி ஏமாந்துவிடாதபடி நீதியை செய்ய பரலோகம் செல்ல ஆயத்தப்படுவோம். அதற்காக தேவன் நம்மனைவரையும் ஆசீர்வதிப்பாராக.


                           சகோ. ஷீன் சைரஸ், கேரளா. Cell: 09447735981