God's Message Part II (August 2019)

                                                   பாவங்கள் 


               என் ஜனத்துக்கு அவர்கள் மீறுதலையும், யாக்கோபின் வம்சத்தாருக்கு அவர்கள் மீறுதலையும், பாவங்களையும் தெரிவி                                                            (ஏசாயா 58:1)


             கர்த்தருடைய வார்த்தைகளையும், அவருடைய கற்பனை களையும் மீறுவதே பாவம். அன்பானவர்களே நம்முடைய வாழ்க் கையில் எப்படியெல்லாம் பாவம் கடந்து வருகின்றது என்பதை குறித்து கடந்த சில மாதங்களாக நாம் சிந்தித்து வருகின்றோம்.


              தேவனை ஆராதிக்கின்றவர்களாகிய நாம் எப்படியாய் அவரைத் தொழுதுகொள்ளுகின்றோம் என்பதைக் குறித்தும், அது ஆவியிலும், உண்மையிலும் ஆகாவிட்டால் பாவம் என்பதை குறித்து சிந்திப்போம்.---- யோ. 4:24ல் தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுது கொள்ளுகிறவர்கள் ஆவியோடும், உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ள வேண்டும் என்று காண்கின்றோம். இங்கு நாம் அறிய வேண்டியது தேவன் பரிசுத்தராய் பரித்த ஆவியாயிருக் கிறார். நம் தேவன் ஆராதனைகளையும், தொழுகையும் விரும்பு கிறவர். அவர் ஒருவரே அதற்கு பாத்திரராயிருக்கிறார். இஸ்ரவேல் ஜனம் எகிப்தின் அடிமைத்தனத்திலிருக்கும் பொழுது தேவன் மோசேயைக் கொண்டு பார்வோனிடத்தில் கூறினது இஸ்ரவேலராகிய என் ஜனத்தை எனக்கு ஆராதனை செய்யும்படி நீ அனுப்பிவிட வேண்டும் என்று. இதனை மறுத்ததினாலே பார்வோன் பெரும் விளைவுகளை சந்திக்க வேண்டியதாயிற்று. இதனை நாம் பார்க்கும் போது ஆராதனைகளும், தொழுகைகளும் நம் தேவனுக்கு மிகவும் உகந்ததாக காணப்படுகின்றது. நம்மில் எத்தனைப்பேர் உண்மை யோடும், சத்தியத்தோடும், முழு மனதோடும் கர்த்தரை ஆராதிக் கின்றோம். ஆராதனை என்பது பரிசுத்த ஆவியின் நிறைவில் செய்ய வேண்டியதாகும். அதாவது உலக மேன்மைகளுக்காகவோ உலக தேவைகளுக்காகவோ செய்ய வேண்டிய ஒன்றல்ல. ஏனென்றால் நம்முடைய இவ்வுலக தேவைகளை நாம் கேட்பதற்கு முன்பே அவர் அறிந்திருக்கிறார். நம் தேவைகளை நிவிர்த்தி செய்வதற்காக மாத்திரம் ஆராதனை செய்தால் அது ஆவிக்குரிய ஆராதனையாகாதே. உலகின் சிருஷ்டிகள் அனைத்திலும் மனிதனை தவிர எல்லாமே சிருஷ்டிப்பு முதற் துவங்கி இந்நாள்வரை அவர் சொல்லுக்குக் கீழ்ப் பட்டு செயல்படுகின்றனவே! நம்மை உலகில் படைத்து நம் சித்தங் களையும், விருப்பங்களையும் கர்த்தர் நிறைவேற்றும்படியாகயல்ல. மாறாக கர்த்தருக்கு நம்மை குறித்தான நோக்கமுண்டு அதனை உணர்ந்து அதை செயல்படுத்த வேண்டும். முதலில் அதற்காக நம்மை அர்ப்பணிக்க வேண்டும். மனந்திரும்ப வேண்டும். பிறகு பரிசுத்த ஆவியின் பெலத்தோடு நாம் தேவனை ஆராதிக்க வேண்டும். உண்மையாய் நாம் அவரை ஆராதிக்கும் போது மறுமையின் நித்திய வாழ்விற்காக நம்மை பூரணப்படுத்தி இரட்சிப்புக்கு நேராய் நம்மை வழிநடத்துவார். நம்முடைய மெய்யான ஆராதனையில் தேவனை தரிசிக்க வேண்டுமானால் இருதயத்தில் சுத்தம் வேண்டுமென்று மத்.5:8ல் நாம் பார்க்கின்றோம். இருதயமானது மகா திருக்குள்ளதும் கேடுள்ளதுமாயிருக்கிறதென்று வேதத்தில் வாசிக்கின்றோம். அப்படிப்பட்ட இந்த இருதயம் மிகவும் பரிசுத்தமுள்ளதாக இருக்க வேண்டுமானால் நாம் எவ்வளவு அதிகமாக தேவனுக்குப் பயப்படுகின் றவர்களாகக் காணப்பட வேண்டும். சுயநலம் என்பதனை முழுமை யாக அகற்றிவிட வேண்டும். வேதத்தின் வசனங்களை முழுமையாக கைக்கொள்வதன் மூலம் தேவ சாயலடையலாம். நாம் கிறிஸ்துவை போலாகாவிட்டால் கிறிஸ்தவர்கள் என்று சொல்ல முடியாதே. அப்படியாக வேண்டுமானால் இயேசு செய்தது போன்று பிதாவின் சித்தம் இன்னதென்று தெரிந்து அதனை பூர்த்திகரிக்கின்றவர்களாக இருக்கவேண்டும். செயல்கள் பரிசுத்தமானதாக இருக்க வேண்டும். ஏனென்றால் கர்த்தர் இருதயங்களை சோதித்தறிகின்றார். நமக்கும் ஆண்டவருக்கும் மட்டுமே தெரியக் கூடிய நம்முடைய இருதயம் மிகவும் பரிசுத்தமானதாக இருக்க வேண்டியது அவசியமாகும். இத்த கைய பரிசுத்தத்தோடுள்ள ஆராதனைகளில் மட்டுமே ஆண்டவர் பிரியப்படுவாரேயன்றி மனிதர்கள் காண்கின்ற அளவில் நாம் காண்பிக்கும் ஆடல், பாடல், மேளங்கள், ஒலிபெருக்கிச் சத்தங்கள், சுய புகழ்ச்சிக்காக பணம் வசூலிக்கச் செய்யும் எந்த ஆராதனைகளி லுமல்ல என்பதை நாம் அறிந்துணர வேண்டும். இவ்வுலகத்தோடு ஒத்து போகின்ற கிறிஸ்தவ வேஷங்களை அடையாளம் கண்டு பரிசுத்த தேவனை, பரிசுத்த ஆவியோடும், உண்மையோடும் ஆராதித்து கடைசியில் நித்திய வாழ்வை பெற அதற்கான கிருபையை பெற நம்மை தாழ்த்தி அர்ப்பணிப்போம். சகல புகழ்ச்சியும், மகிமையும் கர்த்தருக்கே. ஆமென்.


                    சகோ . ஷீன் சைரஸ், கேரளா. cell: 09447735981