பெண்கள் பகுதி
"எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும் சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.” 1தீமோத்தேயு 2:14
இன்றைக்கு எந்த மனுஷனை கேட்டாலும் இரட்சிக்கப்பட்டவன், இரட்சிக்கப்பட்டவள் என்று தான் சொல்லுகின்றார்கள். சில சபை பிரிவினர்கள் நினைப்பது எங்கள் சபை பிரிவைச் சேர்ந்தவர்கள் மட்டும் தான் இரட்சிக்கப்பட்ட தேவ ஜனம் அல்லது தேவபிள்ளைகள் என்று மார்பை தட்டி பெருமைபடுகிறார்கள். அதோடு நீங்கள் இரட்சிக் கப்பட வேண்டுமானால் எங்கள் சபையோடு சேர்ந்து கொள்ளுங்கள் என்றும் அதின் பேரில் சேர்த்தும் கொள்ளுகின்றார்கள். சிலர் நீங்கள் இந்த சபையில் தான் ஆராதிக்க வேண்டும் என்றும் சொல்லுகிறார்கள். இன்னும் சிலர் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டவர்களெல்லோரும் இரட்சிக்கப்பட்டவர்கள் என்கிறார்கள். சிலர் வெள்ளை ஆடையை அணிந்துக் கொள்ளுவதே தங்களை இரட்சிக்கப்பட்டவர்களென்று காட்டிக்கொள்ளுவதற்கே. சிலர் ஆபரணங்களை கழற்றுவதே தங்களை இரட்சிக்கப்பட்டவர்களென்று காட்டிக் கொள்ளுவது. இன்றைக்கு சில சபைகள் ஆபரணங்களை கழற்றாவிட்டாலும் பரவாயில்லை. வெள்ளை ஆடை அணியாவிட்டாலும் பரவாயில்லை. நீங்கள் முழுகி ஞானஸ்நானம் மட்டும் பெற்றால் போதும் இரட்சிக்கப் படுவீர்கள் என்று சொல்லி தங்கள் ஆதாய மார்க்கமாய் ஜனங்களை சபையில் அனுதினமும் சேர்த்துக் கொண்டு வருகின்றார்கள். இப்படியே அநேக சடங்காச்சாரங்களையும், அடிஸ்தானங்களையும் திரும்ப திரும்ப போட்டுக்கொண்டு நாங்கள் இரட்சிக்கப்பட்ட கூட்டமென்றும் விசுவாசித்தால் போதும் இரட்சிக்கப்படலாமென்றும் சொல்லிக் கொள்ளுகின்றார்கள். இப்பொழுது நாம் காண்கிற தெல்லாம் வெளிதோற்ற கிரியைகளே. இவைகளெல்லாம் இரட்சிக்கப்படவேண்டிய வழிகளேயல்ல என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். இவைகள் எல்லாம் வேண்டாமா? என்று கேட்டால் வேண்டுமாயிருக்கலாம். ஆனால் அவைகளில் சத்தியம் காணப்பட வேண்டும். இரட்சிப்பு என்பது கர்த்தருடையது என்று வேதத்தில் அநேக இடங்களில் வாசித்து அறிய முடிகின்றது. அந்த மகத்தான இரட்சிப்பை பெற்றுக் கொள்ளுவது மிகவும் எளிதானதென்று மக்கள் நினைக்கின்ற விதத்தில் மேய்ப்பர்கள் வழி நடத்துகின்றார்கள் என்பது உண்மை . வேதத்தில் நாம் பார்க்கும் போது லூக்.13:23,24ல் ஒருவன் இயேசுவை நோக்கி; ஆண்டவரே இரட்சிக்கப்படுகிறவர்கள் சில பேர் தானோ என்று கேட்டான். அதற்கு அவர் இடுக்கமான வாசல் வழியாய் உட் பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள். அநேகர் உட்பிரவேசிக்க வகைதேடி னாலும் அவர்களாலே கூடாமற்போகும் என்று உங்களுக்குச் சொல்லு கிறேன் என்று தானே சொல்லப்பட்டுள்ளது. அப்படியானால் இரட்சிக் கப்படுகிற வழிகள் மிகவும் கடினமானது தானே. அப்படியானால் நாம் உட்பிரவேசிக்க சத்தியத்தை அறிகின்ற அறிவைப் பெற வேண்டும் என்பதையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டுமே. தேவன் எல்லாரும் இரட்சிக்கப்படவேண்டும், சத்தியத்தை அறியும் அறிவை அடைய வேண்டுமென்று சித்தங்கொண்டுள்ளாரே என்பதை தானே அறிய முடிகின்றது.
