ஆசிரியர் மடல் JULY 2019


கிறிஸ்துவுக்குள் அன்பார்ந்த வாசகர்களுக்கு, 


                    அன்பின் வாழ்த்துக்கள். இயேசு கிறிஸ்துவின் பெரிதான கிருபையினால் 6 மாதங்களைக் கடந்து 7ஆம் மாதத்திற்குள்ளே வந்துள்ளோம். இன்று வரை நம்மனை வருக்கும் எவ்வித குறைவும் இல்லாமல் தேவன் தாமே நம்மை நடத்தி வந்துள்ளார். அவர் இவ்வுலகின் கடைசி நாட்களில் இயேசு தாமே சிலுவைக்கு போகும் முன்பு கூறியது ஆண்டவரின் சந்தோஷம் நம்மில் நிலைத்திருக்கும்படியாகவும்,நம்முடைய சந்தோஷம் நிறைவாயிருக்கும்படியாகவும் நம் சந்தோஷத்தையே ஆண்டவர் அக்கரையாக கூறி நம்மை தைரியப்படுத்தினவராகவேகடந்து சென்றுள்ளார். அப்போஸ்தலனாகிய பரி. பவுலும் சீஷர்களாகிய யோவான், யாக்கோபும் கூட தம் கடைசி நாட்களில் நம் சந்தோஷத்தையே நிறைவாய் பெற்றிடவும் தம்மை வாழ்த் தினவர்களாய் ஜெபித்து கடந்து சென்றுள்ளார்கள்.


ஆகையினால் கடந்து வந்த நம் வாழ்வின் கடந்த கால நிகழ்வுகள் நம்மை அன்றைய மனிதனாக ஒருபோதும் இன்று அடையாளப்படுத்தப்படக்கூடாது என்பதிலேயே உறுதி கொண்டிடுவோமாக.


கடந்த நாட்களில் நாம் எப்படியெல்லாமோ வெட்கக்கேடாக வாழ்ந்துள்ளோம். ஆனால் இன்று ஆண்டவராகிய இயேசு நம்மை தம் இரத்தத்தினால் பாவங்களற கழுவியுள்ளார், பரிசுத்தவான்களாக்கியும் உள்ளார். நீதிமான்களாக்கியும் உள்ளார் (1கொரி.6:11)


பழையவைகளெல்லாம் ஒழிந்து போயின. எல்லாம் புதியதாயின


ஆகையால் தேவனுக்கேற்ற துக்கம் மனஸ்தாபப்படுகிறதற்கு இனி இடமில்லையே (11கொரி.7:10)


நம்முடைய பாவங்களை கிழக்குக்கும் மேற்குக்கும் உள்ள தூரமாய் நம்மை விட்டு நீங்கி விட்டாரே. (சங்.103:12)


பழைய நம் வாழ்வின் சம்பவங்களை நாம் மறக்கக்கூடாமல் காணப்படலாம். அவற்றினை நாம் இப்போது மாற்றியமைக்கவும் முடியாது. ஆனால் நாம் மாறிவிட்டோமே. (லூக்.8:35 பிசாசுகள் விட்டு போன மனுஷன் வஸ்திரம் தரித்து இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்திருந்தானே)


பழைய வாழ்க்கை நம்மை இப்பொழுதுள்ள புதிய வாழ்வுக்கு வழிவகுத்து மாற்றியமைத்து விட்டதே (ரோமர் 12:2)


நம் பழைய வாழ்வைக் குறித்து பேசப்பட்டவைகளெல்லாம் இப்பொழுது நமக்கு அவைகள் ஒரு பொருட்டல்லவே (1சாமு.16:7)


கடந்தவைகள் கடந்தவைகளே இப்பொழுது நாம் பரிபூரண முதிர்ச்சியை நாடி ஓடிவருகின்றவர்களானோம். (11கொரி.12:9)


ஆனாலும் நம் பழைய வாழ்க்கையின் சம்பவங்களால் இப்பொழுது நாம் பிறரை ஆறுதல்படுத்தி நல் வழி நடத்துகின்றவர்களானோமே.


பழையவைகளை ஒழித்துக்கட்ட ஒரு காலம் கொடுக்கப்பட்டதே (பிர.3:6)


இப்பொழுது நாம் தேவனுடைய செய்கையாயிருக்கின்றோம். (எபே. 2:10)


எத்தனை அற்புதம். ஆச்சரியம்.


