God's Message Part I

நீங்கள் இந்த மலையருகே தங்கியிருந்தது போதும். உபா.1:6


நீங்கள் இந்த மலைநாட்டைச் சுற்றித்திரிந்தது போதும், வடக்கே திரும்புங்கள். உபா.2:3


        உலகத்திலே பிறக்கும் குழந்தைகள், குழந்தைகளாகவே இருந்து விடுவதில்லை. அவர்கள் வளர்ந்து பூரண புருஷராக வேண்டும். பள்ளியில் படிக்கும் குழந்தைகள் முதல் வகுப்பிலே என்றும் இருப்ப தில்லை. படித்து முடித்து உயர்ந்து செல்லவேண்டும். ஒவ்வொரு நிலையிலும் அதற்கான தேர்வுகள் உண்டு அவற்றிலே தேர்வு பெற்று அடுத்த மேல் வகுப்பிற்கும் செல்ல வேண்டும். இது போன்றே ஆவிக்குரிய வாழ்க்கையிலும் நாளுக்கு நாள் நாம் வளர்ச்சியடைந்து சகலவற்றிலும் பூரணராக வேண்டுமென்றும், அதற்கான பரீட்சை களில் ஜெயம் பெற்றவர்களாக தேர்ச்சியடைய வேண்டு மென்பதே தேவனுடைய தீர்மானமாகும். ஒருவன் ஆவிக்குரிய வாழ்வில் வளர்ச்சியடையவேண்டுமானால் நமக்கு முன்பாக வைக்கப்பட்டுள்ள ஆண்டவரின் முன்மாதிரி வாழ்வினை மட்டுமே நன்கு அறிந்தவர் களாய் அவர் நடந்தபடியே அவருடைய அடிச்சுவடுகளிலே நாமும் நடக்கின்றவர்களாய் காணப்படுவோமானால் நிச்சயமாய் ஆண்டவர் நம்மிலே எதிர்பார்த்து நிர்ணயித்த பூரணத்தை நிச்சயம் அடைந்து ஆண்டவரை பிரியப்படுத்துகின்றவர்களாய் காணப்படுவோமே. ஆண்டவர் தாமே நம்மைக் குறித்து கூறியதாவது. ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து தன் சிலுவையை அனுதினமும் எடுத்துக் கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்.


       ஆதாம் ஏவாள் வீழ்ச்சிக்குப்பின் முதல் முதலாக ஆண்டவருக்குள் பூரண புருஷனாக வளர்ந்த யோபு பக்தன் உத்தமனும், சன்மார்க்கனும் தேவனுக்குப் பயந்தவனும், பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந் தான் என்றும் அவனைப் போல பூமியில் ஒருவனும் இல்லை என்றும் வேதத்திலே அவரைக் கறித்து வாசிக்கின்றோம். கிறிஸ்துவுக்குள் பூரணமான ஒரு புருஷனின் லட்சணத்தை யோபுவின் வாழ்க்கையில் வாசிக்கின்றோம். அவன் தன் அன்றாட வாழ்க்கையிலே தானும் தன் பிள்ளைகளும் அறிந்தோ , அறியாமலோ அவரவர்களின் இருதயங் களில் ஆண்டவரை தூஷித்தவர்களாய் பாவஞ் செய்துவிடக் கூடாது என்பதற்காக அடிக்கடி தன் குடும்பத்தினரை அழைத்து அவர்களை பரிசுத்தப்படுத்தி அவர்களின் இலக்கத்தின்படியே சர்வாங்க தகனபலிகளைச் செலுத்துகிறவனாய் காணப்பட்டான். அவன் தன் வாழ்க்கையிலே பெற்ற சகல செல்வ செழிப்புகளையும் கர்த்தரே தனக்கு கொடுத்தார் என்றும் அவைகளை இழக்குகின்ற வேளைகளிலும் கர்த்தர் அவைகளைத் திரும்ப எடுத்துக் கொண்டார் என்றும் கூறிஆண்டவருக்கு ஸ்தோத்திர பலிகளையே செலுத்தி ஆண்டவரை ஆராதிக்கிறவனாகவே காணப்பட்டான். யோபு தன் அவல நிலமையின் காலத்திலும் (23:10) இதோ நான் முன்னாக போனாலும் அவர் இல்லை, பின்னாக போனாலும் அவரைக் காணேன். இடது புறத்தில் அவர் கிரியை செய்தும் அவரைக் காணேன். வலது புறத்திலும் நான் அவரைக் காணாதபடிக்கு ஒளிந்திருக்கிறார். ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார். அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன் என்று கூறியுள்ளார்.


