பெண்கள் பகுதி

                                      பயபக்தியாயிருக்கக்கடவர்கள் 


"மனைவியும் புருஷனிடத்தில் பயபக்தியாயிருக்கக்கடவள்.” எபே. 5:33


இன்று நாம் பார்க்கும் போது பயபக்தி என்பது ஸ்திரீகளிடத்தில் காணப்படுவது மிகவும் குறைவுதான். ஆனால் சில ஸ்தீரிகள் போதகர்களை காணும் போதும், ஊழியர்களை காணும் போதும், இன்னும் உயர் பதவிகளை வைக்கின்றவர்களை காணும் போதும், அதோடு ஆலயத்திலும் ஆலயக்காரியங்களிலும் ஒரு வித பயபக் தியுடன் காணப்படுவார்கள். ஆனால் இவர்களின் பயபக்தி உண்மையானதா? அல்லது வெளிவேஷமா என்பது அவர்களின் இருதய சிந்தனையை அறிகின்றவர் அறிவார். அப்படிப்பட்ட பயபக்தியை கூட குடும்ப வாழ்க்கையில் புருஷனிடத்தில் காணப் படுவது அதிகமாக இல்லையென்று தான் சொல்ல வேண்டும். சில ஸ்திரீகள் ஆலயத்தில் ஆராதனைகளிலும், மற்ற ஆலயக்காரியங்களிலும் மிகுந்த பயபக்தியும், பக்திபரவசமாக காணப்படுவார்கள். ஆனால் ஆலயத்திலிருந்து வெளியே வந்தவுடனே அல்லது வீட்டிற்கு வந்தவுடனே ஆலயத்தில் போர்த்தியிருந்த பயபக்தி என்ற போர்வை கழற்றி மறுபடியும் ஆலத்தில் போகும் போது போர்த்திக் கொள்ள மாற்றி வைத்து விட்டு, பழைய துர்க்கிரியைகளையே நடப்பிப்பார்கள். நாவை அடக்கிக் கொள்ளவே மாட்டார்கள். எப்பொழுதும் தன் நாவில் ஸ்தோத்திர பலிதான் இருக்கும். இப்படிப்பட்டவர்கள் தங்கள் வாயினால் மட்டும் கர்த்தரிடத்தில் சேர்ந்து தங்கள் உதடுகளினால் எப்பொழுதும் கர்த்தரை கனம் பண்ணுகிறவர்களாக காணப்படுவார்கள். ஆனால் அவர்கள் இருதயமோ, கர்த்தருக்கு பிரியமில்லாத காரியங்களையும், அவர் வசனத்திற்கு கீழ்ப்படியாதவர்களாகவும் காணப்படுவார்கள். இவர்கள் நினைப்பது இப்படிப்பட்ட பயபக்தியான கிறிஸ்துவ வாழ்க்கை போதும், அதினால் நாம் பரிசுத்த வான்களாகவும், பரலோக ராஜ்யத்திற்கு பங்காளியாகவும் மாறலாம் என்பதே உண்மை . வேதம் கூறுகின்றது உங்களில் ஒருவன் தன் நாவை அடக்காமல் தன் இருதயத்தை வஞ்சித்து தன்னை தேவபக்தியுள்ளவனென்று எண்ணினால் அவனு டைய தேவ பக்தி வீணாயிருக்கும் என்று (யாக்.1:27) நாவை அடக்ககூடாமல் இருக்கின்றவர்களே உங்கள் தேவ பக்தி எப்படிப்பட்டதாக இருக்கிறது. தேவனுக்கு முன்பு என்பதை சிந்தித்து உணர்ந்து கொள்ளுங்கள். அது மட்டுமல்லாமல் புருஷனிடத்தில் பயபக்தியுடன் காணப்படாமல், வேறெங்கு பயபக்தியை அறிந்து கொள்ள முடிகின்றது. அவள் தன் புருஷனுக்கு கொடுத்த மரியாதை, பணிவு, தாழ்மை, நம்பிக்கை, பற்று, இவைகளை மிகவும் தெளிவாக அறிந்து கொள்ள முடிகின்றது. அவள் பயபக்தியின் ஆழத்தை ஆண்டவன் என்ற வார்த்தையினால் உணர முடிகின் றது. இப்படிப்பட்ட பயபக்திதான் புருஷனுக்கு முழுமையாக கீழ்ப்படிய உறுதுணை யாக இருக்குமென்பதில் எந்த