. நான் நடக்கும் வழிகளையும் நடைகளையும் தேவன் பார்க்கவில்லை என நினைத்தேன் - கர்த்தர் என்னிடம் அவருடைய (என்) கண்கள் மனுஷருடைய வழிகளை நோக்கியிருக்கிறது. அவர்களுடைய நடைகளையெல்லாம் அவர் பார்க்கிறார் என்றார். யோபு 34:21 இரட்சிக்கப்படுவது எல்லாராலும் கூடும் என நினைத்தேன்.- கர்த்தர் என்னிடம் இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள், அநேகர் உட்பிரவேசிக்க வகை தேடினாலும் அவர்களாலே கூடாமற்போகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். லூக்.13:23,24 பயங்கரமான அற்புதங்களையும், அதிசயங்களையும் செய்கின்றவர்களோ? பலவிதமான நுணுக்கமான ஊழியங்களைச் செய்கின்றவர்களோ? பயங்கரமான இசைக்கருவிகள் மூலம்தேவனை ஆராதிக்கின்றவர்களோ? ஆலயத்தில் உயர் பதவிகளை பெற்றிருப்பவர்களோ? பலவிதமான உயர் பட்டங்ளைப் பெற்று ஊழியங்களை செய்கின்றவர்களோ? இவர்களில் யார் பாக்கியவான்கள் என்று எண்ணினேன் - கர்த்தர் என்னிடம் எஜமான் வரும்போது அப்படியே செய்கிறவனாய்க் காணப்படுகிற ஊழியக்காரன் பாக்கியவான் என்றார். லூக்.12:43 4. தேவ அன்பை பெற்றுக் கொள்ள தசமபாகமும், காணிக்கையும் கொடுத்தால் போதும் என நினைத்தேன். - கர்த்தர் என்னிடம் நீங்கள் ஒற்தலாம், மருக்கொழுந்து முதலிய சகலவிதபூண்டுகளிலும் தசமபாகம் கொடுத்து நியாயத்தையும் தேவ அன்பையும் விட்டு விடுகிறீர்கள் என்றார். லூக்.11:42 5. அப்படியானால் தசமபாகம்கொடுக்க வேண்டாமோ என நினைத்தேன் - கர்த்தர் என்னிடம் இவைகளையும் செய்ய வேண்டும், அவைகளையும் விடாதிருக்க வேண்டுமே என்றார். லூக்கா 11:42 "மனந்திரும்பினவர்கள் கர்த்தரின் பதில்களுக்கு கீழ்ப்படிகிறவர்களாவார்கள்” ஹெலன் ஷீன், கேரளா. NEWS
This Month's Thought