       பழைய ஏற்பாட்டின் நாட்களில் ஒருவன் ஆண்டவருக்கு ஒரு பொன்னாக மட்டுமே விளங்கக் கூடும். ஆனால் புதிய ஏற்பாட்டின் நாட்களிலே நாம் ஒரு பொன்னாக அல்ல தேவகுமாரனின் சாயலுக்கு ஒப்பாகவே ஆண்டவரின் சகல தெய்வீக லட்சணங்களையும் பெற்றவர் களாய் தேவனுடைய தற்சுரூபமுமாய் (கொலோ.1:15) மாறிட வேண் டுமே அதனையே ஆண்டவர் நம்மைக் குறித்து தீர்மானித்து முன்குறித் துள்ளார். இந்த இலக்கையே நாம் யாவரும் அடைந்ததாக வேண்டும். மாறாக இதனை அடையாமல் நான் இத்தனை பேர்களுக்கு இத்தனை ஆண்டுகளாக சுவிசேஷம் கொடுத்துள்ளேன். இத்தனை பேர்களை தாங்கி வருகின்றேன். இத்தனை சபைகளை, ஆலயங்களை கட்டியுள் ளேன் என்போமானால் அன்னார்களைப் பார்த்து அக்கிரம் செய்கை காரர்களே என்று ஆண்டவரே தீர்ப்பு வழங்கிவிட வேண்டி வருமே.


       இன்று நாம், ஒரே வட்டத்திலே சுற்றி சுற்றி வாழ்ந்துவருகின்றோம். காலை ஜெபம், மாலை ஜெபம் வாராந்திர உபவாச கூடுகை, வாராந் திர ஊழியம், ஞாயிறு ஆராதனை இவற்றினையே வழக்கமாக கொண்டுள்ளோம். பரி. பவுல் கூறியது போன்று நம் பிராணனை கூட அர்ப்பமாய் எண்ணி ஒரு சில தியாக செயல்களையாவது செய்துள் ளோமா? லாபமானவைகளைகூட எண்ணிடாமல் ஆண்டவருக்காய் இழந்துள்ளோமா? ஆண்டவர் தம் ஜீவனையே நமக்காக அளித்து அன்புகூர்ந்ததினால் அவருக்கு ஈடாக எதனை அர்ப்பணிக்க முன்வந் துள்ளோம். வழக்கமாக செல்லும் ஹோட்டலிலே வைக்கப்பட்ட ஆகாரத்துமுன் தலைகுனிந்து ஜெபித்து தேவனை மகிமைப் படுத்தியுள்ளோமா? செல்லும் பொது கூடுகைகளுக்கு கையில் வேதாகமத்தை சுமந்து தேவனுக்கு சாட்சியாக விளங்கியுள்ளோமா? வேலை பார்க்கும் அலுவலக மேஜையிலே வேதாகமத்தை வைத்து நாம் பரலோகபிரஜையே என்பதாக காண்பித்து வருகின்றோமா? எதிர்பாராமல் சந்திக்கும் பாவசோதனையின் போது உடன் தானே பரலோகத்தின் தேவனைநோக்கி அபயமிட்டு, தேவனே, பூமியிலே உள்ள உம்முடைய சொத்து, ஓர் ஆபத்தில் இருக்கிறது என்று கூறியவர்களாய் பாவங்களை ஜெயித்து வருகின்றோமா. இவையெல் லாம் அவசியமல்ல என்று எண்ணினவர்களாய், இஸ்ரவேல் மக்கள் கானானை முழுமையாய் அடைந்திடாமல் ஒரு சில மலை நாட்டையே சுற்றி சுற்றி வந்தது போன்று காணப்படுகின்றோமா. சுற்றி சுற்றி வருபவர்கள் ஒருபோதும் கானானை சென்றடையப் போவதே இல்லை. ஆண்டவர் தாமே கூறுகின்றார். சுற்றியது போதும், குடியிருந்தது போதும் வடக்கே திரும்பி பயணித்திடுவோமாக என்ற வாக்கின் படிக்கே பூரண வாழ்வை அடைய கடந்திடுவோமாக. இந்நிலமையை அடைய விரும்பாதவர்கள், அடைய முற்படாதவர்கள் பின்மாற்ற மடைந்தவர்களே ஆவர். இவர்களுக்கு தேவனே எதிரியாகிவிடுவார். பரலோகத்தையும் இவர்கள் இழந்திடுவர் என்பதே உண்மையாகும்.


