நம் சிந்தனைகளும்....... கர்த்தரின் பதில்களும்........
இயேசுவின் உண்மையான சீஷர்கள் என்று இவர்களை எப்படி அறிந்து கொள்ளுவேன் என நினைத்தேன். - கர்த்தர் என்னிடம் நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்து கொள்ளுவார்கள் என்றார். யோவா. 13:35 2.
நான் கிறிஸ்தவன்(இரட்சிக்கப்பட்டவர், கிறிஸ்துவின்ஜனம்ஆகையால் தேவனுடைய பிள்ளையென்று எண்ணினேன்.-கர்த்தர் என்னிடம் அவர்கள் ஆபிரகாமின் சந்ததியாரானாலும் எல்லாரும் பிள்ளைகளல்லவே என்றார். ரோமர் 9:7
ஒருவன் உயிரோடிருப்பதும், மரணத்தை அடைவதும் அவன் செய்த நன்மை , தீமை என்று எண்ணினேன் - கர்த்தர் என்னிடம் அவர் தமக்குச் சித்தமானவனைக் கொன்று போடுவார். தமக்குச் சித்தமானவனை உயிரோடே வைப்பார் என்றார். தானி. 5:19 4.
நான் நித்திய ஜீவனை அடைவதற்கு என்ன செய்யவேண்டுமென்று எண்ணினேன். - கர்த்தர் என்னிடம் நீ ஜீவனில் பிரவேசிக்க கற்பனைகளைக் கைக்கொள் என்றார். மத். 19:17 5.
முன்னோர்களின் ஆசாரங்களை கைக்கொண்டு வருகின்றவர்கள் தேவனை கனம்பண்ணுகிறேன் என்று தானே சொல்லுகிறார்களே என நினைத்தேன். - கர்த்தர் என்னிடம் இந்த ஜனங்கள் தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ தூரமாய் விலகியிருக்கிறது என்றார். மாற்கு 7:6
"மனந்திரும்பினவர்கள் கர்த்தரின் பதில்களுக்கு கீழ்ப்படிகிறவர்களாவார்கள்”
சகோதரி ஹெலன் ஷீன், கேரளா.
============================================================================
பாவங்கள்
என் ஜனத்துக்கு அவர்கள் மீறுதலையும், யாக்கோபின் வம்சத்தாருக்கு அவர்கள் மீறுதலையும் பாவங்களையும் தெரிவி (ஏசாயா 58:1)
தேவ கற்பனைகளையும் அவருடைய வார்த்தைகளையும் மீறுவதே பாவம். அன்பானவர்களே, கடந்த சில மாதங்களாக நம் வாழ்க்கையில் பாவம் எப்படியெல்லாம் கடந்து வருகின்றது என்பதைக் குறித்து நாம் சிந்தித்து வருகின்றோம். இம்மாதம் 1யோ.3:14 துவங்கியுள்ள வசனங்களில் சகோதரனிடத்தில் அன்பு கூராதவன் மரணத்திலே நிலைகொண்டிருக்கிறான் என்று கூறப்படுகின்றது. இப்படி நம்மில் காணப்படும் அன்பின் குறைவினால் நாம் எத்தகைய பெரிய விபத்துக்குள்ளாகின்றோம் என்பதைக் குறித்து நாம் சிந்திப்போம்.
1யோ.3:15 தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனுஷ கொலை பாதகனா யிருக்கிறான். மனுஷ கொலைபாதகனெவனோ அவனுக்குள் நித்திய ஜீவன் நிலைத்திராது என்று அறிவீர்கள். அன்பானவர்களே நித்திய ஜீவனை இழந்து விட கூடிய அளவிற்கு பெரிய பாவமாக காணப்படுகின்ற ஒன்று தான் பகை. அதிலும் தங்கள் சகோதரர்களோடுள்ளப் பகை இந்நாட்களில் நம் சமூகத்தில் ஒருவருக் கொருவர் உதவி செய்ய முன் வராதவர்களாயும், வெளியரங்கமாக சிரித்து பேசினாலும் உள்ளத்தில் கோபம், விரோதம், பகை, பொறாமை இவைகள் நிறைந்தவர்களாக காணப்படுகின்றனர். கொலை செய்யாதிருப்பாயாக என்பது தேவன் மோசேயின் மூலம் மனுக்குலத்திற்கு அளித்த கட்டளையாகும். பழைய ஏற்பாட்டின் காலத்தில் ஒருவனைக் கொல்லுவது தான் கொலையாகக் கருதப்பட்டது. ஆனால் புதிய ஏற்பாட்டின் காலத்தில் இயேசு கிறிஸ்து கூறுகையில் தன் சகோதர னிடம் கோபமாக காணப்படுகின்றவன் கூட மனுஷ கொலை பாதகனென்று கூறுகின் றார். ஆகவே விசுவாசிகளாகிய நாம் நாங்கள் யாரையும் கொலைச் செய்யவில்லை என்று சொல்லிக் கொள்ள வேண்டாம். ஏனென்றால் அநேக இடங்களிலே அநேக முறை நாம் மற்றவர்களிடம் கோபமாக பகையுணர்வோடு பேசியிருக்கின்றோம். வேதத்தின்படி இவைகளெல்லாம் கொலை பாதகங்களாகத்தான் கணக்கிடப் படுகின்றது. | கிறிஸ்தவர்களாகிய நாம் மறுமையின் நித்திய வாழ்வை குறித்தான நம்பிக்கையுடையவர்களாக காணப்படுகின்றோம். எப்படியாயினும் பரலோகம் வேண்டுமென்ற சிந்தையினால் தான் நாள்தோறும், ஜெபம், வேதம் வாசிப்பு, உபவாசங்கள் மூன்று நாள், பத்து நாள், இருபத்தியொன்று நாள், நாற்பது நாள், ஆலயக்கூடுகைகள், ஆவிக்குரிய கூடுகைகள், விடுதலை விழாக்கள், கோடி ரூபாய்ச் செலவிட்டு ஆலயம் கட்டுதல், ஊழியம் செய்தல், ஊழியங்களையும், ஊழியர் களையும் தாங்குதல், காணிக்கைகளை அளித்தல், நேர்ச்சைகளை அளித்தல், குறிப்பிட்ட இடங்களில் சென்று வழிபடுதல், புண்ணிய இடங்களுக்கு சுற்றுலா செல்லுதல், ஆலய அசன காரியங்களுக்கு முக்கியத்தும் அளித்தல் இப்படியாய் அநேக காரியங்களில் தங்களை ஈடுபடுத்தி கொண்டு எப்படியாவது அவர் வருகை யில் எடுத்துக் கொள்ளப்படலாம் என்ற எண்ணத்தோடு வாழ்ந்து வருகின்றனர். ஒருவன் என்னை பின்பற்றி வர விரும்பினால் அவன் தன்னைத் தான் வெறுத்து தன் சிலுவையை எடுத்து எனக்கு பின்வரக்கடவன் என்று சொன்ன இயேசுவை பின்பற்ற விரும்பாமல் தங்கள் சுயத்தின்படி மட்டும் செய்துவிட்டு பரலோகம் சென்று விடலாம் என்று எண்ணுகின்றனர்.