எப்படி இரட்சிப்பை பெற்றுக்கொள்ளுவது :
இரட்சிப்பை பெற்றுக் கொள்ள நம்முடைய ஆத்துமா வாஞ்சிக்க வேண்டும். அப்படி வாஞ்சித்தால் மட்டும் போதாது சங்.85:9 கூறுவது போன்று அவருடைய இரட்சிப்பு நமக்கு சமீபமாயிருக்க நாம் கர்த்தருக்குப் பயப்படும் பயத்தோடு நாள்தோறும் காணப்பட வேண்டும். இன்னும் நாம் கற்பனைகளின் படி செய்ய எப்பொழுதும் கவனமாயிருக்க வேண்டும். வேதம் கூறுவது போன்று முந்தின நடக்கைக்குரியமோசம் போக்கும் இச்சைகளாலே கெட்டுப் போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்து போட்டு, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும், தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக் கொள்ளுங்கள் என்றும் எபே.4:22-24) அது மட்டுமல்லாமல் நாம் களைந்து போட வேண்டிய பழைய மனுஷனின் கிரியைகள் எது என்பதையும் அதே அதிகாரத்தில் தொடர்ச்சியாக கூறப்பட்டுள்ளது. பொய்யை களைந்து, அவனவன் பிறனுடனே மெய்யைப் பேசக்கடவன் என்றும் கோபங்கொண்டாலும், பாவம் செய்யாமலிருக்க வேண்டு மென்றும் நமக்குள் வருகின்ற எரிச்சல்கள் சூரியன் மீண்டும் அஸ்தமிக்கிறதற்கு முன்பாகவே தணியக்கடவது என்றும் திருடுகிற வனாக இருக்கிறவன் திருடாமலிருக்க வேண்டுமென்றும் ஒருவன் பணத்தில் குறைச்சலுள்ளவனாக இருக்கும் போது அவனுக்கு உதவி செய்யும் பொருட்டு தனக்கு பணம் உண்டாயிருக்கும்படி தன் கைகளினால் நலமான நீதியான, நியாயமான) வேலை செய்து பிரயாசப்படக்கடவன் என்றும் கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாமென்றும், கேட்கிறவர்களுக்கு பிரயோஜனமுண்டாகும் நல்ல வார்த்தைகளை பேச வேண்டுமென்றும் பரிசுத்த ஆவியைப் துக்கப்படுத்தாதிருக்க வேண்டுமென்றும் சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும் மற்ற எந்ததுர்க்குணமும் உங்களை விட்டு நீங்க வேண்டு மென்றும் தேவன் உங்களுக்கு மன்னித்தது போன்று நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள் என்றும் சொல்லி இருக்கிறதே. நாம் இவைகளையெல்லாம் விட்டு விட்டவர்களா? சிந்தித்து பாருங்கள். ஸ்திரீகளைக் குறித்து நாம் பார்க்கின்ற போது இரட்சிக்கப்பட்டவள் என்று சொல்லிக் கொள்ளுகிறவர்கள் தான் அதிகம். முந்தி