பொதுவாக அற்புதங்கள் 3 வகைகளில் வெளிப்படுத்தப்படுகின்றன.  நாம் தெரிந் தெடுத்து சென்றுகொண்டிருக்கும் பாதை ஜீவனுக்கு போகிற வாசல் இடுக்கமும் வழி நெருக்கமுமாயிருப்பதினால் ஒவ்வொரு நிமிஷமும் நாம் தேவனுடைய கரத்திலி ருந்து அற்புதங்களையே அனுபவித்து நெருக்கங்களிலிருந்து காக்கப்பட்டுக் கொண்டே வருகின்றோம். நம் வாழ்வில் கண்ணால் கண்ட அற்புதங்களை விட காணாத அற்புதங்களே மிக அதிகம். நம் ஒவ்வொரு போக்கிலும் வரத்திலும் நாமும் நம் குடும்பமும் கண்மணியைப் போல காக்கப்பட்டு வருகின்றோம் என்பதை அறிந்து ஒவ்வொரு நாட்களிலும் காலையிலும் மாலையிலும் ஆண்டவருக்கு நன்றி செலுத்துவோமாக. நமக்கு அவர் என்றும் எப்பொழுதும் அற்புதமே.


ஆண்டவரை அறியாத புறஜாதிமக்களுக்கும் தேவன் தம்மை தேவாதி தேவனாக உயிருள்ள உண்மை தேவனாக அவர்களுக்கு வெளிப்படுத்த அற்புதங்கள் ஏராளம் அவர்களுக்கு அளிக்கப்படுகின்றன. இவைகளினால் ஆண்டவரின் இரட்சிப்புக்குள் அவர்கள் வழி நடத்தப்படுகின்றார்களே ஒழிய, இந்த அற்புதங்கள் அவர்களுக்கு இரட்சிப்பு ஆகாது. அற்புதங்களை பெற்ற அன்னார்கள் இரட்சிப்புக்குள் பாவமன் னிப்புக்குள் வராவிட்டால் அவர்கள் பெற்ற அற்புதங்கள் தரிசனங்கள் விருதாகிவிடுமே.


ஆனால் ஒருமுறை ஆண்டவரின் இரட்சிப்பினை ருசிபார்த்து விட்டு பின்மாற்றம் கொண்டவர்களை. ஆண்டவர் தாமே அவர்களை சிட்சிக்கின்றார். அன்னார்களின் சிட்சையின் காலத்திலும் அன்னார்கள் தங்களை முழு மனதாய் ஒப்புக்கொடுத்து மனந்திரும்பும் அர்ப்பணிப்பின் தரத்திற்கு ஏற்ப அவர்களுக்கு ஆண்டவர் அளிக்கும் அற்புதங்களின் காலமும் தரமும் நிர்ணயிக்கப்படுகிறது. மேலும் அன்னார்கள் பெறும் அற்புதம் அன்னார்களின் பழைய நிலமையை அடைவதே ஆகும். இழந்ததை திரும்ப பெறுவதே அன்னார்களின் பிரதான அற்புதமாகும். ஆகவே ஆண்டவர் சகல பேர்களுக்கும் பாரபட்சமில்லாமல் அற்புதங்களை அள்ளி கொடுக்கின்றவராகவே இன்றும் எப்பொழுதும் இருக்கின்றார்.


ஆகையால் நாம் யாவரும் இன்று ஆண்டவரின் சமுகம் நின்று நம் செட்டைகளை தரைமட்டுமாக தளரவிட்டிடுவோமாக. அப்பொழுது மேலான தேவ மண்டலத் திலிருந்து ஒரு சத்தம் நம் ஒவ்வொருவருக்கும் கேட்கும்படியாக பிறக்கும் என்றும் பலருக்கு அவருடைய சாயலும் வெளிப்படும் என்றும் ஒரு உண்மையை அறிந் திடுவோமாக (எசே.1:25) அவ்வமயம் நம் ஜெப வேளைகளில் முழங்காலில் காணப்படும் நாம், தேவனுடைய பிரசன்னத்திலே தளர்ந்து விட்ட நம் செட்டைகளை அடித்து அவரோடு கூட ஆவிக்குள்ளாக எழும்பும் அனுபவத்தை இனியும் காத்திருக்கத் தேவையில்லாமல் அடைந்திடுவோமே. இது எத்தனை அற்புதம் ஆச்சரியம். இவ்விதமான ஆசீர்வாதங்களை அற்புதங்களை நாம் யாவருமாய் இம் மாதத்திலே பெற்றிட தேவன் தாமே கிருபை செய்வாராக ஆமென்           


 சகோ.   பிலிப் ஜெயசிங்,  ஆசிரியர்,  சத்திய வெளிச்சம்