இன்னும் அநேகர் பேச்சிலே தங்ளை பரிசுத்தவான்களாக்கி நடக்கின்றனர். ஆனால் பரிசுத்தத்திற்காக வேதத்தின்படி எந்த செயலையும் செய்யவோ, வேதம் வெறுக்கின் றவற்றை செய்யாமலிருக்கவோ முயற்சிப்பதில்லை. ஜனம் தங்களைத்தானே நேசிக்கின்றவர்களாகவும் மற்றவர்களிடம் துளி அளவுகூட அன்பு இரக்கம், பணிவு காட்டாதவர்களாகத்தான் காணப்படுகின்றனர். 1யோ. 3:18 கூறுகிறது. என் பிள்ளைகளே வசனத்தினாலும், நாவினாலும் அல்ல கிரியையினாலும் உண்மை யினாலும் அன்பு கூரக்கடவோம் என்கின்றதே. நம்மில் எத்தனைபேர் எதிர்ப்பார்ப் பில்லாமல் கிரியைகளினாலே அன்பு செலுத்துகின்றோம். இல்லையேல் நாம் எதிர்ப்பார்க்கின்ற நித்திய வாழ்வு நம்மை விட்டு அகன்றிடுமே. கடைசியில் ஏமாற்றம் அடைந்திடுவோமே. சிலர் தங்கள் குதிரைகளிலும், ரதங்களிலும் நம்பிக்கையாயிருக் கிறார்கள் என்று வேதத்திலே வாசிக்கின்றோம். இந்த வசனம் குதிரையும் இரதமும் உள்ளவர்களுக்குத்தானே அதிலும் யுத்தத்திற்கு போகிறவர்களுக்கு தானே என்றெல் லாம் நிர்விசாரமாய் எண்ணி விடாதீர்கள். ஏனென்றால் நாம் இந்த உலகத்திலே வாழ்கின்ற நாளெல்லாம் நமக்கு பொல்லாத ஆவிகளோடும், பிசாசோடும் நமக்கு போராட்டம் (யுத்தம்) உண்டு என்று பரி. வேதாகமம் கூறுகின்றது. நமக்கிருக்கின்ற பணமாகிய குதிரைகளையும், பதவி, அந்தஸ்து ஆகிய இரதத்தாலும் இந்த போராட்டத்தை ஜெயித்து விடலாம் என அநேகர் எண்ணுகின்றனர். என்னை பின்பற்றுங்கள் என்றும் என்மேல் நம்பிக்கையாயிருங்கள் என்றும் சொன்ன கர்த்தரை மறந்து அவர் வழிகளையும் விட்டு விடுகின்றனர். 1யோவான் 3:14ன் படி சகோதரனிடத்தில் அன்பு கூராதவன் மரணத்திலே நிலை கொண்டிருக்கிறான் என்கின்றது. நாம் எப்படியாய் மற்றவர்களை நேசிக்கின்றோம். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமலும், யாரைக் குறித்தும் தவறான சிந்தனைகள் இல்லாமலும் ஒவ்வொரு வரிலும் இருக்கின்ற அவர்களுடைய சுபாவங்களோடு கூட நல்லதா னாலும், தீயதானாலும்) அவர்களை நேசிக்க நம்மால் முடிகிறதா. நம்மிடம் உள்ள தெய்வீக அன்பை மற்றவர்களுக்கு நம் கிரியையின் வழியே காண்பிக்க முடிகின்றதா. ஒருவர் குறையை இன்னொருவரிடம் கூறி மற்றவர்களை இகழ்ந்து பேசி, தூற்றி திரிகின்றீர்களா, அந்நியரை உபசரிக்க நாடாமலிருக்கின்றீர்களா. உங்கள் பரலோக கனவு வீணாகி விடுமே. உலகத்திலே எல்லாராலும் நெருக்கப்பட்டாலும் தேவ அன்பிலே நிலைத்திருக்க கிரியைகளினாலே அன்பு செலுத்தி நித்திய வாழ்வை பெற்றுக் கொள்ள நம்மை ஆயத்தப்படுத்துவோம். தேவன் அதற்காக கிருபை புரிவாராக. ஆமென்.
சகோ . ஷீன் சைரஸ், கேரளா. cell: 09447735981