நீங்கள் உங்கள் புருஷனுக்கு கீழ்ப்படியாதவர்களாக இருந்திருக்கலாம். ஆனால் இரட்சிக்கப்பட்டவர்களென்று சொல்லுகிறவர்களே சிந்தித்து பாருங்கள். உங்கள் கிரியைகளில் மாற்றமுண்டோ , நீங்கள் தரித்தி ருக்கின்றது பழைய மனுஷனையா? அல்லது புதிய மனுஷனையா? நீங்கள் முன்பு பொய்களை புருஷனோடும், பிறரோடும் பேசியிருப் பீர்கள். இப்பொழுதோ எப்படி பேசுகிறீர்கள். எத்தனையோ தடவை நாம் முன்பு கோபங் கொண்டு பாவஞ் செய்திருப்போம். எரிச்சல் கொண்டிருப்பதும் அவைகள் எல்லாம் அறிக்கை செய்து விட்டு விடப்பட்டதா? இல்லை இன்றும் பாவம் செய்கின்றவர்களாகவும் புருஷன் மேலும், பிள்ளைகள் மேலும் மற்றவர்கள் மேலும் எரிச்சல் தணியாமல் இருந்துக் கொண்டு வைராக்கியத்துடனும், கசப்புடனும், கோபத்துடனும், இப்படியே துர்க்குணத்துடனும் காணப்படுகின் றீர்களா? பிறருக்கு உதவும் மனசு இல்லாதவர்களாக காணப்படுகின் றீர்களா? கெட்ட வார்த்தைகளை பேசுகின்றவர்களாக இன்னும் அநேக ஸ்திரீகள் காணப்படுகின்றார்கள். இவர்களில் அநேகர் இரட்சிக்கப்பட் டவர்களென்றும் சொல்லிக் கொள்ளுகின்றவர்கள். நீங்கள் எப்படி காணப்படுகின்றீர்கள். உங்கள் வார்த்தைகள் மற்றவர்களுக்கு ஆறுதலையும், சத்தியத்தையும் கொடுக்கின்ற பிரயோஜனமான வார்த்தைகளா? பரிசுத்த ஆவியைப் பெற்றவன் என்று சொல்லிக் கொள்ளுகின்றவர்கள். நீங்கள் பெற்ற பரிசுத்த ஆவியை துக்கப் படுத்தாதப்படிக்கு சத்தியத்தின்படி வாழ முடிகின்றதா? உங்களிடம் மன்னிக்கிற குணமிருக்கின்றதா? இல்லை இன்றும் புருஷன் சொன்ன வார்த்தையை அல்லது புருஷன் செய்த துரோகத்தை நான் மறக்கவும் மன்னிக்கவும் மாட்டேன். பிள்ளை செய்த தவறை அல்லது துரோ கத்தை மறக்கவும் மன்னிக்க மாட்டேன் மற்றவர்கள், சகோதரன், பக்கத்து வீட்டார், சத்துரு, செய்தவைகளை நான் மறக்கவும் மன்னிக்கவும் மாட்டேன் என்று பிடிவாதமாக கிறிஸ்துவின் போர் வையை வேஷமாக தரித்துக்கொண்டு வாழ்ந்து வருகின்றீர்களா? சிந்தித்து உணருங்கள். இரட்சிக்கப்பட வேண்டிய வழிகளை தெரிந்துக் கொள்ளுங்கள். இரட்சிப்பு என்பது ஒரு நாளுக்குரியதல்ல ஒருநாள் இயேசுவை விசுவாசித்து வாயினால் அறிக்கையிட்டு, இருதயத்தில் விசுவாசித்து இரட்சிக்கப்பட்டோம் என்பதல்ல. அது அனுதினமும் காணப்பட