       பரி. பவுல் தீர்க்கத்தரிசனமாக உரைத்தது போன்று கடைசி நாட் களில் விசுவாசிகள், ஊழியர்கள் தேவன் தாமே முன்குறித்துள்ள படிக்கு ஆண்டவரின் சாயலுக்கு ஒப்பாக மாறிடாமல், தற்பிரியராய், சுயநலபிரியராய், சுபாவ அன்பில்லாதவர்களாய் மாறிடுவார்கள். கீழ்க்கண்ட வசனங்களின்படிக்கு வாழ்கின்றவர்களை தேவன் தாமே இரட்சிப்பதும் கூடாததே.


1. ஒருவனும் தன்னைத்தானே வஞ்சியாதிருப்பானாக. ஒருவன் தன்னை ஞானி என்று எண்ணினால் அவனுடைய சிந்தனைகள் வீணாயிருக்கிறதே. 1கொரி.3:18. தேவன் ஞானிகளுக்கும், கல்வி மான்களுக்கும் மறைத்து பாலகர் போன்ற சுபாவமுடையவர்களுக்கே தம் உண்மையை வெளிப்படுத்துகின்றார். மத்.11:25 2.


2. வஞ்சிக்கப்படாதீர்கள், குடிக்கும் இச்சைக்கும் அடிமைப்பட்டவன் மற்றும் அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிப்ப தில்லை. 1கொரி.6:9 3.


3. ஒருவன் தான் ஒன்றுமில்லாதிருந்தும் (Zero) தன்னை ஒரு பொருட் டென்று எண்ணினால் தன்னைத் தானே வஞ்சிக்கிறவனாவான். கலா.6:3 4.


4. அதன்படி செய்து அதிலே நிலைத்திருக்கிறவர்களாயிருந்தால் அவனே தன் செய்கைகளில் பாக்கியவானாயிருப்பான். யாக்.1:22 5.


5. ஒருவன் தன் நாவை அடக்காமல் தன் இருதயத்தை வஞ்சித்து தன்னை தேவ பக்தியுள்ளவனென்று எண்ணினால் அவனுடைய தேவபக்தி வீணாயிருக்கும். யாக்.1:26 6.


6. நமக்கு பாவமில்லையென்போமானால் அல்லது நாம் பாவஞ் செய்யவில்லை என்போமானால் நாம் ஆண்டவரை பொய்யராக்கு கிறவர்களாய் மட்டுமல்ல நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயுமிருப் போம் என்பதே உண்மை . ஆனால் நாம் பாவஞ்செய்துள்ளோம் என்று அவற்றினை அறிக்கையிட்டால் மாத்திரமே தேவன் நம்மை சுத்திகரிப் பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். (1யோ.1:8)