சந்தேகமுமில்லை. அதுமட்டுமல்லாமல் மனைவிகள் புருஷனிடத்தில் பயபக்தியுடன் காணப்படுவார்களென்றால் குடும்பத்திற்குள் சமா தானம் நிழலிடும், அன்பு பூரணப்படும் குடும்பத்தில் பலவிதமான கொடிய துக்கங் களும், நெருக்கங்களும், கஷ்டங்களும் நேரிட்டாலும் அதைசகிக்கும் தன்மையைப் பெற்றுக் கொண்டு புருஷனோடு இந்த உலகத்தில் வாழ கொடுக்கப்பட்ட நாட்கள் வரையிலும் பிரிந்து வாழாமல் புருஷனும் மனைவியுமாக சேர்ந்து வாழும் பாக்கியத்தைப் பெற்றுக் கொள்ளுவது மட்டுமல்லாமல் வேதம் கூறுவது போன்று அந்தப்படி புருஷர்களே உங்களுடனே கூட அவர்களும் நித்திய ஜீவனாகிய கிருபை யைச் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களானபடியினால் (1பேதுரு 3:7) என்று. அப்படியே நாம் புருஷனோடு இந்த உலகத்தில் சேர்ந்து வாழும் போது அவர் மூலமாய் பரலோக ராஜ்யத்தையும் சுதந்தரித்து கொள்ளும் பாக்கியத்தையும் பெற்றுக்கொள்ளுவோம். என்பதை நன்றாய் அறிந்து உணர்ந்து கொள்ளுங்கள். இன்று சபைகள் பெருகுகிறது, ஜனங்களும் சபைகளில் அதிகமாக சேருகின்றார்கள். ஆனால் ஆத்மீகம் அல்லது பரிசுத்தத்தோடு பயபக்தியோடு வாழுகின்றவர்கள் மிகவும் குறைந்து கொண்டே தான் வருகின்றார்கள். சபைகள் பல விதத்தில் தேவனுடைய பெயரினிமித்தம் வளர்ச் சியடைகின்றது. வளர்ச்சியென்பது பணத்தை சேர்ப்பதில் மட்டுமே. ஒரு ஆத்மா பரலோகம் செல்ல வேண்டும் என்பதற்கான எந்த முயற்சியை சபை எடுத்து கொள் ளுகிறது. சிந்தித்து பாருங்கள். இதனால் ஸ்திரீனிடத்தில் பயபக்தி என்பது வெளி வேஷமாக மட்டும் இருந்து கொண்டிருக்கின்றது. இதனால் புருஷனுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதை, பணிவு, இவைகளை கொடுக்கவும் முடியவில்லை. அதோடு புருஷனிடம் நம்பிக்கையும் பற்றும் இல்லாமல் வீணான பக்தி வாழ்க்கை வாழ்கின் றார்கள். பெண்கள் சுதந்திரம் அடைய வேண்டுமென்று விரும்பியது அந்த காலம். ஆனால் இன்று அநேக குடும்பங்களில் புருஷர்கள் தான் தங்கள் கிரியைகளிலும் சிந்தனைகளிலும் சுதந்திரமடைய முடியாமல் மனைவியின் பேச்சிற்கும், செயலுக் கும் அடிபணிந்து அடிமையாக காணப்படுகின்றார்கள் என்பது உண்மையான இரக சியம். இன்று அநேக குடும்பங்களில் பெண்கள் (மனைவி) தான் ஆதிக்கத்தை செலுத்து கின்றவர்களாக காணப்படுகின்றாள். குடும்பத் தலைவன் என்றிருந்த குடும்ப அட்டை கூட குடும்ப தலைவிக்கு அதிகாரம் கொடுத்து சட்டங்களில் திருத்தம் செய்யப் பட்டுள்ளது. ஸ்திரீ ஒருபோதும் புருஷனுக்கு அடிமையல்ல. ஆனால் வேத வசனத் திற்குக் கீழ்ப்படிய விரும்பும் ஸ்தீரி அல்லது பயபக்தியுள்ள ஸ்திரீ புருஷனைக் கனம் பண்ணுவாள். வேதம் கூறுகின்றது. பெரியோர் முதல் சிறியோர் மட்டுமுள்ள எல்லா ஸ்திரீகளும் தங்கள் புருஷரைக் கனம்பண்ணுவார்கள் (எஸ்தர் 1:20) அதுமட்டு