வேண்டும். அனுதினமும் மனந்திரும்புதலின் கனிகளைக் கொடுக்க வேண்டும். வேதம் கூறுகின்றது. இரட்சிக்கப்பட்டவர்களைக் கர்த்தர் அனுதினமும் சபையில் சேர்த்துக் கொண்டு வந்தார் என்று (அப்.2:47) அதற்கு முந்தின வசனம் கூறுகின்றது. அவர்கள் ஒருமனப் பட்டவர்களாய் என்றும் அனுதினமும் தேவாலயத்திலே தரித்திருந்து என்றும், மகிழ்ச்சியோடும், கபடமில்லாத பரிசுத்தமான இருதயத் தோடும் தேவனைத் துதித்து ஜனங்களெல்லாரிடத்திலும் தயவு பெற்றிருந்தார்கள் என்று தான் வாசிக்க முடிகின்றது. அப்படிப்பட்ட வர்களை தானே கர்த்தர் அனுதினமும் தன்னுடைய ஐக்கியத்தில் சேர்த்துக் கொண்டு வந்தார். இன்றைக்குள்ள சபையை நாம் பார்க்கும் போது ஒருமனப்பாட்டின் ஆவி உண்டா? சபைக்குள் ஐக்கியம் உண்டா? எதற்கெடுத்தாலும் பிரிவினையே. கர்த்தருக்கென்று கொடுக்கும் காணிக்கையின் கணக்கில் உண்மை உண்டோ, பந்தியில் பரிசுத் தமுண்டோ, சபைக்குள்ளே எல்லா வீடுகளிலும் சென்று மகிழ்ச்சி யோடு போஜனம் பண்ண மனதுண்டோ ? அப்படி சென்றாலும் உண் மையான பரிசுத்தமான, இருதயத்தோடுதானா மகிழ்ச்சியில் பங்கு பெறுகின்றீர்கள். தேவனை துதித்து ஜனங்களெல்லாரிடத்திலும் தயவுபெற்று கொள்ள முடிகின்றதா? ஒரு சபை விசுவாசி மற்ற சபை விசுவாசியோடு உண்மையான அன்போடு பழகவும் அவர்கள் மகிழ்ச்சியில் பங்குகொள்ளவும் மனதுண்டோ ? இரட்சிக்கப்பட்டவர்கள் ஒன்றாய்க் கூடுகின்ற அவைக்குள்ளும் சங்கத்திற்குள்ளும் கசப்பு, மூர்க்கம், கோபம், பகை, விரோதம் வருமா? சிந்தியுங்கள். ஏன் இப்படி வருகின்றது என்றால் சத்தியத்தை அறியவேண்டிய விதத்தில் அறியவில்லை என்பது உண்மை . சத்தியம் பைத்தியமாக தோன்று வதும் காரணம் என்பது உண்மை . எப்படி சத்தியம் பைத்தியமாகும் என்று பார்ப்போமானால் ஒரு உதாரணத்தை சொல்லுகிறேன். மனைவியானவள் தங்கள் சொந்த புருஷருக்கு எந்தக் காரியத்திலும் கீழ்ப்படிய வேண்டுமென்பது சத்தியம். அது எப்படி சாத்தியமாகும். ஸ்தீரீகளாகிய நாங்கள் புருஷனுக்கு அடிமைகளா என்று நினைப்பதும், செயல்படுத்துவதும் சத்தியத்தை பைத்தியமாக எண்ணுவதே. இரட்சிக்கப்பட வேண்டுமென்று விரும்புகின்றவர்கள் தங்களுக்கு சொல்லப்பட்ட வசனத்தை அல்லது சத்தியத்தை பூரணமாக உட்கொள்ளுவதே தேவ பெலனாயிருக்கின்றது.