7. கடைசி நாட்களில் விசுவாசிகள், ஊழியர்கள் இரட்சிக்கப்படத்தக் கதாய் சத்தியத்தின் மேலுள்ள அன்பை அங்கிகரியாமல் சாத்தானின் செயலின்படி சகல வல்லமையோடும், அடையாளங்களோடும், பொய் யான அற்புதங்களோடும் தங்களை தேவர்களாக காண்பிப்பார்கள். அவர்கள் சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிற வர்களானபடியால், அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாக கொடியவஞ்சகத்தை தேவனே அவர்களுக்கு அனுப்புவார். தேவனே அன்னார்களுக்கு எதிரியானால் யார் அவர்களை மீட்கக்கூடும். கூடாதே. 11தெச.2:10  சாத்தான் வஞ்சித்தால் தேவனுடைய பெலத்தினால் அவனை ஜெயித்திடலாம். நம் இருதயமே நம்மை வஞ்சிக்குமானால் அதனையும் தேவனின் பெலத்தினால் ஜெயித் திடலாம். ஆனால் தேவனே நம் எதிரியானால் யாராலும் நாம் ஜெயம் பெறக்கூடும், கூடாதே. நிச்சயமாய் ஆக்கினைக்குட்படுத்தப்படுவோம் என்பதே உண்மை .


       பரி. பவுல் தன்னுடைய 25 ஆண்டுகள் கால ஊழியத்திற்கு பின்பாக அவர் தன்னைக் குறித்து கூறியது, அகாலபிறவி போன்ற நான் என்று தானே கூறியுள்ளார். (1கொரி.15:8) தொடர்ந்து 30 வருட ஊழிய காலத் திற்கு பின்பு தன்னை, தான் பரிசுத்தவான்களெல்லாரிலும் சிறியவ னாகிய நான் என்று தானே கூறியுள்ளார். (எபே.3:8) பின்னும் தொடர்ந்து, 31வருட கால ஊழியங்களுக்குப் பின்பு பாவிகளில் பிரதான பாவி நான் என்று தானே தன்னைப் பற்றி கூறியுள்ளார் (1தீமோ.1:15). வருடங்களும், அனுபவங்களும், கூடுந்தோறும் தன்னைத்தானே தாழ்த்துவதையே தன்னில் கொண்டவராய் தேவனையே மேன்மைப்படுத்தியுள்ளாரே. இவரின் வழிபாதையே பூரணராகும்படியாக கடந்து செல்லும் பாதையாகும். என்றாலும் பரி, பவுல் தன்னைக் குறித்து சொல்கையில் நான் விரும்புகிற நன்மை செய்யாமல் விரும்பாத தீமையையே செய்துவிடுகிறேன் என்றல்லவா கூறி பாவ அறிக்கையை தன் வாழ்வாக கொண்டுள்ளார். இவர்களே பூரணத்தை, கானானை அடைகின்றவர்களாவர்.


       தாவீதை என் இருதயத்திற்கு ஏற்றவனாக கண்டேன் என்றும் அவன் எனக்கு சித்தமானவைகளையெல்லாம் செய்வான் என்றும் தாவீதைக் குறித்து தேவன் தாமே கூறுகையில், தாவீதின் பாவ அறிக்கையை அறிந்துள்ளோமா? நான் காரியம் அறியாத மூடனானேன். உமக்கு முன்பாக மிருகம் போலிருந்தேன் என்று சங்.73:22யில் சங்கீதகாரன் ஆசாபின் மூலம் பாடியுள்ளார். நாம் இவ்விதமாய் பாவ அறிக்கை செய்வது வழக்கமாயுள்ளதா? இல்லையென்போமானால் மோசே போன்று 6 லட்சம் பேர்களை, ஆயிரமாயிரம் அற்புத அடையாளங்க ளோடு வழி நடத்தினவர்களாய் காணப்பட்டாலும் கானானுக்குள் பிரவேசிப்பதில்லை என்று மோசேயைப் பார்த்து கூறிய தேவன் எத்தகைய ஊழியர்களாயிருந்தாலும் பரலோகத்தை, கானானை சுதந்தரிக்க அனுமதிக்கமாட்டாரே. வஞ்சிக்கப்படாதிருப்போமாக. நாமும் வஞ்சியாதிருப்போமாக. ஆமென்.


                                            சகோ. பிலிப் ஜெயசிங்.