மல்லாமல் எந்தப் புருஷனும் தன் வீட்டிற்குத் தானே அதிகாரியாயிருக்க வேண்டு மென்றும் (எஸ்தர்1:22) கூறுகின்றது. எந்த குடும்பத்திற்கும் புருஷன் தான் அதிகாரி யாக இருக்க வேண்டுமென்று வேதாகமம் நம்மை படிபிக்கின்றது. அதிகாரம் என்பது ஆண்டுகொள்ளுவது. வேதம் கூறுகின்றது உன் ஆசை. உன் புருஷனைப் பற்றியி ருக்கும். அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான் என்றார். (ஆதி.3:16) எந்த ஸ்திரீ தன் புருஷனால் ஆண்டு கொள்ளப்படுகிறாளோ! அந்த ஸ்திரீ தன் புருஷனிடத்தில் பயபக் தியாயிருப்பாள் என்பதும் உண்மை . அப்படிப்பட்ட ஸ்திரீயால் மட்டுமே தன் புருஷன் எப்படிப்பட்டவராக இருந்தாலும் அவரை ஆதாயப்படுத்திக் கொள்ள முடியும். வேதம் கூறுகின்றது. அந்தபடியே மனைவிகளே உங்கள் சொந்தப் புருஷர்களுக்குக் கீழ்ப்படிந் திருங்கள் அப்பொழுது அவர்களில் யாராவது திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர் களாயிருந்தால் பயபக்தியோடு கூடிய உங்கள் கற்புள்ள நடக்கையைப் பார்த்து போதனையின்றி மனைவிகளின் நடக்கையினாலே ஆதாயப்படுத்திக் கொள்ளப்படு வார்கள். (1பேதுரு 3:1, 2) என்று. நீங்கள் கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்கின்ற ஸ்திரீயாக காணப்பட்டும் உங்கள் புருஷன் இதுவரையிலும் தன் பாவ சுபாவ குணத்திலிருந்து விடுதலையாகி வரவில்லையென்றால் உங்களையே தற்பரிசோதனை செய்து பாருங்கள். நான் என்செயல்களில் எப்படி காணப்படுகின்றேன்? நான் பூரணமாக புருஷனுக்குக் கீழ்ப்படிகின்றேனா? அவர் நிபந்தனைக்குள்ளாக தானா வாழ்கின்றேன் என்னால் புருஷனிடம் பயபக்தியுடன் காணமுடிகின்றதா? சிந்தித்து மனந்திரும் புங்கள். புருஷனையும் ஆதாயப்படுத்திக் கொள்ளுங்கள், மாறாக நான் மனந்திரும் பினவள் என்று சபையின் அடிஸ்தான அஸ்திபாரங்களை மட்டும் வைத்து தங்களை மதிப்பீடு செய்வீர்களானால் உங்கள் பயபக்தியும் பக்தியும் கைவிடப்பட்ட கன்னிகை கள் போன்று ஏமாற்றமடைய செய்யும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. கர்த்தர் உங்களை அறியேன் என்று தானே சொல்லுவார். வேதம் கூறுகின்றது தேசத்தில் பக்தியுள்ளவன் அற்றுப்போனான். மனுஷரில் செம்மையானவன் இல்லை. அவர்க ளெல்லாரும் இரத்தஞ் சிந்தப் பதிவிருக்கிறார்கள். அவனவன் தன் சகோதரனை வலையிலே பிடிக்க வேட்டையாடுகிறான் என்றார். (மீகா 7:2) இன்று நம்முடைய தேசமும், சபைகளும், குடும்பங்களும், இப்படிதானே காணப்படுகின்றது. ஆகவே இரட்சிப்படைய விரும்புகின்ற நாம் வஞ்சிக்கப்படாமலிருக்க வசனத்திற்குக் கீழ்ப்படிந்து புருஷனிடத்தில் பயபக்தியாயிருப்போம். அதற்கு தேவன் தாமே நம்மனைவருக்கும் கிருபை புரிவாராக. ஆமென்.


                                              ஹெலன் ஷீன், கேரளா. Cell: 09947301633