சகேயு :
அவனுக்குள் இரட்சிப்பு வந்தது எப்பொழுது? அவன் முதலாவது வாஞ்சிக்கின்றான். இயேசு எப்படிப்பட்டவரோ என்று அவரை பார்க்க அதன் காரணமாக அவரைப்பார்க்க அவர் சமீபமாயிருக்கிறார் என்று அறிந்து ஒரு காட்டத்திமரத்தில் ஏறினான். காத்தியிருக்கிறான். இயேசு அவன் ஆத்மா வாஞ்சையையும், காத்திருப்பையும் அறிகின்றார். அவன் வீட்டில் அல்லது அவன் உள்ளத்தில் தங்க விரும்புகின்றார். அப்படியென்றால் கர்த்தருடைய வசனம் அவன் உள்ளத்தில் அல்லது இருதயத்தில் எழுதிக்கொள்ள வேண்டும், பாதுகாக்க வேண்டும். கிரியை செய்ய வேண்டும் என்று விரும்புகின்றார். அவர் விருப்பத் தின்படியே அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து இறங்கி சந்தோஷத்தோடே அவரை அழைத்துக் கொண்டு போனான். அங்கு சகேயு சத்தியத்தை (இயேசுவை ஏற்றுக் கொண்டதினிமித்தம் வசனம் கிரியைச் செய்ய தொடங்கியது. பாவங்களை அறிக்கை செய்து விட்டுவிடுகிறான். அவரிடத்திலிருந்து கிருபையை பெற்றுக்கொள்ளு கிறான். பழைய மனுஷனை களைந்து போடுகிறான். உள்ளத்தில் புதிய ஆவியை பெற்றவனாக அல்லது கிறிஸ்துவின் மெய்யான நீதியிலும், பரிசுத்தத்திலும் அவருடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்தவனாக காணப்படுகிறான். அப்பொழுது இயேசு கூறுகின்றார். (லூக்.19:1-9) இந்த வீட்டிற்கு இரட்சிப்பு வந்தது. இவனும் ஆபிரகாமுக்குக் குமாரனாயிருக்கிறான் என்று. ஆம் பிரியமானவர் களே, இரட்சிப்பு என்பது நாம் சத்தியத்தை அறிய வேண்டிய விதத்தில் அறிந்து காத்துக் கொண்டு உணர்ந்து இருதய பலகையில் எழுதிக் கொண்டு அனுதினமும் தங்கள் வாழ்க்கையில் கிரியைச் செய்யும் போது பெற்றுக் கொள்ள முடியும். நாம் ஆபரணங்களை திருடன் திருடாத வண்ணம் எப்படி பாதுகாப்போமோ அப்படியே விதைக் கப்பட்ட வசனத்தை இருதய பலகையிலிருந்து பிசாசானவன் எடுத்துக் கொள்ளாத வண்ணம் மிகவும் எச்சரிக்கையாயிருக்க வேண்டும். அப்படி காணப்படாமலிருந்தால் இரட்சிப்பை இழந்துவிடுவோம் என்பதும் நிச்சயம். ஆகவே உண்மையுள்ளவர்களாக தேவன் நம்மேல் என்ன சித்தங்கொண்டுள்ளார் என்பதை அறிந்து சத்தியத்திற்கு செவி சாய்ப்போம். வேதம் கூறுகின்றது சிலுவையைப் பற்றிய உபதேசம் கெட்டுப் போகிறவர்களுக்கு பைத்தியமாயிருக்கிறது. இரட்சிக்கப் படுகிற நமக்கோ அது தேவ பெலனாயிருக்கிறது என்று. தேவ பெலனை பெற்றவர்கள் தங்கள் புருஷன் இரட்சிக்கப்பட்டவர்களாக இருந்தாலும் கெட்டுப்போகின்றவர்களாக இருந்தாலும் அந்த சூழ்நிலைக்கேற்ற பிரகாரம் தேவனுடைய வசனத்தின் மூலம் வாசனை கொடுக்கின்றவர்களாக இருக்க முடியும் என்பது உண்மை . வேதாகமத் தில் பவுல் 11கொரி.2:15ல் கூறுகின்றார். இரட்சிக்கப்படுகிறவர் களுக்குள்ளேயும், கெட்டுப் போகிறவர்களுக்குள்ளேயும் நாங்கள் தேவனுக்கு கிறிஸ்துவின் நற்கந்தமாயிருக்கின்றோம் என்று. நாமும் இரட்சிக்கப்பட்டவர்களென்று சொல்லி கொள்ளுவதில் காரியமில்லை. முடிவு பரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான். (மத்.24:13) நாமும் அவ்வாறே முடிவுபரியந்தமும் நற்கந்தம் வீசுகின்றவர்களாக காணப்பட்டு பரலோக ராஜ்யத்தைசுதந்தரிக்க தேவன் தாமே கிருபை செய்வாராக. ஆமென்.
ஹெலன் ஷீன், கேரளா. Cell: 09947301633